Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Samayal Kalai by Seethalakshmi (35 Varieties, 330 Cooking Tips) சமையல் கலை (35 வகை, 330 சமையல் குறிப்புகள் கொண்ட ஒரே புத்தகம் ) - சீதாலக்ஷ்மி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 231
₹40.00
சமையல் கலை புத்தகம்.
150 பக்கங்கள்;  
மொழி: தமிழ்; 
காகித அட்டை (Paperback); 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font);  
பாரதி பதிப்பகம்.

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சீதாலக்ஷ்மி அவர்கள் வழங்கும் சமையல் கலை என்ற இப்புத்தகத்தில் 35 வகை சமையல் மற்றும் 330 சமையல் குறிப்புகள் கொண்ட ஒரே புத்தகம். விதவிதமாக சுவையுடன் ஆரோக்கியமாக சமைத்து உணவருந்துங்கள்.

60,000 பிரதிகள் விற்பனையாகிய இப்புத்தகம் 33 வகையான 330 குறிப்புகள் கொண்ட மலிவுப்பதிப்பு ஆகும்.

சமையல் கலை - 330 சமையல் குறிப்புகள் கொண்ட ஒரே புத்தகம் - சீதாலக்ஷ்மி. 

பதிப்புரை:- 

மனிதன் தோன்றிய நாள் முதல் அபிவிருத்தியடைந்து வருவதும், தீமையற்றதும், மனித சமூகத்திற்கு நன்மையை அளிப்பதும் சமையல் கலைதான். இக்கலையைப் பெண்களுடன் ஆண்களும் கற்காலம். அதனால் சுவையானதாகவும், விருப்பம் போன்றும், தாமே உணவுப் பொருள்களைத் தயாரித்து உண்ணலாம். ஆர்வமும் ரசிகத்தன்மையும் உள்ள ஒவ்வொருவரும் இக்கலையில் தேர்ச்சி பெறுவதுடன் இதன் அபிவிருத்திக்கும் உதவலாம்.
 

இப்புத்தகம் சமையல் கலையைக் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும், பல வகை உணவுகளைத் தயாரித்துப் புசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்குத் தூண்டுகோலாகவும் இருக்கும் என்பது உறுதி.

                                                                                                   - பழ. சிதம்பரம் 
                                                                                                   - நிறுவனர், பாரதி பதிப்பகம். 

சமையல் கலை 

சமையல் செய்யும் பொது அடுப்புக்கரி, எண்ணெய் முதலியவை ஆடையில் படலாம். சமையல் செய்யவென்றே தனி ஆடைகளை வைத்திருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அணிந்து கொண்டால் கரி, எண்ணெய் பட்டுப் பாழாகி விடும். சமையல் செய்யும்போது உடுத்தும் ஆடைகளைத் தினமும் இரவு கசக்கிப் போட்டு காய வைத்து உடுத்துவது சிறந்தது. 

சமையலறையிலே சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. வேறு வழியில்லாத போது அப்படிச் செய்யலாம். ஆனால், சாப்பிட தனி அறை இருப்பதே நல்லது. சாப்பிட்ட உடனே சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈ முதலியவை சூழ்ந்து தீமையை விளைவிக்கலாம். 

சமையல் கலையைப் போலவே சாப்பாடு பரிமாறுவதும் ஒரு தனிக்கலை. சாதாரண நாட்களிலேயே அது முக்கியமானது. விஷேச நாட்களிலும் விருந்துகள் நடத்தும்போதும் மிக முக்கியமாகி விடுகிறது. சாப்பிடுவர் முகம் அறிந்து இலை அல்லது தட்டை பார்த்துப் பரிமாற வேண்டும். சிலர் சங்கோசிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சாப்பிட உட்காந்தால் பரிமாறுபவர்தான் கவனிக்க வேண்டும். பரிமாறுபவர் கவனக் குறைவாக இருந்தால் சங்கோசியான சாப்பிடுபவர்கள் அரை வயிறு கூடச் சாப்பிட முடியாது.

சமையல் செய்யும்போது போலவே பரிமாறும் போதும் சுத்தமான ஆடைகளை உடுத்துவது நல்லது. சுத்தமான பாத்திரங்களில் பொருள்களை எடுத்து, கரண்டியினால் பரிமாற வேண்டும். கையால் எடுத்துக் போடக் கூடாது. மேலும் சூடான பொருள்களைக் கையால் எடுப்பது இயலாத காரியம். 

வாழ்க்கைக்கே  முக்கியமான இக்கலைக்கு ஓர் எல்லையே கிடையாது. நாளுக்கு நாள் அது அபிவிருத்தி அடைந்து கொண்டு வருகிறது. புதுப்புது பலகாரங்களும், புதிய தின்பண்டங்களும் தோன்றி இக் கலையை விரிவடையச் செய்து கொண்டே இருக்கிறது. சமையல் கலையைக் கற்கும் ஒவ்வொருவரும் விஞ்ஞானிகளை போல ஆர்வத்துடன் ரசிக தன்மையுடனும்  ஏதாவது ஒரு புது தின்பண்டத்தையோ, குழம்பு, கறி ஆகியவற்றையோ செய்ய முற்பட வேண்டும். அவர்கள் செய்யும் புதுப் பொருட்கள் அவர்களுக்கு மாத்திரமன்றி, மற்றவர்களுக்கும் பயன்பட்டு, இக்கலைக்கு நல்ல தொண்டு செய்தது போலவும் இருக்கும்.  

பொருளடக்கம் 

எண்                    சமையல் கலையும் சமையலறையும்     8 

1.      சாதம்    13
1.      பச்சரிசி 
2.      புழுங்கல் அரிசி 
3.      கோதுமைச் சாதம்  

2. சாதத்தில் பலகாரங்கள்    14         (சித்திரான்னங்கள்)
1.      பொங்கல் 
2.      கல்யாணப் பொங்கல் 
3.      சக்கரைப் பொங்கல் 
4.      மறறொரு வகை 
5.      புளியஞ் சாதம் (புளியோதரை)
6.      எலுமிச்சம்பழ சாதம் 
7.      எள்ளுச் சாதம் 
8.      தேங்காய்ச் சாதம் 
9.      வாங்கிபாத் 
10.   கதம்பம் 
11.   தயிர்சாதம் 
12.   பிரிஞ்சி (காய்கறிப் புலவு) 

3. பருப்பு         22
மற்றொரு வகை  

4. பச்சடிகள்     23
1. தயிர்ப் பச்சடி 
2. வெள்ளரிக்காய்ப் பச்சடி 
3. தக்காளிப் பச்சடி 
4. கத்திரிக்காய் வாழைக்காய்ப் பச்சடி 
5. இஞ்சிப் பச்சடி 
6. வாழைத்தண்டுப் பச்சடி
7. டாங்கர் பச்சடி 
8. நெல்லிக்காய்ப் பச்சடி 
9. விளங்காய்ப் பச்சடி 
10. மாம்பழப் பச்சடி 
11. விளாம்பழப் பச்சடி 
12. வேப்பம்பூப் பச்சடி 
13. மற்றொரு வகை 
14. மலையாளப் பச்சடி  

5. கறிகள்                                       26
சாதாரணக் கறி 
1.      உருளைக்கிழங்குப் பொடிமாஸ் 
2.      மசாலா 
3.      கத்திரிக்காய் மசாலா 
4.      எண்ணெய்க் கத்திரிக்காய்
5.      பூசணிக்காய் வாழைத்தண்டு 
6.      சேப்பங்கிழங்கு 
7.      அரைத்துக் கிளறிய கறி 
8.      வாழைக்காய் பொடிமாஸ்
9.      பாகற்காய் வறுத்த கறி  

6. கூட்டு                                   32
1.      பொரித்த கூட்டு 
2.      புளிக்கூட்டு 
3.      பறங்கிக்காய் கூட்டு  

7. மசியல்                                     33
1.      கருணைக் கிழங்கு 
2.      கீரை
3.      புளிக்கீரை
4.      துவட்டல்
5.      அவியல்

8.குழம்பு                                             35
1.      சாதாரணக் குழம்பு
2.      காய்க் குழம்பு
3.      வெந்தயக் குழம்பு 
4.      சுண்டைக்காய் வற்றல் குழம்பு
5.      மணத்தக்காளி வற்றல் குழம்பு
6.      கத்திரிக்காய் வற்றல் குழம்பு
7.      கிள்ளு மிளகாய்க் குழம்பு
8.      மோர்க் குழம்பு
9.      பச்சை மோர்க் குழம்பு
10.   கறிவேப்பிலைக் குழம்பு 
11.   மிளகுக் குழம்பு 
12.   மாங்கொட்டை குழம்பு
13.   குருமாக் குழம்பு
14.   கத்திரிக்காய் ரசவாங்கி
15.   பாகற்காய் பிட்டலை
16.   சாம்பார்
17.   கொத்துமல்லி சாம்பார்  

9. ரசம்                                43
1.      சாதா ரசம்
2.      பருப்பு ரசம் 
3.      தக்காளி ரசம் 
4.      எலுமிச்சம்பழ ரசம்
5.      மிளகு ரசம்
6.      பூண்டு ரசம்
7.      மைசூர் ரசம்
8.      வேப்பம்பூ ரசம்
9.      பருப்பு உருண்டை ரசம்
10.   கிள்ளு மிளகாய் ரசம் 

10. துவையல்                        46
1.      பருப்புத் துவையல்
2.      தேங்காய்த் துவையல்
3.      புளித் துவையல்
4.      கத்திரிக்காய்த் துவையல்
5.      கறிவேப்பிலைத் துவையல்
6.      கொத்துமல்லித் துவையல்
7.      வெங்காயத் துவையல்
8.      எள்ளுத் துவையல்
9.      கோங்குராத் துவையல் (புளிச்சக் கீரை)
10.   பச்சைத் துவையல்
11.   சட்டினி
12.   பாம்பே சட்டினி
13.   மாங்காய்ச் சட்டினி
14.   புதினாச் சட்டினி 

11. வறுவல்                            50
1.      சேப்பங்கிழங்கு வறுவல் 

12. பலகாரங்கள்                     51
1.      இட்லி
2.      காஞ்சிபுரம் இட்லி
3.      ரவா இட்லி
4.      சேமியா இட்லி
5.      வெல்ல இட்லி 

13. தோசை                              53
1.      கல் தோசை
2.      மற்றொரு வகை
3.      ரவா தோசை
4.      வெங்காயத் தோசை
5.      மைதா தோசை
6.      கோதுமை தோசை
7.      மசாலாத் தோசை
8.      ராகி தோசை 

14. அடை                                 56
1.      சாதா அடை
2.      தேங்காய் அடை
3.      வாழைப்பூ அடை
4.      பருப்பு அடை 
5.      பயத்தம் பருப்பு அடை
6.      தவலை அடை
7.      வெல்ல அடை 

15. ஊத்தப்பம்                           59

16. ஆப்பம்                               59

17. உப்புமா                              60
1.      ரவா உப்புமா
2.      சேமியா உப்புமா
3.      அரிசி உப்புமா
4.      மற்றொரு வகை
5.      புளி உப்புமா
6.      மோர்க் களி (மோர் உப்புமா)
7.      மைசூர் உப்புமா
8.      பட்டாணி பாத்
9.      பம்பாய் கட்லெட் 

18. ரொட்டி                              63
1.      சப்பாத்தி
2.      பூரி 

19. கொழுக்கட்டை             65
1.      வெல்ல கொழுக்கட்டை
2.      இனிப்பு பூர்ணக் கொழுக்கட்டை
3.      காரக் கொழுக்கட்டை
4.      பால் கொழுக்கட்டை 

20. புட்டு                                   67

21. சேவை                                 68

                     இனிப்புச் சேவை 

22. கார பட்சணங்கள்                 69
1.      கை முறுக்கு
2.      சீடை
3.      வெல்லச் சீடை
4.      தேன் குழல்
5.      மற்றொரு வகை
6.      ஓமப் பொடி
7.      காராச் சேவ்
8.      காரா பூந்தி
9.      பிக்கா சேவ்
10.   பஜ்ஜி
11.   மெது பக்கவடாம்
12.   கரம் பக்கவடாம்
13.   வெங்காயப் பக்கவடாம்
14.   பட்டர் மிக்சர்
15.   மிக்சர்
16.   பம்பாய் மிக்சர்
17.   காரத் துக்கடா
18.   கார சோமாசி
19.   வெஜிடபிள் சோமாசி
20.   மசாலா கட்லெட்
21.   வடை
22.   உளுந்து வடை
23.   வெங்காய வடை
24.   மிளகு வடை
25.   கடலைப் பருப்பு வடை
26.   மசால் வடை
27.   ஆம வடை
28.   தயிர் வடை
29.   ரச வடை
30.   போண்டா
31.   மசாலா போண்டா
32.   வெஜிடபிள் போண்டா
33.   உருளைக்கிழங்கு போண்டா
34.   தயிர் போண்டா
35.   மங்களூர் போண்டா
36.   முந்திரிப் பருப்பு
37.   உப்பல் வடை
38.   குணுக்கு
39.   பருப்பு காரம்
40.   வறுத்த அவல்
41.   ஓட்டை வடை
42.   வெள்ளை பணியாரம்
43.   மசாலாப் பணியாரம்
44.   குழிப்பணியாரம்
45.   சீப்புச் சீடை 

23. இனிப்புப் பட்சணங்கள்                     86
1.      கேசரி
2.      அப்பம்
3.      ரவா அப்பம்
4.      சுழியன்
5.      மற்றொரு வகை
6.      சொஜ்ஜி அப்பம்
7.      பால் பேணி
8.      ஜீரா பூரி
9.      தித்திப்பு சேவ்
10.   பிஸ்கெட்
11.   சோமாசி
12.   மற்றொரு வகை
13.   சூரத்காரி
14.   டில்லி தர்பார்
15.   பாதுஷா
16.   கச்சூர்
17.   நுக்கல் 
18.   மைசூர்பாகு
19.   பர்பி
20.   அதிரசம்
21.   போளி
22.   ஜாங்கிரி
23.   ஜிலேபி
24.   ரசகுல்லா
25.   குலாப் ஜாமுன்
26.   கோதுமை அல்வா
27.   பாதம் அல்வா
28.   குழந்தை அல்வா
29.   காசி அல்வா
30.   காரட் அல்வா
31.   பம்பாய் பாதாம் அல்வா
32.   பால்கோவா
33.   திரட்டுப்பால்
34.   தூத்பேடா 
35.   குஞ்சா லாடு 
36.   ரவா லாடு 
37.   கடலை உருண்டை 
38.   எள்ளுருண்டை 
39.   தேன்குழல் உருண்டை 
40.   பொரி உருண்டை 
41.   பொரிவிளங்காய் உருண்டை 
42.   பாசந்தி
43.   கேசரி கேக் 
44.   பால் பணியாரம் 
45.   மாவுருண்டை 
46.   கருப்பட்டிப் பணியாரம் 
47.   ஐந்தரிசிப் பணியாரம் 
48.   அத்திக்காப் பட்சணம் 
49.   மனஹோலம்
50.   கும்மாயம் ( ஆடிக்கூழ் )
51.   பாசிப்பருப்பு பணியாரம் 
52.   கல்கண்டு வடை 
53.   கலகலா

24. ரொட்டி, பன், பிஸ்கோத்து, கேக்                                                              107                                    
ரொட்டி
மற்றொரு முறை
பன்
பிஸ்கோத்து 
தேங்காய் பிஸ்கோத்து 
ஜெம் பிஸ்கோத்து 
பட்டர் பிஸ்கோத்து 
ஆரோரூட் பிஸ்கோத்து 
ரஸ்க்
கேக் 

25. ஜாம் ஜெல்லி                                                                                                    112
1.      திராக்ஷைப்பழ  ஜாம் 
2.      தக்காளி ஜாம் 
3.      பலாப்பழ ஜாம் 
4.      அன்னாசிப்பழ ஜாம் 
5.      மாங்காய் ஜாம் 
6.      மாம்பழ ஜாம் 
7.      ஆப்பிள் ஜெல்லி 
8.      ஆரஞ்சு ஜெல்லி 

       26. ஊறுகாய்                                                                                            
1.      கிச்சலிக்காய்
2.      உப்பு எலுமிச்சங்காய் 
3.      பச்சை மிளகு ஊறுகாய்
4.      வெங்காய ஊறுகாய்
5.      மாங்காய் இஞ்சி ஊறுகாய் 
6.      காரட் ஊறுகாய் 
7.      அவசர மாங்காய் ஊறுகாய் 
8.      பச்சை மிளகாய் ஊறுகாய் 
9.      எலுமிச்சங்காய் ஊறுகாய் 
10.   கிடாரங்காய் ஊறுகாய் 
11.   மாங்காய் ஊறுகாய் 
12.   வெந்தய மாங்காய்
13.   வடுமாங்காய்
14.   ஆவக்காய் ஊறுகாய் 
15.   நெல்லிக்காய் ஊறுகாய் 
16.   நீர் நெல்லிக்காய் 
17.   வெஜிடெபிள் ஊறுகாய் 

27. தொக்கு                                                                                                     122 
தக்காளித் தொக்கு
கொத்துமல்லித் தொக்கு 
மாங்காய்த் தொக்கு 
எலுமிச்சங்காய்த் தொக்கு 
நெல்லிக்காய்த் தொக்கு 
புளியங்காய் தொக்கு 
களாக்காய்த் தொக்கு 
மாங்காய் இஞ்சித் தொக்கு 

28. பொடி                                                                                                                                  125
பச்சை மிளகாய்ப் பொடி 
குழம்பு, சாம்பார் பொடி
ரசப் பொடி
கறிப் பொடி
பருப்புப் பொடி
கொத்துமல்லிப் பொடி
கறிவேப்பிலைப் பொடி
நார்த்தை இலை பொடி
எள்ளு பொடி
தனியாப் பொடி
கசகசாப் பொடி
தேங்காய் பொடி

29.அப்பளம்                                                                                                                                129
 உளுந்து அப்பளம், அப்பளப்பூ 
அரிசி அப்பளம் 
கார அப்பளம் 
பயறு அப்பளம் 
கோதுமை அப்பளம்  

30. வடகம்                                                                                                                                   133
இலை வடகம்
அரிசி வடகம் 
கூழ் வடகம் 
ஜவ்வரிசி வடகம் 
பிரண்டை வடகம் 
குழம்பு வடகம் 
ரவா வடகம் 
பூசணிக்காய் வடகம்  

31. வற்றல்                                                                                                                                    137
கொத்தவரங்காய் வற்றல் 
அவரைக்காய் வற்றல்
மற்றொரு வகை 
வெண்டைக்காய் வற்றல்
கத்திரிக்காய் வற்றல்
பாகற்காய் வற்றல்
மணத்தக்காளி வற்றல்
சுண்டைக்காய் வற்றல்
மிளகாய் வற்றல்
வேப்பம்பூ வற்றல்
சுக்காங்காய் வற்றல் 

32. பாயசம்                                                              140
ஜவ்வரிசிப் பாயசம் 
ரவைப் பாயசம் 
சேமியாப் பாயசம் 
சாதாப் பாயசம் 
அக்கார வடிசல் 
அவல் பாயசம் 
அரிசிப் பாயசம் 
பால் பாயசம் 
பயத்தம் பருப்பு பாயசம் 

33. கஞ்சி                                                                  142
அரிசிக் கஞ்சி
நோயாளிகளுக்கான கஞ்சி 
ஜவ்வரிசிக் கஞ்சி 
பார்லிக் கஞ்சி 
கோதுமைக் கஞ்சி 
ஆரோரூட் கஞ்சி 
புனர் பாகம் 

34. சூடான பானங்கள்                                              144
காபி
கொத்துமல்லி காபி
சுக்கு காபி
தேநீர்
மற்றொரு வகை 
ஓவல்டின் 
கோகோ 
மைலோ
போர்ன்விட்டா

35. குளிர்ந்த பானங்கள்                                            147
ஆரஞ்சு கிரஷ்
லைம் கிரஷ்
மில்க் சர்பத் 
பாதாம்கீர் 
பானகம் 
நீர்மோர்
சர்பத் 
ஐஸ்கிரீம் 
புரூட் சாலட் 
பஞ்சாமிர்தம் 
More Information
SKU Code Bharti B 231
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Seethalakshmi சீதாலக்ஷ்மி
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Samayal Kalai by Seethalakshmi (35 Varieties, 330 Cooking Tips) சமையல் கலை (35 வகை, 330 சமையல் குறிப்புகள் கொண்ட ஒரே புத்தகம் ) - சீதாலக்ஷ்மி

Similar Category Products