Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அழியா அழகு - இலங்கை ஜெயராஜ் - Azhiya Azhagu - Ilangai Jeyaraj - Aliyaa Alagu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 193
₹80.00

இலக்கிய திறனாய்வு நூல்.

காகித அட்டை / பேப்பர்பேக்;

170 பக்கங்கள்;

மொழி: தமிழ்;  

முதற் பதிப்பு: மே, 1997; 

மூன்றாம் பதிப்பு: ஏப்ரல், 2017.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் அழியா அழகு, இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
 
என்னுரை: 
கம்பன்.
அவன் தமிழர்களுக்குக் கிடைத்த அட்சய பாத்திரம்.
அள்ளி அள்ளி நம்முன்னோர்கள் தேவைக்கதிகமாக 
எடுத்த பின்பும் நமக்கும் புதிதாகத் தருகிறான்.
அவன் நம் இனம் செய்த தவம்.
விடுவிக்க விடுவிக்க எல்லையின்றி விரிந்து வியப்புத் தருவது 
கம்ப சூத்திரம்.
கம்பக் கடலில் எத்தனை எடுத்தாலும் முத்துக்கள் முடிவதில்லை.
'கல்வியிற் பெரியன் கம்பன்' - ஆம், வள்ளுவன் போன்றதெய்வப் புலவரைப் பார்த்த பின்பும் 
கம்பன் பற்றிய நம் முன்னோரின் கணிப்பு இது.
கம்பனைக் கற்கக் கற்க, இவ் வார்த்தையின் உண்மை வானளவு விரிவதைக் காணலாம்.
எத்துணை ஆழமாகப் போனாலும் அதனினும் ஆழங்காட்டி 
நம்மனோர்க்கு அறிவின் 
எல்லையாய்க் காட்சி தருகிறான் கம்பக் கவி.
தனக்குக் காலத்தால் முந்திய பிந்திய புலவர்களின் 
கருத்துக்களைத் தன காவியத்தில் அடக்கிக் 
காலங் கடந்து நிற்கிறான் கம்பக் கடவுள்.
அவனை மதவாதியாக, வர்க்க சார்பாளனாக, இன்னும் பலவாக 
இனங்கண்டு குறைசொல்பவர்களும் 
இல்லாமலில்லை.
குடையால் தம்மை மறைத்து, சூரியன் தம்குடைக்குள் அடக்க 
மெனக் கூறிக் குதூகலிக்கும் 
பேதைமையாளர் செயல்கண்டு நாணி நகைத்து நிற்போர் 
அறிவோர்.
கடவுளை மறுக்கவே ஆளிருக்கும் இவ்வுலகில், கம்பனை 
மறுக்கவா ஆளிராது?
தம் சொத்தைப் பேணாத அவர்தம் பேதமைத் 
தொழில் கண்டு வீணாக வருந்திப் பயனில்லை.
இருளோடு மோதுவதைவிட வெளிச்சத்தை வெளிக் 
கொணர்வது நன்றல்லவா?
நம் தமிழ்ச்சாதி அணையாத கம்பவிளக்கை யார் 
சொல்லியும் கைவிடப் போவதில்லை.
கம்பனைப் போற்றுவதாவது கவிதையைப் போற்றுவதே.
கம்பனைப் போற்றுவதாவது கல்வியைப் போற்றுவதே.
கம்பனைப் போற்றுவதாவது கடவுளைப் போற்றுவதே.
நம் இனம் பொலியப் போற்றுவோம்.
 
---------------------------------------------------------------------------------
 
இராமனின் புற அழகால் அவன் ஆக அழகுணர்ந்து 
அதனை 
'அழியா அழகு' கம்பன் கவிதைக்கும் பொருந்தியது.
ஆராய ஆராய முடிவுறாமல் நீண்டு செல்லும் 
இராமன் குண அழகு போலவே 
கம்பன் கவியின் பொருளழகும் 
முடிவுறாமல் நீண்டு கற்றோர் நெஞ்சைக் களிக்க வைத்தது.
கம்பன் கவிதையின் 
அடிகளும் சொற்களுமின்றி 
ஒவ்வோர் தனி எழுத்தும் பொருளுரைத்து நிற்பது 
ஆராய்வார் அறிந்ததே.
அவ்வரும் பொருள்களை எடுத்துக்காட்டி 
ஆன்றடங்கிய அறிஞர்கள் 
நூல்கள் பல செய்துள்ளனர்.
கம்பரசிகர்கட்கு இந்நூல்கள் பெருவிருந்தாய் அமைவன.
அப்பெரு விருந்தில் இச்சிறியேன் சமைத்ததையும் கூச்சத்துடன் 
படைக்கிறேன்.
அப்பெருமக்கள் கைவண்ணம் கண்டார்க்கு 
என் படையல் திருப்தி தராதென்பது திண்ணம்.
எனினும் இது 'அன்பினால் இட்ட அமுது'
அறியாமையெனினும் ஆசை பற்றி அறையலுற்றது.
தமிழ் உண்ட பித்தனால் உரைப்பது.
முத்தமிழ்த்துறை முறையிற்போகிய உத்தமர்கள் 
இப்பிள்ளைக் கிறுக்கலை பெரிது பண்ணார், எனும் பெருந்ததுணிவால் உங்கள்முன் 
'அழியா அழகு' எனும் இப்படையலை 
பக்தியோடு சமர்ப்பிக்கிறேன். 
-  இலங்கை ஜெயராஜ்.
 
பொருளடக்கம்: 
01.அழியா அழகு;  
02.முடியா வழக்கு;  
03.சேருதம் அமளி;  
04.செங்கை பங்கயம்;  
05.புகையும் புருடார்த்தமும்;  
06.வெண்மையும் நுண்மையும்;  
07.உண்மையும் உவமையும்;  
08.யாரே முடியக் கண்டார் ?; 
09.வாழ்த்தான வைதல்;  
10.கம்ப நாடகம்;  
11.உடம்பும் ஆயினான்; 
12.விட்டார் வீடுற்றார்;  
13.பொங்கித் தணிந்தது;  
14.கதையும் கற்பனையும்;  
15.சிறந்த தீயாள்;  
16.பகல் வந்த நிலா;  
17.வெல்ல வல்லமோ ?; 
18.அகமும் புறமும்;  
19.கம்பன் கைவண்ணம்;  
20.உரையாற் சிறக்கும் உவமை;  
21.பெருந்தெய்வம்.                                                                                                                                          
எழுத்தாளர் பற்றி: இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
More Information
SKU Code VAN B 193
Weight in Kg 0.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name இலங்கை ஜெயராஜ் - Ilangai Jeyaraj
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:அழியா அழகு - இலங்கை ஜெயராஜ் - Azhiya Azhagu - Ilangai Jeyaraj - Aliyaa Alagu

Similar Category Products