Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

RAISING DISEASE FREE KIDS - Tamil - உடல் ஆரோக்கிய நூல் வரிசை - ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 2101
₹175.00
Language: Tamil No. of Paper: 200 Binding : Paperback ISBN: 9789385492297 Publishing Year: 2015

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

எளிமையானது; 
சுருக்கமானது; 
பாரபட்சமற்றது. 

உங்கள் குழந்தைகளை நோய் எதுவும் அண்டாதபடி பார்த்துக் கொள்வது சாத்தியம்தான்!

இன்று உங்கள் குழந்தைகள் எந்த வகையான உணவுகளை உட்கொள்கின்றனர்? பீட்சா, பர்கர், சிப்ஸ் போன்ற துரித உணவுகள், வேதிப்பொருட்களில் தோய்க்கப்பட்டுள்ள தாவர வகைகள், அளவுக்கு அதிகமாக சுத்திகரிக்கப்பட்டு, டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகள், மற்றும் சர்க்கரையிலும் உப்பிலும் எண்ணெயிலும் குளிப்பாட்டப்பட்டுள்ள தின்பண்டங்கள் ஆகியவைதானே? மொத்தத்தில், சத்துக்கள் முழுவதுமாக உறிஞ்சிப்பட்டுள்ள உணவுச் சக்கைகளைத்தான் அவர்கள் உட்கொண்டு வளர்கின்றனர். உண்மையில் சில துரித உணவுகளை நாய்கள்கூட முகர்ந்து பார்த்துவிட்டு, 'சீ ! போ !' என்று சாப்பிடாமல் போய்விடுகின்றன.ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகளை நம் குழந்தைகள் இனி உணவு அருங்காட்சியகங்களில்தான் பார்ப்பார்கள் !

இருந்த இடத்தைவிட்டு அசையாமல், எப்போதும் ஏதோ ஒரு மின்திரையில் மூழ்கிக் கிடைக்கும் அவர்களுடைய வாழ்க்கைமுறையும் இதோடு சேர்ந்து கொள்ளும்போது, உங்களுடைய பொக்கிஷமான குழந்தைகளை உணவு தொடர்பான நோய்கள் சூழ்ந்து கொள்வதில் வியப்பேதும் இல்லை. இப்போது குழந்தைகளுக்கு எமனாக வந்திருக்கும் நீரிழிவு னாய், அளவுக்கதிகமான உடல் பருமன், இதயநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை அனைத்தும் கிருமிகளால் வருவதில்லை, மாறாக, தவறான உணவுப்பழக்கங்களாலும் வாழ்க்கைமுறையாலும்தான் வருகின்றன.   

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோய்கள் எதுவும் திடீரென்று முளைத்துவிடுவதில்லை. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களையும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையையும் சிறு வயதிலிருந்தே உங்கள் குழந்தைகளிடத்தில் நீங்கள் உருவாக்கி வந்தால் மட்டுமே இத்தகைய நோய்களைத் தடுக்க முடியும். முன்பு குறிப்பிடப்பட்டுள்ள நோய்கள் நமக்கு வந்துவிட்டால் அவற்றோடு எவ்வாறு குடும்பம் நடத்துவது என்பதை மட்டுமே நவீன மருத்துவம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது. அவற்றை குணமாக்கும் விதை அதற்குத் தெரியாது. அதனால் வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.

முன்பெல்லாம் ஊட்டசத்துக் குறைவால் ஏற்படும் நோய்கள்தான் குழந்தைகளை அதிகமாகத் தாக்கின. இன்று அபரிமிதத்தால் ஏற்படும் நோய்களே அவர்களை அதிகமாகத் தாக்கின. இன்று அபரிமிதத்தால் ஏற்படும் நோய்களே அவர்களை அதிகமாகத் தாக்குகின்றன. நம் குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு நாம் அவர்களை நாசம் செய்கிறோம். ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுப்பது எந்த அளவு இன்றியமையாதது என்பதை இப்புத்தகம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.                                                                             

நூலாசிரியரைப் பற்றி :  டாக்டர் ப்ரூஸ் மில்லர் 

டாக்டர் ப்ரூஸ் மில்லர்  தனது முதுநிலை டாக்டர் பட்டப்படிப்பின்போது வயதானவர்களின் ஊட்டச்சத்துப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தார்.

ஊட்டச்சத்துக்கள் குறித்து முறையாகப் பயின்ற வல்லுனரான இவர், உலகப் புகழ்பெற்ற மருத்துவ அமைப்புகள் பலவற்றில் உறுப்பினராக இருக்கிறார். இப்போது அவர் அமெரிக்க ஊட்டச்சத்துக் கழகத்தின் இயக்குனராக இருக்கிறார்.

தற்போது அவர் தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள டல்லாஸ் நகரில் வசித்து வருகிறார். அவர்களுக்குத் திருமணமாகி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.                                                              
மொழிபெயர்ப்பாளரைப் பற்றி : குமாரசாமி

இவர் ஒரு கவிஞர். மொழிபெயர்ப்பாளர். சுற்றுச்சூழல் ஆர்வலர். மலையேற்றப் பயிற்சியாளர். புகைப்படம் எடுப்பதில் அலாதி ஆர்வம் உடையவர். ஊர் சுற்றுவதில் ஏக விருப்பமுடையவர்.

தனக்குத் தெரிய வரும் நல்ல விஷயங்களை, அவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதை லட்சியமாகக் கொண்டவர். மொழிபெயர்ப்பின்மீது இவருக்கு நாட்டம் வந்ததற்கு இந்த ஆர்வம்தான் காரணம்.

இவரது முப்பதாண்டுகால மொழிபெயர்ப்பு அனுபவத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், எண்ணற்றக் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் வெளிவந்துள்ளன. இலக்கியம், சுயமுன்னேற்றம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் தொடர்பான நூல்களும் அவற்றில் அடங்கும்.

தற்போது இவர் தன் மனைவியுடனும் தன் குழந்தைகள் இருவருடனும் மும்பையில் வசித்து வருகிறார்.
More Information
SKU Code PRK B 2101
Weight in Kg 0.180000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789385492297
Author Name Dr. Bruce Miller. டாக்டர் ப்ரூஸ் மில்லர். தமிழாக்கம்: குமாரசாமி
Publisher Name EMBASSY BOOKS
Write Your Own Review
You're reviewing:RAISING DISEASE FREE KIDS - Tamil - உடல் ஆரோக்கிய நூல் வரிசை - ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க

Similar Category Products

Other Books by Dr. Bruce Miller. டாக்டர் ப்ரூஸ் மில்லர். தமிழாக்கம்: குமாரசாமி