Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1 - உடையார் முதல் பாகம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 099
Regular Price ₹370.00 Special Price ₹350.00

Save: 20.00 Discount: 5.41%

சோழர் வரலாறு சரித்திர நாவல்.
மாமன்னன் இராஜராஜ சோழனின் வரலாறு.
Udayar - Part 1 - History of Cholas

ஹார்ட்கவர்; 
448 பக்கங்கள்; 
முதல் பதிப்பு : மே 2002; 
இருபத்து எட்டாம் பதிப்பு : மார்ச், 2021; 
விசா பப்ளிகேஷன்ஸ்.  

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
                                                               உடையார் முன்னோட்டம்...

அமரர் கல்கி தன்னுடைய 'பொன்னியின் செல்வன்' மூலம் பிற்காலச் சோழர் வரலாற்றை வெகு அழகாய்த் தமிழர்கள் நெஞ்சில் பதிய வைத்தார். அவர் போட்டுக் கொடுத்த மேடையில், அடுத்த எழுத்தாளன் தன் நாடகத்தை அரங்கேற்றுவது எளிதாகிறது.

இந்த நாவலில் இராஜராஜேஸ்வரம் என்கிற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டும் விஷயத்தை நான் மையமாக எடுத்துக் கொள்கிறேன். சோழர் கால வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறேன். இதற்கு ஸ்ரீநீலகண்ட சாஸ்திரியாரும், ஸ்ரீசதாசிவ பண்டாரத்தாரும் எனக்குத் துணை. இவர்கள் தமிழர் நாகரீகத்தைத் தமிழருக்குக் காட்டிய தமிழர்கள்; சரித்திரப் பேராசிரியர்கள்.

இன்றைய தமிழ்நாட்டின் மையம் அன்றைய சோழ மண்டலம். அதைப்பற்றித் தெரிந்து கொள்ளாது தமிழர்கள் இருந்துவிடக்கூடாது. அன்றைய வாழ்க்கை இன்றுபோல் இல்லை. நாம் ஏற்றுக்கொள்ள முடியாத மாறுபாடான விஷயங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். இப்போதையும் விட சாதாரண ஜனங்கள் அதிக நேர்மை, நாணயத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

பலநூறு முறைகள் சோழ மண்ணில் அலைந்து, மனசில் வாங்கிய விஷயங்களெல்லாம் இதில் ஊடாடுகின்றன. தொல்பொருள் துறையில் உள்ள கல்வெட்டு ஆராய்ச்சி நண்பர்கள் பல்வேறு தகவல்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சனகாதி முனிவர்கள் இருவரை, இராஜராஜன், கருவூர் தேவர் என்று சொல்லி வருகிறோம். வலப்பக்கம் சரிந்த கொண்டையும், பெரிய மீசையும், இடுப்பில் துண்டும், கழுத்தில் மணி மாலையும், ஒரு காலை மடித்து உட்கார்ந்தபடியும் இருக்கும் இராஜராஜன் சில படங்களில், சிற்பங்களில் காட்சியளிக்கிறான்.

பிரம்மராயராய் இருக்கலாம் என்ற எண்ணத்தோடு, அடையாளம் தெரியாத ஒரு அழகு ஐம்பொன் சிலை தஞ்சை அருட்காட்சியகத்தில் இருக்கிறது. அவன் பரம்பரையினர் வணங்கிய பெண் தெய்வங்கள் பட்டீஸ்வரத்திலும், தஞ்சாவூரிலும் இன்றும் வழிபாட்டிற்குரியவைகளாய் இருக்கின்றன.

காவிரியின் நீர் வரத்து அன்றும் பிரச்சினை. நாகப்பட்டினத்துப் புயல் காலம் காலமான விஷயம். பெண்ணடிமைத்தனமும், மதச் சண்டையும், முதுகில் குத்துதலும் எல்லா காலங்களிலும் மனிதன் இயல்புகள்.  

இவையெல்லாம் இருப்பினும், இத்தனை உயரம், இத்தனை அகலம், இத்தனை துல்லியமாய்க் கணக்கிட்டு எப்படிக் கட்டினான் அந்தக் கோயிலை? எது உந்துதல்? யார் துணை? எவர் உழைப்பு? ஏது காசு? எவர் நிர்வாகம்? எங்கிருந்த பாறை? எவை வாகனம்? வியந்து வியந்து இவைகளை யோசித்தபோது கிடைத்த நாவல் இது.

தஞ்சை என் மண். இராஜராஜேஸ்வரம் என் கோயில். முன்னொரு காலத்தில் அங்கு நான் வாழ்ந்திருக்கிறேன். அந்த வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறேன்.

அன்று அங்கு என்னோடு இருந்தவரே இன்றும் என்னோடு இருக்கிறார் என்பதாகவும் என் மனம் நினைப்பதுண்டு. இது பிரமை. அல்லது என் மனம் என்னிடம் சொல்லும் பொய். எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சுகமாக இருக்கிறது. பிற்காலச் சோழர் நாகரீகத்தை உணர உணர, மனம் அந்த சரித்திரத்தோடு ஒட்டிக் கொள்கிறது.

இப்படி ஒட்டிக் கொண்டு சோழ தேசத்தைக் கொண்டாடும் ஒரு நண்பர்கள் கூட்டம் எனக்குண்டு. நாங்கள் அடிக்கடி பயணப்பட்டு, மறுபடி மறுபடி அந்த இடங்களை உணர்ந்துவிட்டு வருவோம்.

விழுப்புரம் தாண்டி இடப்பக்கம் திரும்ப, சோழத்தரம் என்கிற கிராமம். அதாவது சேத்தியாத்தோப்பு. உள்ளே நுழையும் போதே மனம் குதூகலிக்கத் துவங்கிவிடும்.

குடந்தைக்கு அருகே உள்ள பழையாறையில் நடக்கும் பொது மனம் கதறும். அமண்குடியைப் பார்க்கும்போது ஒரு கணம் நெஞ்சை அடைக்கும். அது கிருஷ்ணன் ராமனான பிரம்மராயர் கிராமம்.வந்தியத் தேவனின் மாதேவியார் குந்தவைப் பிராட்டியார் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களைப் பார்க்கும்போது கண்கள் சொருகும். தமிழர் நாகரிகம் எவ்வளவு பெரியது என்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள் இருக்கின்றன. அவைகளை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள, இந்த நாவல் ஒரு முகாந்திரம்.

என்னை எழுத்தாளனாக்கிய தஞ்சை பபுன்னை நல்லூர் மாரியம்மன் பொற்பாதத்தில் இந்த நாவல் முயற்சியைச் சமர்ப்பிக்கிறேன், இராஜராஜன் காலத்து வாழ்க்கையை, இன்னும் நெருக்கமாக அவள் எனக்குக் காட்டுவாள். மிகப் பெரிய தொடராய் இதை எழுத எண்ணம் பூண்டிருக்கிறேன். என் சத்குரு நாதன் திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் துணை.

                                                                                                                                            அன்புடன்,
                                                                                                                                            பாலகுமாரன்.

ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. 

தஞ்சைப் பெரிய கோயில்கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.
More Information
SKU Code TMN B 099
Weight in Kg 0.130000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Udaiyar Muthal Pagam - Udayar Paagam 1 - உடையார் முதல் பாகம்

Similar Category Products