Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
பேப்பர்பேக்;
72 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
ஆன்மிகம்
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் ஆலயம் ஏன்?, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சீடன்: குருநாதா ! வணங்குகிறேன். இந்து சமயம் அநாதி காலந்தொட்டு வளர்ந்தோங்கி வந்திருக்கின்றது. அந்தச் சமயத்தில் ஒவ்வொரு காலத்திலும் சான்றோர்கள் அவதரித்து மக்களுக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள். ஆனால், தாங்கள்தாம் தற்காலத்தில், சமயாசாரிகள் அனைவரும் ஒரு வடிவம் எடுத்து வந்தது போலவும் அருணகிரி நாதரின் மறு அவதாரம் போலவும் விலங்குகின்றீர்கள். ஆன்மீகத்துக்கு அடையாளமாக விளங்கும் தங்களிடம் ஆலய வழிபாடு தொடர்பாக சில ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆதலின், அடியேனின் ஐயங்களைத் தீர்த்து வைக்க வேண்டுகின்றேன். குருநாதர்: அன்ப. அவனன்றி ஓரணுவும் அசையாது. அனைத்துக்கும் இறைவனே ஆதிகாரணன். தற்போது கேட்பவனும் அவனே; கேட்பிப்பவனும் அவனே. எனவே, நின் உள்ளத்தில் எழும் ஐயங்களைத் திருவருள் உணர்த்தும் வண்ணம் தீர்த்துவைக்க முயல்வேன். சீடன்: சுவாமி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த பூர்த்தியாகி அருலொடு நிறைந்தவன் இறைவன். அவன் எல்லா இடங்களிலும் இருக்கின்றான். ஆனால், அந்த இறைவனை ஆலயத்துக்குச் சென்றுதான் வழிபட வேண்டும் என்பது போல நம்முடைய வேத நூல்களில் விதிகள் உள்ளனவே. அது ஏன் சுவாமி? குருநாதர்: நன்று கேட்டனை. பசுவின் உடம்பு முழுக்க பால் பரவியிருந்தாலும் மடியின் மூலமாகத்தான் பாலைப் பெற முடியும். காதைப் பிடித்திழுத்தால் பால் வராது. காதுதான் வரும். பூமியினடியில் எங்கும் வியாபித்திருக்கும் தண்ணீரை நாம் உபயோகப்படுத்த வேண்டுமாயின் ஓரிடத்தில் கிணறு வெட்டித் தானே தண்ணீரை எடுக்கிறோம். அன்றி, வெயிலிலே வெப்பம் நிறைந்திருக்கிறது. ஆனால், நேராக சூரியனுடைய வெயிலிலே ஒரு துண்டை வைத்தால், அது பற்றி எரியாது; வெதும்பும். ஆனால், சூரிய காந்தக் கண்ணாடியின் கீழே வருகின்ற மற்றொரு வெயிலிலே துண்டையோ பஞ்சையோ வைத்தால் திக்கென்று தீப்பிடித்துச் சாம்பலாகிக் போகும். நேர் வெயிலுக்குத் துண்டைக் கொளுத்துகின்ற ஆற்றல் இல்லை. சூரிய காந்தக் கண்ணாடியின் கீழே வருகின்ற வெயில் அந்த துண்டை எரித்து விடுகிறது. என்ன காரணம் ? எங்கும் பறந்து விரிந்திருக்கின்ற ஆதித்தன் ஒளியை அந்தச் சூரிய காந்தக் கண்ணாடி சேர்த்து, ஈர்த்து அனுப்புகிறது. அதுபோல, எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனுடைய திருவருளை, நால்வர்களும், ஆழ்வார்களும், அருணகிரிநாதர், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போன்ற அருளாளர்களும், வேதவித்துக்களுமாக இருக்கின்ற பெரியோர்களும் மந்திரயந்திரத்தினாலே சேர்த்து ஈர்த்துத் திரட்டி வைத்திருக்கிறார்கள். மற்ற இடங்களில் இறைவனை வழிபடுவது வெயிலிலே வேட்டியை வைப்பதுபோல. ஆலயங்களிலே இறைவனது சந்நிதானத்திலே வழிபடுவது சூரிய காந்தக் கண்ணாடியின் கீழே வேட்டியை வைப்பது போல. இது உடனே தீப்பிடித்துக் கொள்கிறதல்லவா? அதுபோல, அங்கு நம் வினைகள் வெந்து போகும். ஆகவே, வினைகள் வெந்து மறுபிறப்பு உண்டாகாதிருப்பதற்கு ஆலய வழிபாடு இன்றியமையாதது.
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
SKU Code | Guhashri B 063 |
---|---|
Weight in Kg | 0.310000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar |
Publisher Name | குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%