விஸ்வரூபம் - இலங்கை ஜெயராஜ் - Viswaroopam - Ilangai Jeyaraj - Vishwaroopam - Viswaroobam
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
VAN B 194
₹125.00
ஆன்மிகம் நூல்.
காகித அட்டை / பேப்பர்பேக்;
262 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: டிசம்பர், 2007;
மூன்றாம் பதிப்பு: ஜூன், 2017.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் விஸ்வரூபம், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
என்னுரை:-
உளம் மகிழ,
மீண்டும் ஒரு நூலை உங்கள் முன் படைக்கிறேன்.
ஏலவே கம்ப காவியத்துள்,
என் சிற்றறிவு கொண்டு தேடிய சிந்தனைகளை,
'அழியா அழகு',
'உலகம் யாவையும்',
'மாருதி பேருரைகள்' எனும்,
மூன்று நூல்களாய் வெளியிட முடிந்தது.
அஃது இறைச் செயல்.
அக்கருணை தொடர,;
மீண்டும் ஒரு நூலைப் படைக்கும் பேரு பெற்றேன்.
எண்ணங்களை எழுத்தாய் ஆக்க,
மகிழ்ச்சியும் அச்சமும் ஒருங்கே எழுகின்றன.
'என்னாலும் முடிகிறதே' என்பது,
மகிழ்ச்சியின் காரணம்.
'கற்பித்த பெரியோர்க்குக் களங்கம் விளைவிப்பேனோ?'
இஃது அச்சத்தின் காரணம்.
ஆனாலும் அச்சத்தை ஆசை வெல்ல,
'விஸ்வரூபம்' வெளிவருகிறது.
------------------------------------------------------------------------------------
இந்நூலின் முதலில் அமைந்துள்ள,
'விண்மட்டும் தெய்வமென்று', 'பேசுவதால் பயனில்லை',
எனும் கட்டுரைகள்,
பாரதியிடம் பெற்ற சிந்தனைகள்.
கடலைச் சுமந்த மேகங்களாய் நின்று,
அறிவுமழை பொழிந்த நம் ஆன்றோர் வரிசையில்,
அண்மித்து வாழ்ந்தவன் பாரதி.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் வாழ்ந்ததால்,
பாரதியை வெறும் புரட்சிக் கவிஞனாய் இனங்கண்டு,
புறம் தள்ளிவிட்டோம்.
அவனது ஆத்மீகச் சிந்தனைகள் ஆச்சரியம் தருபவை.
தத்துவ வித்தகங்களில் விளையாடி நிற்காது,
கடவுளைக் கைக்கெட்டும் தூரத்தில் கொணர்ந்தவன் அவன்.
என்உயிர் கவர்ந்த அவ் உத்தமக் கவியின் சிந்தனைகளை,
இரு கட்டுரைகளாக்கியிருக்கிறேன்.
கட்டுரைகளின் மொழிக்கு நான் உரிமையாளன்.
சிந்தனைக்குப் பாரதியே உரிமையாளனாஅருணகிரியாரின் அநுபூதிநூல்,
என் அகம் வளர்ப்பது.
அவ் உத்தமநூலை ஓதிப் பயன் பெற்றேன்.
நூலுள் நுழைய நுழைய,
அருணகிரியாரின் ஆன்மநிலை அதிர்வித்தது.
அடுத்துப் படிக்கையில்,
அங்காங்குச் சில சொற்களும் தொடர்களும்,
அறிவை அசைத்தன.
அங்ஙணம் அசைவித்த ஒரு தொடரே,
'இழந்த நலம்' என்பதாம்.
அத்தொடர் தந்த சிந்தனையே
அடுத்துவரும் கட்டுரை.
- இலங்கை ஜெயராஜ்.
---------------------------------------------
பொருளடக்கம்:
01.விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!;
02.பேசுவதால் பயனில்லை;
03.இழந்த நலம்;
04.எம்மைத் தீண்டுவீராகில்...;
05.உடையாய் தகுமோ?;
06.பிறந்து இளைத்தேன்;
07.பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம்!:
08.குற்றம் குற்றமே?;
09.சந்துபட உரைத்தருள்!;
10.விஸ்வரூபம்;
11.திருமுறைகள் தொடரட்டும்;
12.நந்தி;
13.'நீள நினைந்து..'
எழுத்தாளர் பற்றி: இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
SKU Code | VAN B 194 |
---|---|
Weight in Kg | 0.560000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | இலங்கை ஜெயராஜ் - Ilangai Jeyaraj |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%