Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நோம் சோம்ஸ்கி - சு. இராசாராம் - Noam Chomsky - S.Irasaram - Avram Noam Chomsky - S.Rajaram

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 062
₹490.00

மொழியியல்/ இலக்கணம்.

காகித உறை/ பேப்பர்பேக்;

432 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம், உளவியல், சமூகவியல், மொழியியல், கணினியியல், அரசியல் விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். அவரைப் பற்றியும், ஒரு மாமனிதராக உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது. ஐம்பதுகளில் நடந்த மொழியியல் போர்களும், தாமஸ் கூனின் வார்த்தைகளில் கூறினால் சோம்ஸ்கிய மொழியியல் என்னும் அறிவியல் புரட்சியும், சோம்ஸ்கிய மொழியியல் கோட்பாட்டுக் கருத்தியல்கள் பற்றிய விரிவான விளக்கங்களும், விமர்சனங்களை உள்வாங்கி மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் அவரின் இலக்கணக் கோட்பாட்டு முன்மாதிரிகளின் வரிசையும் இந்நூலின் ஆறு அத்தியாயங்களின் உள்ளடக்கம். தம் சமகாலச் சமூக, அரசியல் பிரச்சனைகளுக்குக் கூருணர்ச்சிமிக்க அரசியல் விஞ்ஞானியாய்க் கொள்கை மறுப்பாளராகவும், அறப் போராளியாகவும் சோம்ஸ்கி விஸ்வரூபம் எடுக்கும் தளங்கள் இந்நூலின் இறுதிப்பகுதி. மொழியியல் அறிஞராக ஒற்றைப் பரிமாணத்தில் அறியப்படும் சோம்ஸ்கியின் பன்முகத்தை இந்நூல் முழுமையாகக் காட்டுகிறது. 

ஆசிரியர் குறித்து: சு. இராசாராம் (பி. 1942) இராசாராம் நாகர்கோவிலில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் டாக்டர் பட்டம் பெற்று மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள் பள்ளியிலும் பணியாற்றிப் பேராசிரியராக நிறைவு பெற்றவர். கோட்பாட்டு மொழியியல், கல்வி மொழியியல், தமிழ் மரபிலக் கணங்கள் ஆகியவற்றில் ஆய்வுத் திட்டங்கள் மேற்கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, இலக்கணவியல் என்பன மரபிலக்கண ஆய்வின் முன்னோடி நூல்கள். இணையவழிச் செவ்வியல் இலக்கியம், செவ்வியல் இலக்கணக் கலைச்சொல் இணையக் களஞ்சியம் முதலிய ஆய்வுத் திட்டங்களில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

More Information
SKU Code Kch B 062
Weight in Kg 0.890000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788194395690
Author Name சு. இராசாராம் - S. Irasaram
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:நோம் சோம்ஸ்கி - சு. இராசாராம் - Noam Chomsky - S.Irasaram - Avram Noam Chomsky - S.Rajaram

Similar Category Products





Other Books by சு. இராசாராம் - S. Irasaram