Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சத்தியாகிரகி மகாத்மா காந்தி - லா.சு.ரங்கராஜன் - Sathiyakiraki Mahathmaa Gandhi - La.Su.Rangarajan - Sathyagrahi Mahatma Gaandhi Satiyagrahi Sathiyagrahi Satiyakrahi

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 1240
₹125.00

வரலாறு.

காகித உறை/ பேப்பர்பேக்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் சத்தியாகிரகி மகாத்மா காந்தி, லா.சு. ரங்கராஜன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஆசிரியர் குறித்து: திரு. லா.சு.ரங்கராஜன், தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்.

1930ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்றார். சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். காந்தி மீது மிகவும் பற்று கொண்டவர். மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர்.

சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் உதவி ஆசிரியராக 1952-55 வரை பணியாற்றினார். பின்னர் புது டில்லியில் மத்திய அரசு தலைமைச் செயலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார்.

மகாத்மாகாந்தியின் ஆதாரபூர்வமான எழுத்துக்கள், பேச்சுக்கள் யாவற்றையும் திரட்டித் தக்க அடிக்குறிப்புகளுடன் காலவாரியாகத் தொகுத்து நூறு தொகுதிகள் கொண்ட நூல் வரிடசையைப் பதிப்பிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு “கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி” என்ற பெயரில் இந்திய அரசு தனி அலுவலகத்தில் லா.சு.ரங்கராஜன் விசேஷ அதிகாரியாகவும், பின்னர் துணை இயக்குநராகவும் நியமனம் பெற்றார். அங்கு கால் நூற்றாண்டு (1965-1988) தொடர்ந்து பணியாற்றினார். அவ்வமைப்பின் பிரதம ஆசிரியராக இருந்த காந்திய மாமேதை பேராசிரியர் கே சுவாமிநாதன் (1896-1994) அவர்கட்குக் காந்திய பதிப்புக் பணியில் உறுதுணையாக உதவி வந்த ரங்கராஜன் காந்திய லக்கியத்தில் பெரும் புலமை பெற்றார். 1988 இறுதியில் வேலை ஓய்வு பெற்றவுடன், மத்திய அரசின் பப்ளிகேஷன்ஸ் டிவிஷனில் (1989-91) பணியாற்றினார். அது முதற்கொண்டு, காந்தியம், தேசியம் சார்ந்த சிறப்புக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். 

இரண்டாண்டுகள் (1992-94) இலக்கிய மாத இதழான கணையாழியில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மகாத்மா காந்தியின் ஆன்மிகப் பயணம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆதாரபூர்வமான ஆவணம் தயாரித்தளிக்கும் பொருட்டு இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் லா.சு.ரங்கராஜனைத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டு காலம் (2008-09) சீனியர் ஃபெல்லோஷிப் வழங்கிற்று. அதற்காக லாசு.ரா மூன்று லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப் பெற்றார்.

மகாத்மா காந்தியின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் நூறு தொகுதிகளாக கொண்டு வந்த பணியில் அமரர் கே.சுவாமிநாதனுடன் இணைந்து உழைத்தவர். 'மகாத்மா காந்தி படைப்புகள் - ஒரு சிறப்புத் தொகுப்பு' என தமிழில் 5 தொகுதிகளை வழங்கியவர். பாரதமணி உள்ளிட்ட காந்திய இதழ்களில் அதிகம் கட்டுரைகளை எழுதியவர். தேசியக் கண்ணோட்டத்தில் பெரும்பாலான இதழ்களிலும் எழுதி குவித்தவர். கலைமகள், அமுதசுரபி, விஜயபாரதம், கல்கி, தினமணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும், தீபாவளி மலர்களிலும் தவறாமல் எழுதியுள்ளார். அவரின் 86ம் அகவையில் ஜனவரி 18, 2016ம் ஆண்டு காலமானார்.

More Information
SKU Code Alnce B 1240
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name லா.சு. ரங்கராஜன் - La.Su.Rangarajan
Publisher Name அல்லயன்ஸ் - Alliance
Write Your Own Review
You're reviewing:சத்தியாகிரகி மகாத்மா காந்தி - லா.சு.ரங்கராஜன் - Sathiyakiraki Mahathmaa Gandhi - La.Su.Rangarajan - Sathyagrahi Mahatma Gaandhi Satiyagrahi Sathiyagrahi Satiyakrahi

Similar Category Products