Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சிம்மாசனம் - பாலகுமாரன் - Simmasanam - Balakumaran - Simmaasanam - Simasanam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 068
₹145.00
2 நாவல்கள். 
 
1.சிம்மாசனம்: ஆன்மீக புதினம், ஆன்மீக நாவல், சமய பக்தி சார்ந்த நாவல், குமர குருபரர் புராணம்.
2.நிகும்பலை: குடும்ப நாவல்.
 
காகித அட்டை;
248 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: ஆகஸ்ட், 1998; 
ஐந்தாம் பதிப்பு: ஜனவரி, 2020.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

1.சிம்மாசனம்:
குமர குருபரர் சுவாமிகள் அவரின் கதை. 
 
"நம் மீனாட்சியை ஒவ்வொரு மனிதனும் நெஞ்சில் வந்து புகுமாறு அழைக்க வேண்டும். ஒரு தாய் ஒரு குழந்தையை எத்தனை வாஞ்சையோடு அழைப்பாளோ ... எத்தனை உரிமையோடு அழைப்பாளோ... எப்படி அலுக்காமல்  அழைப்பாளோ... அத்தனை அக்கறையோடு இறையை நாம் அழைக்க வேண்டும். குமரகுருபரர் சொன்னது மன்னருக்குப் புரிந்தது. 
 
"இந்தத் தூணில் இறைவன் இருக்கிறானா என்று இரணியன் இழிவு செய்தான். ஒரு சிறு பாலகனிடம் இடுப்பில் கைவைத்து கர்ஜித்தான். பாலகன் இருக்கிறான் என்று சொன்னதும் இல்லை என்று தூணை உடைத்தான். அணுவைப் பிளந்தது போல செக்கச் செவேலென்று சிங்கம் வெளிவந்தது."  
 
புத்தக விமர்சனம்: 
"சிம்மாசனத்தில், கவிராயர், அந்தணரிடம் புரியும் விவாதம் கண்டு மலைத்துப் போனேன். இது வக்காலத்து அல்ல. இது உண்மை. எனவே மூடிவைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் ஜாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உண்மை பேச வேண்டும் என்றால்... பாலகுமாரன், அது அத்தனையையும் கடந்தவர்களால் மட்டுமே செய்யமுடியும். அது உன்னால் முடிந்திருக்கிறது. உனது தாடியும், திருநீறும், சந்தன குங்குமப் பொட்டும் உருவகப்படுத்தும் பாலகுமாரன் வேறு. 
 
உன்னுள் இருக்கும் பாலகுமாரன் வேறு என்பது புலப்படுகிறது. உன் ஆணித்தரமான எழுத்தில் தோற்றத்தைக் கண்டு வணங்குபவர்கள், தோற்றத்தை வைத்து உன்னை வெறுப்பவர்கள் இரு சாராரையும் தள்ளி வைத்து, நீ - நீயாகவே உலவி வருவது உன் கண்களை உற்று நோக்குவோருக்குப் புரியும்.
 
அது சரி, பாலகுமாரன் அவர்களுக்கு என ஆரம்பித்த கடிதம் எப்போது நீ என்று ஒருமைக்குத் தாவியது?
 
இந்த வகை ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நட்பு தந்த பலம் அது. அதற்கு ஒருமையும், பன்மையும் ஒன்றுதான்.
 
காதல் - காமம் - நட்பு இவை புரியாத அல்லது தெரியாத மனிதர்கள் (மனிதர்கள் எனச் சொல்லலாமா? ) பலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக, நட்பைப் பற்றி ஒரு புதினம் எழுதேன்.
 
அன்புடன் 
மலர்க்கொடி சுகுமாரன்.
 
பி.கு.: நல்ல நட்பு என்று நான் எழுதவில்லை. காரணம், நல்லது அல்லாதது எப்படி நட்பாக இருக்க முடியும்?
 
2.நிகும்பலை: 
மங்கையற்கரசி கண்களை மூடிக்கொண்டே படுக்கையின் வலப்பக்கம் தடவி டார்ச் கண்டுபிடித்தாள். உலோகத்தால் ஆனா டார்ச் ஏ.ஸி. குளிரில் சில்லென்று இருந்தது. குமிழியைப் பொருத்தி விநாயகர் படம் தேடி அதில் நிறுத்தினாள்.
 
இவர்களை ஆந்திரப் பத்திரிகைகள் நக்சலைட் என்று அழைத்தன. அந்த நக்சலைட்டுகள் கவரப்பள்ளியை அடைந்தபோது மக்கள் குலவையிட்டு வரவேற்றார்கள்.
 
ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

More Information
SKU Code TMN B 068
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:சிம்மாசனம் - பாலகுமாரன் - Simmasanam - Balakumaran - Simmaasanam - Simasanam

Similar Category Products