Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சிக்மண்ட் பிராய்டு ஓர் அறிமுகம் - டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா - Sigmund Freud Or Arimugam - Dr.M.S.Thambirajah - Arimugham Arimukam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 064
₹350.00

உடல்நலம் / மருத்துவம்.

காகித உறை/ பேப்பர்பேக்;

270 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

சிக்மண்ட் ஃபிராயிட்: உளவியலுக்கு முகம் கொடுத்தவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர்; பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான்; தனிமனித உளவியலையும் தாண்டி, மதம், மனித நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர். அவரைப் பற்றி அவ்வளவாக அறியப்படாத செய்திகள் பல: இரண்டாம் உலகப் போரின்போது போர் பற்றி அல்பட் ஐன்ஸ்டைனும் அவரும் கடிதங்கள் பரிமாறிக்கொண்டார்கள்; அவர் ஓர் இறைமறுப்பாளர், மதங்களைக் கடுமையாகச் சாடி எழுதியவர்; அவர் பெயர் இரண்டுமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, ஆனாலும் அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்படவில்லை; இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் கருணைக்கொலை வேண்டித் தனது 83ஆவது அகவையில் உயிர் நீத்தார்; அவர் முன்வைத்த பல கருத்துகள் இன்று வேறுவடிவங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூல் அவர் முன்வைத்த கருத்துகளையும் கோட்பாடுகளையும் விளக்கிக் கூற முற்படுகிறது; இன்றைய அறிவியல் தளத்தில் நின்று மதிப்பீடு செய்கிறது; மனித குலத்துக்கு அவர் வழங்கிய மகத்தான பங்களிப்பைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஆசிரியர் குறித்து : டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா (பி. 1942) கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தின் பர்மிங்ஹம் நகரில் மனநல மருத்துவராகப் பணிபுரிந்துவரும் இவரின் சிறப்புத் துறை சிறார்கள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் மனநலம் (Child and Adolescent Psychiatry). பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் மனநலத்துறை விரிவுரையாளராகவும் மனநலத்துறை முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்வாளராகவும் (Examiner in Postgradute Psychiatry) மனநலப் பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் எழுதிய நூலான Psychological Basis of Psychiatry 2005ஆம் ஆண்டுக்கான British Medical Association Book Award பெற்று, தற்போது மனநலத்துறை முதுகலைப் பட்டப்படிப்பில் ஒரு பாடப் புத்தகமாக உள்ளது. பல தொழில்சார் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மீளாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

More Information
SKU Code Kch B 064
Weight in Kg 0.750000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788194302780
Author Name டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா - Dr M.S. Thambiraja
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:சிக்மண்ட் பிராய்டு ஓர் அறிமுகம் - டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா - Sigmund Freud Or Arimugam - Dr.M.S.Thambirajah - Arimugham Arimukam

Similar Category Products





Other Books by டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா - Dr M.S. Thambiraja