Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்... - ஸான்ட்ரா கால்னியடே - Siberia Paniyil Nadanak Kaalaniyudan -Sandra Kalniete - With Dance Shoes in Siberian Snows in Tamil - Ar balles kurpem Sibirijas sniegos in Tamil

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 056
₹390.00

நினைவோடை/ வரலாறு.

காகித உறை/ பேப்பர்பேக்;

352 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப்படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளோடு உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்...’ நூல் ரஷ்யக் கம்யூனிஸ அரசு லாட்வியாவை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான லாட்விய யூதர்களையும் மற்ற லாட்வியர்களையும் கொன்று, ஆயிரக்கணக்கானவர்களை ஸைபீரியாவுக்கு நாடுகடத்திய லாட்விய வரலாற்றுடன் ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் ஆட்சி முறையையும் அதில் சிக்குண்டு அலைக்கழிக்கப்பட்டக் குடும்பம் ஒன்றின் வரலாற்றையும் நினைவுகளையும் கூறுவது. கால்நடைகளுக்கான சரக்கு வண்டிப் பெட்டிகளில் ஏற்றப்பட்டு ஸைபீரியாவின் கடும் பனியில் வாழ்ந்தும் இறந்தும்போன குடும்பத்தின் உண்மை வரலாறு. பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள், பிரிக்கப்பட்ட காதலர்கள், தந்தை ஒரு புறமும் தாயும் குழந்தைகளும் ஒரு புறமும் மீண்டும் சந்திக்கவே முடியாதபடி பிரிக்கப்பட்ட அவலம், சிறை முகாம்களில் நோயால் பீடிக்கப்பட்டு ரத்தம் கக்கி உயிர்விட்டவர்களின் சோகம், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் இறந்த மிருகங்களையும் புல்லையும் மரப்பட்டைகளையும் புசித்து வாழ்ந்த குலாக் என்னும் கொடுமை இவற்றைக் கூறும் நூல் இது.

எழுத்தாளர் பற்றி : ஸான்ட்ரா காலனியடே தங்கள் நாடான லாட்வியாவிலிருந்து வெகு தூரம் வாழ்நாளுக்கும் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்களுக்கு ஸைபீரிய கிராமம் ஒன்றில் 1952ல் பிறந்த ஸான்ட்ரா கால்னியடே தன் வாழ்நாளில் கடந்திருக்கும் தூரம் வெகு அதிகமானது. ஸ்டாலினின் மரணத்துக்குப் பின் 1957ல் அவர் பெற்றோர்களுக்கும் அவருக்கும் லாட்வியா திரும்ப அனுமதி கிடைக்கிறது. கலை வரலாற்றில் கல்வி பெற்றிருந்தாலும் ஸான்ட்ரா தன் வாழ்வின் பெரும் பகுதியை அரசியலிலும் அரசனயத்திலுமே கழித்திருக்கிறார். லாட்விய பொதுமக்கள் முன்னணியின் துணைத் தலைவராகவும் அதன் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு லாட்வியச் சுதந்திரத்தை மீண்டும் பெறும் முயற்சிகளில் 1980களிலும் 1990களிலும் முன்னணியில் நின்றவர். 1993 – 1997 ஆண்டுகளில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கும் 1997 – 2002 ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டுக்கும் லாட்விய வெளிநாட்டுத் தூதராக இருந்தார். 2002இல் ஓராண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (UNESCO) லாட்விய வெளிநாட்டுத் தூதராக இருந்தார். 2002ல் பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பிலும் (North Atlantic Treaty Organization) ஐரோப்பிய ஒன்றியத்திலும் லாட்வியா இணையும் இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது லாட்வியாவின் வெளிநாட்டு மந்திரியாக பதவியேற்றார். 2004ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் லாட்விய ஆணையரானார். அவர் செய்த பணியைப் பாராட்டிப் பல லாட்விய மற்றும் வெளிநாட்டு விருதுகளைப் பெற்றவர். லாட்வியா மொழியில் எழுதி 2000ல் வெளிவந்த ‘அரக்கனை வீழ்த்தப் பாடல்’ (Song to Kill a A Giant) நூலும் 2001ல் வெளிவந்த ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன் . . .’ (With Dance Shoes in Siberian Snows . . .) நூலும் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்து, பலரும் அறியாத அல்லது தவறாக அறிந்துகொண்ட லாட்விய நாட்டின் சரியான வரலாற்றை உலகுக்கு எடுத்துச் சொல்லும் முயற்சிகளாக அமைந்தன. லாட்விய வரலாற்றுடன் இணைக்கப்பட்டு அவர் குடும்ப நினைவுகள் கூறப்படும் இரண்டாவது நூல் சமீப காலத்தில் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட லாட்விய நூலாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்பற்றி : அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

More Information
SKU Code Kch B 056
Weight in Kg 0.790000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789389820225
Author Name ஸான்ட்ரா கால்னியடே. தமிழில்: அம்பை - Sandra Kalniete. Tamil: Ambai
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்... - ஸான்ட்ரா கால்னியடே - Siberia Paniyil Nadanak Kaalaniyudan -Sandra Kalniete - With Dance Shoes in Siberian Snows in Tamil - Ar balles kurpem Sibirijas sniegos in Tamil

Similar Category Products