சுவையான இயற்கை உணவு வெரைட்டீஸ் - தி.அ. கிருஷ்ணன் Suvaiyaana Iyarkai Unavu Varieties by T.A.Krishnan
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
சுவையான இயற்கை உணவு வெரைட்டீஸ்
ஆரோக்கிய இயற்கை உணவு முறைகள்
யோகி தி.ஆ. கிருஷ்ணன் D.Y.T., N.D., I.M.P., Ph.D.,
உயிர் வாழ உண்ணுவோம்
உண்ணுவதற்காக உயிர் வாழ்வதைத் தவிர்ப்போம்..
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
என்பது திருவள்ளுவர் வாக்கு.
அவர் என்ன சொல்கிறார் என்றால் உண்ணும் உணவு நம் உடலுக்குப் பயன் தருவதாக அமைவது அவசியம். அதற்கு அந்த உணவு நமக்கு உகந்ததாகவும் நல்லவையாகவும் இருந்தால்தான் உண்ட உணவு செரித்து உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள் கிடைக்கப்பெற்று அதன்மூலம் உடலுறுப்புகள் முறையாக இயங்கி, கழிவுகள் வெளியேறி உடல் நலமுடன் இருக்கும்.
ஆகவே நம்மில் பலர் எதை வேண்டுமானாலும் உண்ணுவது என்ற வழக்கத்தைக் கைவிட்டு முறையான உணவை உண்டு நலமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்நூலைத் தந்திருக்கிறார் யோகி தி.ஆ.கிருஷ்ணன்.
அவர் கடந்த 30 ஆண்டு காலமாக தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை மட்டுமே உணவாக உண்டு வாழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.
- பதிப்பகத்தார்.
முன்னுரை:-
உணவில் பல்வேறு வகைகள் இருந்தாலும் மனிதர்களுக்கு எளிதில் ஜீரணமாகி உடலோடு ஒத்துப்போகும் தன்மையானது இயற்கை வகை உணவுகளே! இயற்கை உணவென்பது இயற்கையின் விதிப்படி சூரியனின் உதவியால் பயிர் பச்சைகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் கிடைக்கக்கூடிய முதல் ரகம் உயர்ந்த கனிகள். இரண்டாவது தானியங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவை பூமிக்கு கிழே விளையும் கிழங்குகள் கடைத்தரமானவையே. இவ்வைகையில் பார்க்கப்போனால் முதல் தரம் பழங்களே. இதை மனிதனுக்கு உகந்த உணவு என்றே கூறலாம். அதிலும் தரையில் இருந்து அதிக உயரமான, வானளாவிய உயரத்தில் காய்க்கும் கனிகளே மிகச் சிறந்த உணவு. உதாரணம், தேங்காய் (தெங்கம் பழம்), நெல்லிக்கனி, மாம்பழம், பலாப்பழம் பிறகு சற்றுக் குறைவான உயரத்தில் கிடைக்கும் சாத்துக்குடி, சப்போட்டா, பப்பாளி, நாரத்தை, எலுமிச்சை, மாதுளை, கொய்யா, அடுத்து தானியங்கள், பயறு வகைகள், எள்ளு, கொள்ளு, துவரை, கம்பு, கேழ்வரகு, சோளம், கடலை, கொண்டைக் கடலை இவைகளெல்லாம் மாவுச் சத்துள்ள புரோட்டீன் உணவுகள். இவற்றை பறவை உணவுகள் என்று சொல்லலாம். பல நூற்றாண்டுகளாக நாம் இவைகளைச் சாப்பிட்ட பழக்கத்தினால் ஓரளவே இவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும். இவைகளை அவல் போல தயாரித்து சாப்பிடலாம். மேலும், அந்தந்த தானியங்களின் முளைவிடும் காலம் தெரிந்து, எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பிறகு துணியில் கட்டி மறுநாளோ அல்லது 36 மணி நேரம் கழித்தோ முளைகட்டிய தானியங்களாக எடுத்துக் கொள்வது மிகச் சிறந்த முறை. (எந்த ஒரு தானியமும் தானியமாக நேரே எடுத்துக்கொள்வதைவிட முளைகட்டி பயன்படுத்தினால் முன்னூறு பங்கு அதிக சத்து கிடைக்கும் என்று சொல்கின்றனர்) ஆனாலும், இதைப் போன்ற தானிய வகை உணவுகளை ஒரு நாளைக்கு 50 கிராம் வரை தான் சாப்பிடலாம் என்றும் அல்லோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர். அவரவர் உழைப்பைப் பொறுத்து இதுவும் அளவுக்கு மிஞ்சினால் தொல்லைதர வாய்ப்புண்டு.
அடுத்து கீரை வகைகள், பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, அகத்திக் கீரை, கரிசிலாங்கண்ணி, வல்லாரை, மணத்தக்காளி, முசுமுசுக்கை, முள்ளங்கி, தூதுவளை, காசி கீரை, காசினி கீரை, பொன்னாங்கன்னி, இம்புறா கீரை, ஆலாக் கீரை, வெந்தயக்கீரை இவைகளை கால்நடைகளின் உணவு என்றும் கூறலாம். ஆனாலும், நமக்கு குளோரோபில் (பச்சையம்) தேவைப்படுவதாலும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்துக்கள் இவற்றில் நிறைய கிடைப்பதாலும் இவைகளை தொடர்ந்து நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நீராவியில் அவித்து சாப்பிட வேண்டி வரும். குக்கரில் தண்ணீர் குறைவாக வைத்து கீரைகளை நீராவியில் வேக விட்டு அதில் தேங்காய்த் துருவல், பயத்தம் பருப்பு விரவி சாப்பிடலாம். அல்லது நீர் அதிகம் சேர்த்து சூப்பராகவும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை விருத்தி செய்ய மூலிகை வடிவிலுள்ள மருந்தாகவும் உணவாகவும் ஆகக்கூடிய வல்லாரை, தூதுவளை, முருங்கை, அகத்தி இவைகளை சேர்ப்பது அவசியமாகிறது. அவரவர்கள் நோய்க்கு, தேவைக்கு தக்கவாறு சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இம்மாதிரியான கீரைகளை நிழலோட்டமாக காய வைத்து தூளாக்கியும் (பவுடராக்கியும்) தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளில் முதலில் இஞ்சி, கேரட், முள்ளங்கி, கருணைக் கிழங்கு இவைகள் மருத்துவ குணம் உடையவை. இவற்றை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு இவைகளை அதிகம் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், பூமிக்கடியில் விளையக்கூடிய ஒரே எண்ணெய்ப் பொருள் வேர்க்கடலை தான். இதை மிகக் குறைவாக உண்ண வேண்டும். இம்மாதிரி இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுத்து தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்வதுடன் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம் இருக்குமாறு உணவினை தேர்ந்தெடுத்துக் கொள்வது மிகச் சிறந்த ஆரோக்கிய வழியாகும்.
இயற்கை உணவு முறை என்று சொல்லும்பொது காரத்திற்காக பச்சைமிளகாய் பிரட் வெண்ணெய், எண்ணெய், பாலாடைக்கட்டிகள், சாதா உப்பு அல்லது அயோடின் சேர்ந்த உப்பு போன்றவற்றை பயன்படுத்துவது இல்லை. ஆனாலும், தற்காலச் சூழ்நிலையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்துப்பைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று நான் சொன்னால் பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளிலேயே மட்டும் இந்துப்பு கிடைக்கும் என்பதால் எல்லோராலும் வாங்க முடியாது. அதேபோல வெளிநாடுகளில் வாழும் பலருக்கு அங்குள்ள சூழ்நிலையில் முழுக்க முழுக்க இயற்கை உணவை கடைப்பிடிப்பதும் சற்றுக் கடினமானதாகும். என்? இயலாத விஷயமே என்றும் சொல்லலாம். ஆகவே எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய பிரட், சீஸ், கிரீம் போன்றவற்றை உண்ணும் உணவின் சுவையைக் கருதியும் இப்புத்தகத்தில் சேர்த்து எழுதியுள்ளேன். இருப்பினும் வாசகர்கள் ஒன்றை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். கிரீம், வெண்ணெய், சீஸ், உலர் திராட்சை போன்ற பொருட்கள் கலோரி அதிகமானவை. இப்பொருட்களை முடிந்த அளவு குறைத்து உண்பதே உடலுக்கு நன்மை அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசகர்கள் இப்புத்தகத்தை படித்து இயற்கை உணவுகளை உண்டு நலம் பெற வாழ்த்துகிறேன்.
யோகி தி.ஆ.கிருஷ்ணன்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
வாசகர்களுக்கு…
நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உடலுக்குப் போகிறது. மற்ற இரண்டு பாகங்களும் டாக்டரை போஷிக்கிறது
(One third of what we eat goes to nourish our system and two thirds goes to nourish the doctors) அதிகமாச் சாப்பிடும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு விஷமாக மாறி உடலில் ஆங்காங்கே தங்கி வியாதியை உண்டு பண்ணுகிறது. அடுப்பில் சமைத்த உணவில் கொழுப்பு வெளிவந்து விடுவதால் அந்தக் கொழுப்புதான் முதலில் வாய்க்குள் நுழைகிறது. உமிழ்நீர் அந்தக் கொழுப்பை ஜீரணிக்க முடியாததாகையால் கொழுப்பு ஜீரணமாகாமல் உடம்பில் ஆங்காங்கே தங்கி தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். புரோட்டீனும் ஜீரணிக்கப்படாமல் உள்ளே நுழைகிறது. இதைத்தான் கொலஸ்ட்ரால் என்கிறோம். கணைய நீரால் செரிமானம் அடைய முடிகிறது. தேங்காயைப் பச்சையாக எவ்வளவு தின்றாலும் கொழுப்பு உங்களை அண்டாது. அதை அடுப்பிலிட்டு வேக வைத்தால் மட்டுமே கொழுப்பு சேரும். அதேபோல டால்டாவை ஜீரணிக்க வைக்கும் என்சைம் உடலில் எங்கேயும் கிடையாது. மேலும் சக்கரை (சீனி) தானாகவும் ஜீரணமடையாது. அதோடு சேர்ந்த உணவையும் ஜீரணிக்கவிடாது. ஆலைகளில் சீனியைச் சுத்தப்படுத்த 21 கெமிக்கல்களைச் சேர்க்கின்றனர். இது உடலுக்கு தீமையே. எனவே சீனிக்கு பதிலாக தேன், கருப்பட்டி, பனைவெல்லம் இவைகளைப் பயன்படுத்தலாம். உடலில் தேவையற்ற சதையை வளர்க்காமல், கொலஸ்ட்ரால் நம்மை அண்டி நம் உயிரைக் குடிக்காமல் தடுக்க ஏராளமான இயற்கை உணவுகள் உள்ளன. அடுப்பில் சமைக்காத இயற்கை உணவுகள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம். படித்து பயன்பெற்று நீண்ட ஆயுள் பெற வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.
- பதிப்பகத்தார்
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
017. முளைவிட்ட வெள்ளை கொண்டைக் கடலை 31;
018. அவல் அவியல் 32;
019. இனிப்பு அவல் 33;
020. எலுமிச்சை அவல் 34;
021. தேங்காய்ப் பால் அவல் 35;
022. தயிர் அவல் 36;
023. உலர் அவல் கலவை 37;
024. கீரை கிச்சடி 38;
025. கோதுமை கோலா 39;
026. குக்கும்பர் கோசம்பரி 40;
027. கம்புப் புட்டு 41;
028. காரப் பொரி 42;
029. அவல் புட்டு 43;
030. பாசி பருப்புப் புட்டு 44;
031. சைனீஸ் வெஜிடபிள் 45;
032. தேங்காய் மிக்ஸ் 46;
033. வெஜிடபிள் அவியல் 47;
034. உளுந்து சாதம் 48;
035. அவல் பயறு சாதம் 49;
036. ரவா இட்லி 50;
037. ஸ்வீட் அண்ட் ஸோர் பால் அவல் 51;
III குழம்பு வகைகள்
038. பூசணிக் குழம்பு 52;
039. பூசணி மிக்ஸ் 53;
040. குக்கும்பர் கூட்டு 54;
IV ஊறுகாய், தொக்கு வகைகள்
041. பீட்ரூட் ஊறுக்காய் 55;
42. வெஜிடபிள் ஊறுகாய் 56;
043. பூசணிக்காய் தொக்கு 57;
044. மாங்காய் தொக்கு 58;
045. பாகற்காய் தொக்கு 59;
046. சுண்டைக்காய் தொக்கு 60;
V சூப் புட்டிங் வகைகள்
047. ஓட்ஸ் பழக்கலவை 61;
048. கிரீம் ஓட்ஸ் 62;
049. தக்காளி புட்டிங் 63;
050. ட்ரை ஃப்ரூட் காக்டைல் 64;
051. காக்டைல் ஃப்ரூட் ஜூஸ் 65;
052. காக்டைல் வெஜிடபிள் ஸ்வீட் அண்ட் ஸோர் ஜூஸ் 66;
053. காக்டைல் வெஜிடபிள் ஸ்வீட் ஜூஸ் 67;
054. மிர்ச்சி வெஜிடபிள் ஜூஸ் 68;
055. மிர்ச்சி கடலை மிக்ஸர் 69;
056. ஸ்வீட் அண்ட் ஸோர் வெஜ் சூப் 70;
057. காலிபிளவர் சூப் 71;
058. பேரீச்சம் சிரப் 72;
059. மில்க் சாக்லெட் 73;
060. பாதாம் ஷேக் 74;
061. ஃப்ரூட் புட்டிங் 75;
VI சாலட் வகைகள்
062. மிக்ஸ்ட் வெஜிடபிள் சாலட் 76;
063. கேரட் சாலட் 77;
064. இங்கிலீஷ் காய்கறி சாலட் 78;
065. கார்டன் சாலட் 79;
066. தென்னிந்திய காய்கறி சாலட் 80;
067. வெஜிடபிள் சீஸ் சாலட் 81;
068. காலிபிளவர் சாலட் 82;
069. ரஷ்யன் சாலட் 83;
070. ஸ்டஃப்டு குடைமிளகாய் சாலட் 84;
VII பிரட், சீஸ், கிரீம் வகைகள்
071. சீஸ், காய்கறி சாண்ட்விச் 85;
072.ட்ரை ஃப்ரூட்ஸ் சாண்ட்விச் 86;
073. பிரட் ரோல் 87;
074. மிர்ச்சி சாண்ட்விச் 88;
VIII இதர வகைகள்
075. அவியல் 89;
076. வெஜிடபிள் பிரியாணி 90;
077. தேங்காய்ப் பால் மோர் 91;
078. வாழைத்தண்டு பொரியல் 92;
079. பழ பாயசம் 93;
080. சர்க்கரைப் பொங்கல் 94;
081. தயிர் சாதம் 95;
082. எள் அவல் 96;
083. அவல் சாதம் 97;
084. சாம்பார் 98;
085. ரசம் 99;
086. பொரியல் 100;
087. தக்காளிக் கூட்டு 101;
088. மிளகுப் பொங்கல் 102;
089. துவையல் சாதம் 103;
090. தக்காளி சாதம் 104;
091. கொள்ளு அவல் 105;
092. அவல் ஆம்ஸா 106;
093. பரங்கிப் பொரியல் 107;
094. கிர்ணி சாஸ் 108;
095. மாங்காய் தேங்காய் ஜாப் 109;
096. கீரை பீஸ் 110;
097. அம்லா ஜாஸ் 111;
098. உருளை அல்வா 112;
099. நூடுல்ஸ் மிக்ஸ் 113;
100. சவ்வரிசி ஜாப் 114;
நிறைவுரை 115.
ஆசிரியர் குறித்து: இந்தியாவின் மிகச் சிறந்த யோகா மாஸ்டர்களில் ஒருவரான திரு.டாக்டர் யோகி T.A.கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து நேரடியாக யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகளை கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு.
திருமூலர் மற்றும் பதஞ்சலி முனிவரின் பாரம்பரிய யோக முறைகளின் விற்பன்னராக திகழும் இவர் தொடர்ந்து பல புதிய யோகாசனங்களை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். அறுபத்து ஐந்து வயதிலும் இளைஞரைப் போல சுழன்று பணியாற்றும் இவர் இந்த வயதில் அட்வான்ஸ் ஆசனங்களை அனாயாசமாக செய்து காட்டும் திறமை கொண்டவர். வாழ்நாள் முழுவதும் இயற்கை உணவை மட்டுமே உட்கொள்பவரான இவர் சமைத்த உணவை உண்ணுவதில்லை. யோகா மற்றும் இயற்கை உணவு முறைகளைப் பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார்.
தற்சமயம் ஐஏஎஸ் ஐபிஎஸ்களுக்கு யோகா பயிற்சியாளராகவும், இந்திய அரசின் மொரார்ஜி தேசாய் தேசீய யோகா கல்விக்கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும், தமிழ் நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் யோகா கல்வி ஒருங்கிணைப்பாளராகவும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைகழம், சென்னைப் பல்கலைக் கழகங்களுக்கு சிறப்பு யோகா மாஸ்டராகவும், எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் மற்றும் மனித நேய அறக்கட்டளை போன்றவற்றுக்கான யோகா பயிற்சியாளர் ஆக இருக்கிறார்.இவர் வெளிநாடுகளுக்கு சென்று யோகா கற்பித்து வருகிறார்.
சொந்தமாக நிறுவி நடத்தி வரும் திருமூலர் யோகா, இயற்கை உணவு அறக்கட்டளை மூலமாக நேரடி வகுப்புகளை எடுப்பதுடன், முப்பது முறை மாநில அளவிலான யோக போட்டிகளை நடத்தி பல சாதனையாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்திருக்கிறார்.
SKU Code | Bharti B 228 |
---|---|
Weight in Kg | 0.100000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | தி.அ. கிருஷ்ணன் T.A.Krishnan |
Publisher Name | பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam |
Similar Category Products
கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal
Save: 11.00 Discount: 30.56%
Panipuriyum Pengalin Prachinaigal / பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள்
Save: 4.00 Discount: 10.00%
THE FIVE LOVE LANGUAGES - Tamil - காதல் மொழிகள் ஐந்து. சாகாவரம் பெற்ற காதலுக்கான ரகசியம்
Save: 14.00 Discount: 4.68%
WHAT YOUR DOCTOR DOESN'T KNOW ABOUT NUTRITIONAL MEDICINE MAY BE KILLING YOU - Tamil - உங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்?
Save: 24.00 Discount: 6.02%
HOW TO CONTROL MIND AND TO BE FREE FROM DEPRESSION - TAMIL - மனதைக் கட்டுப்படுத்துவது மற்றும் மன அழுத்தம் இல்லாதிருப்பது எப்படி.
Save: 15.00 Discount: 10.00%