Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

திருக்குறளார் வழங்கும் திருக்குறள் தெளிவுரை, பதவுரைப் பதிப்பு - உரையாசிரியர் திருக்குறளார் வீ. முனிசாமி - Thirukural Thelivurai Pathavurai Pathippu - Thirukkuralaar V Munisamy

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 027
₹290.00
இலக்கியத் திறனாய்வு நூல். 
 

காகித உறை/ பேப்பர்பேக்;

576 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: அக்டோபர், 1989; 
ஐந்தாம் பதிப்பு: டிசம்பர், 2019.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்குஅரிய செய்கலா தார். 
 
பதவுரை:- செயற்கு அரிய - செய்வதற்கு அருமையானவற்றை, செய்வார் - செய்பவர்கள், பெரியர் - பெரியோர்கள் ஆவார்கள், செயற்கு - செய்வதற்கு, அரிய - செய்ய முடியாதவர்கள், சிரியர் - சிறியோர்களாவார்கள்.
 
கருத்துரை:- செய்தற்கு அருமையான செயல்களைச் செய்பவர்கள் பெரியோர்கள் ஆவார்கள். செய்வதற்கு அரிய செயல்களை செய்ய மாட்டாமல் எளியவற்றைச் செய்பவர்கள் சிறியோர்களாவார்கள்.
 
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - பாராட்டு :- 
 
திராவிட நாட்டுளீர்  உங்கள் செயற்கெலாம் 
அறமே அடிப்படை ஆதல் வேண்டும் !
அறம்எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள் !
செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு !
மனமா சறுக்கும் இனிய மருந்து !
கசடறக் கற்க ! கற்றிலார் அறிஞர்பால் 
கேட்க! கேட்க!! திராவிடம் மீட்க! 
 
ஔவையார் அருளிய ஆத்திசூடியில் 
ஒரு தொடர் தன்னை - ஒன்றுக்கான 
உரையை - எப்படி ஒருவர் இலேசாய் 
நினைவில் நிருத்தி இனிதுரைப்பாரோ 
அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர் 
முப்பால் ஆயிரத்து முந்நூற்று முப்பது 
குறளையும் அவற்றிற்குக் கொடுத்த பொருளையும் 
நினைவில் நிறுத்தி இனிது விளக்கும்ஓர்  
ஆற்றல் உடையவர் அவர்த்திருக் குறள்மலர் 
வழங்கும் நகைச்சுவை மறச்சுவை பிறசுவை 
ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை !
 
அரிசிமா இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப் 
பாசிப் பயிற்றுமி படைப்பார் அல்லர்; 
அறிஞரின் பேச்சும் எழுத்தும் அருங்குறல் 
தேன்ஆற்றி னின்ரு செம்பில்மொண் டலிப்பவை !
 
குறட்பயன் கொள்ள நம்திருக் 
குறள்முனி சாமிசொல் கொள்வது போதுமே !
 
பதிப்புரை: திருக்குறளுக்கு எத்தனையோ உரைகள் வந்திருப்பினும் இவ்வுரை நூல் தனிச் சிறப்புடன் விளங்குவதற்குக் காரணங்கள் பல உண்டு.
 
திருக்குறளை நாளும் ஒதி, குறள்வழி கடந்து குறட்பாவின் பெருமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, குறளிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விரித்துச் சொல்லி, குறளிலேயே தோய்ந்து குறளுக்காக வாழ்ந்து வருபவர் உயர்திரு. வீ. முனிசாமி அவர்கள். அவர் ஒருவரையே அறிஞர் களும் பாமர மக்களும் திருக்குறளார்' என்று அழைக் கிறார்கள்.
 
குறட்பாக்களை, பாமரரும் நன்கு புரிந்து கொள்ளு மளவுக்குப் பதவுரைப் பதிப்பாக, எளியவுரையாக, தெளிவுரையும் கருத்துரையும் வழங்கியுள்ள தமிழறிஞர் திருக்குறளார் முனிசாமி அவர்களைப் பெரிதும் போற்றி வானதி பதிப்பகம் இந்நூலினைச் சிறப்பு வெளியீடாக வெளியிட்டுள்ளது.         
                                                                                                                           - ஏ.திருநாவுக்கரசு, வானதி பதிப்பகம்.
 
சிறப்பு முன்னுரை: - திருக்குறளார் :-
வாழ்கைக்குக்குச் சிறந்த துணையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்திருப்பது திருக்குறள் எனப்படும் உலகப் பொதுமறையாகும். "எல்லாப் பொருளும் இதன்பால் உள." என்று பெரும்புலவர்கள் போற்றியிருப்பதும்  உலக மேதைகள் பலரும் பாராட்டியிருப்பதும் வெளிப்படையான உண்மைகளாகும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத கருத்துக்கள் அனைத்தும் பொதுமறைப் புலவர் திருவள்ளுவரால் தெளிவு படுத்தப்பட்டுள்ளனவாகும். 
 
அனைத்துக் கருத்துக்களையும் கற்றுணர்ந்து பயன் பெற்று அனைவரும் இன்புறுமாறு செய்ய வேண்டியது அறிஞர்களின் கடமையாகும். இந்தச் சிறு கட்டுரையில் அனைத்தையும் எழுதுவதற்கு இயலாவிட்டாலும் அன்றாட வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்பட வேண்டிய சில குறட்பாக்களையேனும் தொட்டுக் காண்பிக்க வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கின்றது.
 
ஆறறிவு படைத்த மானிடப் பிறவியின் பெருஞ்சிறப்பினை நன்கு சிந்தித்து வாழவேண்டிய முறையில் வாழ்ந்து பயனுள்ள மக்களாகப் புகழேந்தி வாழவேண்டும். மனிதப் பிறவிக்கு மிகச் சிறந்த புகழினைத் தருவது ஈகைக் குணமாகும். இயன்ற அளவு அக்குணம் இல்லையென்றால் மனிதப்பிறவி என்று சொல்லுகின்ற பெயருக்குப் பொருளில்லாமல் போய்விடும். உடம்பைச் சுமந்து கொண்டிருக்கும் உயிருக்கு ஊதியம் புகழ் என்று சொல்லப்படுகிறது. நன்கு சிந்திக்க வேண்டும்.
 
திருக்குறளார் நினைத்திருந்தால் - அவர் படிப்புக்கொப்ப திருக்குறளிலேயே வாதாடி, வாதத்திறமையால் வழக்கு வல்லுனராகியிருக்கலாம். நாடாளுமன்றத்தில் பணியாற்றிய போதும், அவர் மக்களுக்காகப் பிரச்சினைகளை, திருக்குறள் நெறியிலேயே எடுத்து வைத்துச் சிந்திக்க வைத்தார். அவர் மட்டும் நினைத்திருந்தால் அரசியல் வானில் ஒளி மிளிரும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம்.
 
ஆனால், அரசியல் சிந்தனையைவிடத் திருக்குறள் சிந்தனையே அவர் உள்ளத்தில் மேம்பட்டு நிமிர்ந்தது. அவர் நிமிர்வால் இந்தத் தமிழ் மக்கள், தங்களையும், தங்கள் மூதாதையர்களையும் எண்ணிப் பார்த்தனர்.
 
தந்தை பெரியார் போன்ற பெரியோர்களின் பேரன்பைப் பெற்றவர். குறள்வழி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர். வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறி பரப்புவதையே குறிக்கோளாகக் கொண்டவர். 'ஏ, மனிதா ! நீ சிந்திக்கத் தெரிந்தவன் ! உலகிலுள்ள உயிர் வகைகளில் உனக்கு மட்டும் தான் சிரிக்கத் தெரியும்' என்று அறைகூவல் விட்டுக்கொண்டு வருபவர். அந்தப் பெருமகனைத் தமிழ் மக்கள் நன்றியோடும் பெருமிதத்தோடும் 'திருக்குறளார்' என்று பாசமுடன் அழைத்துப் பூரிக்கின்றனர்.
 
திருகுறளருக்குப் பலர் உரை எழுதியிருந்தாலும், திருக்குறளாரின் எளிய உரை இதுவரை பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அதுமட்டும் போதாதென்று, இப்போது, "திருக்குறள் தெளிவுரை- பதவுரைப் பதிப்பு" என்று \எழுதி, தமிழ் மக்களுக்கு வழங்குகிறார்.
 
இந்த நூலினை, தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பகமான வானதி பதிப்பகம் வெளியிடுகிறது.
 
தமிழகம் இதுவரை படைத்திராத திருக்குறள் விளக்க நூலினை "உலகப் பொதுமறை" என்ற பெயரில் வெளியிட்டு, அரசுப் பரிசாக இரண்டாயிரம் ரூபாய் பெற்றார்.
 
தமிழக வரலாற்றில் "உலகப் பொதுமறை' அறியவற்றுளெல்லாம் அரிய நூலாகும். 
 
மேலும் அவருடைய தொண்டினைப் பாராட்டி, தமிழக அரசு திரு.வி.க. விருதினை அளித்து, பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், கலைமாமணி பட்டமும் பதக்கமும் தந்து பாராட்டிப் பெருமைப்படுத்தியுள்ளது.
 
வாழ்கையினையே திருக்குறளுக்குத் தொண்டு செய்யுமளவுக்கு வாழ்ந்து வரும் அப்பா திருகுறளாரின் தொண்டு பார் சிறக்கப் போற்றப்படும். இன்னும் பல பரிசுகள் அளித்துப் போற்றப்படும்.
 
வாழ்க திருக்குறளார் !          
 
எழுத்தாளர் பற்றி : தமிழ்க்காவலர், தமிழ்மறைக்காவலர், கலைமாமணி திருக்குறளார் வீ.முனிசாமி (செப்டம்பர் 26, 1913 - சனவரி 4, 1994) தமிழறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். உலகப் பொதுமறை திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காகப் பணி செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். 1952-1957 காலப்பகுதியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
More Information
SKU Code VAN B 027
Weight in Kg 1.110000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருவள்ளுவர். திருக்குறளார் வீ. முனிசாமி - Thiruvalluvar & Thirukural V. Munisamy
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:திருக்குறளார் வழங்கும் திருக்குறள் தெளிவுரை, பதவுரைப் பதிப்பு - உரையாசிரியர் திருக்குறளார் வீ. முனிசாமி - Thirukural Thelivurai Pathavurai Pathippu - Thirukkuralaar V Munisamy

Similar Category Products