Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 171
Regular Price ₹50.00 Special Price ₹45.00

Save: 5.00 Discount: 10.00%

எழுத்தாளர் : சுஜாதா; 
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 88; 
பதிப்பு : 3; 
வெளியிடப்பட்ட ஆண்டு : 2009

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர். அவர்கள் பெயர்கள் இவை  - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார். இவர்களுடன் மதுரகவிகளைச் சேர்த்தால் பன்னிரண்டு பேர் என்று கணக்கு. இவர்கள் பாடல்களை தமிழின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்களில் ஒன்றான நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்னும் நூலாகத் தொகுத்தவர் நாதமுனிகள்.

"ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திவ்யப் பிரபந்தம் முழுவதற்கும் ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்வதில் ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும். அதுதான் இந்த நூலின் குறிக்கோள் நான் கோடு காட்டியதை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். 

அந்த அற்புதமான தேடலில் உங்களுக்குப் பல இரத்தினங்கள் கிடைக்கும். - சுஜாதா ‘முதல் தொகுப்பில் 52 பாசுரங்கள் வரைதான் எழுதியிருந்த சுஜாதா, சற்று இடைவெளிக்குப் பின் ‘கல்கி’ யில் மீண்டும் ‘வாரம் ஒரு பாசுரம்’ தொடர்ந்தார். இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு வரை அவர் எழுதிய பாசுரங்கள் அனைத்துமாக 68 பாசுரங்கள் கொண்ட புத்தகம்.’" 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக 
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய 
சுடரழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை 
இடராழி நீங்குகவே என்று.

(வெய்ய - வெப்பமிக்க, செய்ய - சிவந்த, சுடராழி- ஒளிச்சக்கரம், இடராழி- துன்பக்கடல்)

இதைப் பாடிய பொய்கையாழ்வார் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருவொஃகா என்ற பழைய பெயர்கொண்ட காஞ்சிபுரத்துக்காரர்- துறவி.

இந்தப் பாடல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 2082 ஆம் பாசுரம்.
இயற்பா என்கிற பகுதியில் முதல் திருவந்தாதியில் முதல் பாசுரம்.

இது நேரிசை வெண்பாவில் அமைந்தது.

பொய்கையாழ்வார் பாடிய நூறு பாடல்களால் புறவிருள் அகன்றது என்பது வைணவர்கள் நம்பிக்கை. அதிகாலையில் கடற்கரையில் இருள் பிரியும் வேலையில் நின்றுகொண்டு தொடுவானத்தில் சூரியன் உதிக்க எழுந்து உலகெலாம் வெளிச்சத்தில் நனைவதைப் பார்க்கும்போது 'சஹஸ்ரகோடி பாஸ்கர துல்யம்' என்று சொல்லும் ;கதிராயிரம் இரவிகலந்தார்; போன்ற அந்தக் கணத்தில் பொய்கையாழ்வாரை நிறைவில் கொள்ளுங்கள்.

எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 171
Weight in Kg 0.030000
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா