Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நீதி நூல்கள் (உலக நீதி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேற்கை, நன்னெறி, இனியவை 40, இன்னா 40, கார் 40, களவழி 40, ஆசாரக் கோவை, விவேக சிந்தாமணி) (மூலம் - பதவுரை கருத்துரையுடன்) Needhi Noolgal -Tamil ( Ulaga Needhi, Aathichoodi, Konraiven

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 133
₹185.00
வாழ்வியல் நூல்; 
தமிழ் இலக்கியம்.

கடின அட்டை; 
104 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: செப்டம்பர் 2012. 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
உரை ஆசிரியர்கள்: சி.வ.கணேசன், கவிஞர் முனைவர் வீ.சேதுராமலிங்கம்.

முன்னுரை: 
ஆதி காலம் தொட்டு தமிழ்நாட்டுப் பெருமக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டவை உலகநீதி, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி ஆகிய அற நூல்களாகும்.

தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையில் நீதியும், வாய்மையும் பொன்னென மதிக்கப்பட்டு வருபவை ஆகும். எனவே நம் தமிழ் மொழியில்தான் நீதிநூல்கள் சிறப்பானதொரு இடம் பெற்று விளங்குகின்றன. சிறியவர் முதல் பெரியவர் வரை படித்து, துய்த்து பலன்பெற, பருவத்திற்கும் அறிவு நிலைக்கும் ஏற்ப பல்வேறு தமிழ் நீதி நூல்கள் உள. அவற்றுள் யாவருக்கும் எக்காலமும் பொருந்தக்கூடிய மேற்சொன்ன ஏழு நீதி நூல்களைத் தொகுத்து, அவற்றிற்கு விளக்கவுரை எழுதும் பணியில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி.

இந்நூல்களுக்கு முன்னமேயே பல சான்றோர் உரை எழுதி உள்ளனர். நான் எடுத்துக்கொண்ட இம்முயற்சி இந்நூல்களின் பால் யான் கொண்டுள்ள ஈடுபாட்டையும், அவற்றை படிப்பதன் மூலம் நம் மக்கள் திண்ணமாக பயனடைவர் என்ற எனது நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது.

விளக்கவுரை எழுதுங்கால் கடினமான பகுதிகளை மீண்டும் எளிதாக்கும் முயற்சியில் எனது தனிக் கவனத்தைச் செலுத்தியுள்ளேன். இம்முயற்சியில் அவ்வப்போது எனக்கு தகுந்த யோசனைகள் வழங்கி, இந்நூலை முழுமை பெற உதவிய திரு தியாகராசன் அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றி.

- ஆக்கியோன்.

துள்ளித் திரிகின்ற பருவத்தில் துடுக்கு அடக்கிப் பள்ளியில் பயில்கின்ற சிறுவர்களுக்கு நீதி புகட்டுகின்ற வகையில், தமிழில் பல சிறந்த நூல்கள் உள்ளன. 

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, உலக நீதி, நறுத்தொகை (வெற்றி வேற்கை), நன்னெறி ஆகிய ஏழு நூல்களையும் குழந்தைக் குறுந்தமிழ் என்று டாக்டர் வ.சுப. மாணிக்கனார் போற்றுகின்றார்.   

ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை
    பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த
    நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
    குறுந்தமிழ் என்றறிந்து கொள்

இவையேயன்றி நீதிவெண்பா நீதிநெறி விளக்கம் அறநெறிச்சாரம் ஆகிய மூன்றும் சிறுவர்களுக்கு ஏற்ற நீதி நூல்கள். ஆங்கிலேயர் நம் நாட்டில் பள்ளிகள் நிறுவி, பாடதிட்டங்களை அமைத்துக் கல்வியைப் பரப்பத் தொடங்கிய காலத்தில் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - நீதிகள் பாட நூலில் இடம்பெற்றன. அவற்றைப் பதிப்பிக்கவும் அவற்றிற்கு எளிய உரைகள் எழுதவும் பலர் முன் வந்தனர்.

ஒளவையார் எழுதிய அறநூல்கள்:  ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை , நல்வழி
உலகநாதர் இயற்றிய நூல் உலகநீதி;  
சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி
பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது; 
கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல்; 
மதுரை கண்ணங்கூத்தனார்  இயற்றிய  கார் நாற்பது; 
பொய்கையார் இயற்றிய  களவழி நாற்பது; 
பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக் கோவை; 
அதிவீர ராம பாண்டியர் பாடிய நறுத்தொகை (வெற்றி வேற்கை);
விவேக சிந்தாமணி என்பது ஒரு பழைமையான தமிழ் நூலாகும், தமிழ் இலக்கியமான விவேக சிந்தாமணி.

உள்ளடக்கம்: 
உலக நீதி, 
ஆத்திச்சூடி, 
கொன்றைவேந்தன், 
மூதுரை, 
நல்வழி, 
வெற்றி வேற்கை, 
நன்னெறி, 
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
களவழி நாற்பது
கார் நாற்பது, 
ஆசாரக் கோவை, 
விவேக சிந்தாமணி.
More Information
SKU Code Bharti B 133
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஔவையார், உலகநாதர், அதிவீர ராம பாண்டியன், சிவப்பிரகாச சுவாமிகள், பூதஞ்சேந்தனார், கபிலர், மதுரை கண்ணங் கூத்தனார், பொய்கையார், பெருவாயின் முள்ளியார், Ovvaiyar, Ulaganathar, Adhi Veera Rama Pandian, Sivaprakasa Swamigal, Boothan Chenthanaar, Kabilar, Madur
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:நீதி நூல்கள் (உலக நீதி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேற்கை, நன்னெறி, இனியவை 40, இன்னா 40, கார் 40, களவழி 40, ஆசாரக் கோவை, விவேக சிந்தாமணி) (மூலம் - பதவுரை கருத்துரையுடன்) Needhi Noolgal -Tamil ( Ulaga Needhi, Aathichoodi, Konraiven

Similar Category Products

Other Books by ஔவையார், உலகநாதர், அதிவீர ராம பாண்டியன், சிவப்பிரகாச சுவாமிகள், பூதஞ்சேந்தனார், கபிலர், மதுரை கண்ணங் கூத்தனார், பொய்கையார், பெருவாயின் முள்ளியார், Ovvaiyar, Ulaganathar, Adhi Veera Rama Pandian, Sivaprakasa Swamigal, Boothan Chenthanaar, Kabilar, Madur