Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஜோதிட பாடம் பாகம் 2 (லக்ன பலன் ஆராய்ச்சி) - புலியூர் பாலு Jothida Paadam Paagam 2 (Lagna Palan Aaraichi) by Puliyur Balu - Jotida Padam Pagam 2 (Lakna Palan Araychi - Puliyoor Balu) - Jodhida Paatam Paagham - Pulioor Baalu - Jodhida Patam Pagham - Jodhid

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 270
₹110.00
ஜோதிட நூல்.
 
காகித அட்டை; 
268 பக்கங்கள்; 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font); 
முதல் பதிப்பு: அக்டோபர் 1988; 
ஆறாம் பதிப்பு: ஜனவரி 2018.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

முன்னுரை: 
 
வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் ஜோதிடசாஸ்திரம் அடங்கியிருக்கிறது. ஜோதி என்றாலே வெளிச்சம் என்று பொருள். இருளில் நடந்து செல்லும் ஒருவனுக்கு பாதையில் என்னென்ன இடையூறுகள் இருக்கிறதென்பதை இந்த ஜோதியின் உதவியால் தெரிந்து கொண்டு அதிலிருந்து மனிதன் தப்பித்துக் கொள்ளலாம். வாழ்நாளில் எத்தனையோ இன்பத்துன்பங்களை நாம் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறோம். எது வந்தாலும் வரட்டும், தாக்குப் பிடிப்போம் என்றிருக்கும் மனப்பக்குவம் ஞானிகள், யோகிகளைத் தவிர சாதாரண மக்களாகிய நமக்கு ஏற்படுவதில்லை. இன்பத்தைக் கண்டு மகிழும் நமக்கு துன்பத்தைக் கண்டு வாளாவிருக்க முடிவதில்லை, ஏதாவது பரிகாரம் தேடி அத்துன்பத்திலிருந்து மீளவே மனம் நாடும். அதற்கு வழிகாட்டியாக அமைகிறது இந்த ஜோதிடசாஸ்திரம்.
 
"அர்தார் ஜனேஸஹாய; புருஷானம் ஆபத்தர்ணவேபோத: 
யாத்ராஸமயே மந்த்ரி ஜாதகமபஹாய   நாஸ்த்யப: "
 
என்று ஆசிரியர் கல்யாண வர்மா அவர்கள் தமது சராவளி என்னும் ஜோதிட நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒருவனுக்கு தன் சம்பாத்தியத்தில் நண்பனைப் போலவும், பிரயாண காலத்தில் மந்திரியைப் போலவும், ஆபத்து என்னும் கடலில் மூழ்கித் தவிப்போருக்குத் தெப்பம் போலவும் ஜோதிடம் உதவி செய்கின்றது. வியாபாரம், கல்வி, உத்தியோகம் அல்லது வேறு முயற்சிகளைச் செய்பவர்களுக்கு ஜோதிடன் ஜாதகத்தைப் பார்த்து எதிர்காலத்தில் நல்ல சுப பலனைத் தரக்கூடிய கிரகங்கள், மகாதெசைகள் எப்போது வருகின்றனவென்றும் அப்போது அதிக லாபம் உண்டாகுமென்றும் முயற்சி செய்த காரியத்தைச் செய்யலாமென்றும் கூறுவதால் ஆப்த நண்பனையொத்தாக இருக்கின்ற படியால் "அர்தார்தஜனே ஸஹாய:" எனவும், மற்றும் எவனாவது தனது பதவி, அந்தஸ்து, பூமி அல்லது ஸ்திரசொத்துகள் கைவிட்டுப் போய் ஆபத்தென்னும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து மனச்சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், மனைவி, புத்திரர்கள் இவர்களால் கவலை சூழும்போதும், வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும் போதும் ஜோதிடன் ஜாதகத்தைப் பார்த்து கைவிட்டுப்போன பொருள் எப்போது திரும்பக் கிடைக்கு மென்றும், மனச்சஞ்சலங்கள் எப்போது தீருமென்றும் சொல்லும்போது மனதிடம் ஏற்படுவதால் "ஆபதர்ணவேபோத:" எனவும், பிரயாண களங்களில் எந்த திக்கில் சென்றால் காரிய சித்தியாகுமென்றும், சுப பலன்கள் நடக்குமென்றும் கூறுவதால் "யாத்ராசமயே மந்த்ரி" எனவும் பொருள் பல விலக்கிக் கூறியுள்ளார்.
 
இதுபோல ஆழ்கடலுக்கு ஒப்பான ஜோதிடசாஸ்திரத்தில் மூழ்கி நன்முத்துகளை எடுத்து வெளியிட்ட பல மகான்கள் இப்போது நம்முடன் இல்லை. கால புருஷனின் ஆறு அங்கங்களில் முக்கியமான அங்கமான நேத்திரத்தைக் குறிக்கும் இந்த ஜோதிடசாஸ்திர ஓர் இன்றியமையாத கலையாகும். எவ்வளவுதான் ஆழத்தில் மூழ்கி ஆராய்ச்சிகள் பல செய்து வெளியிட்டாலும்கற்றது கைம்மணளவு என்ற ரீதியில்தான் அமையும். நமக்கு முன்னால் பல ஜோதிட மேதைகள், ஜோதிடசாஸ்திரத்துள் பயன்படத்தக்க பல நூல்களை வெளியிட்டுருக்கிறார்கள். இருப்பினும், "ஆசை வெட்கமறியாது" என்பதற்கிணங்க நாமும் துணிந்து நமது சிற்றறிவிற்கெட்டிய விதத்தில்  சில நூல்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.
 
 சுமார் பதினைந்து ஆண்டு காலமாக, ஜோதிடசாஸ்திரத்தையொட்டிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை நான் எழுதி ஜோதிடர்கள் மத்தியிலும், ஜோதிட ஆதரவாளர்கள் மத்தியிலும் நல்ல பெயர் பெற்றிருப்பதை இங்கு பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதுவரையில் நான் எழுதிய ஜோதிட பாடம் (முதல் பாகம்), ஐந்தாம் பாவம் அல்லது புத்திர பாவ சிந்தனை, திருமணப் பொருத்தமும் செவ்வாய் தோஷமும் முதலிய நூல்கள் வெளிவந்திருப்பதை வாசக அன்பர்கள் நன்கறிவார்கள். நமது ஜோதிட பாடம் முதல் பாகத்தில் ஜாதகத்தைக் கணிக்கும் முறையை முதன்மையாக விளக்கியிருக்கிறோம். அப்புத்தகத்தை உதவியால் ஜோதிடஞானம் உள்ளவர்கள் அவர்களே ஜாதகம் கணித்து கிரகஸ்புடம், பாவஸ்புடம் செய்யக்கூடிய அளவில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 
 
அடுத்தபடியாக, ஜோதிட பாடம் இரண்டாம் பாகம் என்னும் இந்நூலில் கணித முறையைப் புகுத்தாமல் அவரவர் பிறந்த லக்ணத்தைக் கொண்டு அவரவர்களுக்கேற்படும் குணாதிசயங்கள், நடையுடை பாவனைகள், குடும்பநிலை, பொருளாதாரம், உறவினர், மனைவி, மக்கள்; செய்யும் தொழில்கள் முதலியன விவரிக்கப் பட்டிருக்கின்றன! இது லக்னத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது ஆகும்.
 
லக்னம் சரியாகத் தெரியாவிட்டால் பலன்களைத் துல்லியமாக நிர்ணயித்துக்கூற இயலாது. ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்திருக்கும் நிலையையும் அவற்றிற்கு ஏற்பட்டுள்ள நட்பு, பகை-உச்சம்-நீச்சம், சேர்க்கை -பார்வை  முதலியவற்றையும், காரக பாவங்களையும் அவை ஏற்படுத்தும் யோக-அவயோக பலன்களையும் லக்னத்தை ஆதாரமாகக் கொண்டுதான் நிர்ணயிக்க முடியும். எனவே ஒரு ஜாதகத்துக்கு பலன் கூற முற்படும்போது, அந்த ஜாதகத்தில் லக்னம் சரியாகக் கணிக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
 
இந்த லக்கினம் என்பது யாது? நாம் வசித்து வரும் இந்த பூமியானது ஒரு நாள் சூரியோதயம் முதல் அடுத்த நாள் சூரியோதயம் வரை அதாவது 60 நாழிகை அல்லது 24 மணிநேரம் தனது அச்சுத் தண்டிலேயே சுழல்கிறது. அவ்வாறு, சுழல்கிறபோது, வானவெளியில் காணப்படும் 12 ராசிகளுக்கும் எதிராக சுழன்று வந்தாலும் பூமியின் எல்லா பாகத்திலும் ஒரு நாள் கூட ஒரே சமயத்தில் 12 ராசிகளின் உதயங்கள் உண்டாவதில்லை. ஆகவே மனிதன் பிறக்கும்போது எந்த ராசியின் எதிராக பூமியின் சுழற்சி ஏற்படுகிறதோ அந்த ரசித்தான் அவன் பிறந்த லக்னமாகும். அவன் பிறந்த நேரத்திற்கு ஏற்றவாறு கிரக நிலைகள் எவ்வாறு அமைந்துள்ளனவோ அதே போன்று தான் அவனது ஜாதகத்திலும் அமைந்திருக்கும். இவ்வாறு அமைந்திருக்கும் கிரக நிலைகள் தான் அந்த ஜனன லக்னத்துற்கேற்ப பலாபலன்களை நிர்ணயிக்கின்றன என்றால் அது மிகையாகாது.
 
இந்த பலன்கள் மேஷம் முதலான பன்னிரண்டு லக்னங்களுக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. அந்தந்த லக்னத்தின் அதிபதியைக் கொண்டும், அவனுக்கு ஏற்பட்டுள்ள நட்பு, பகைகிரகங்களைக் கொண்டும் தீர்மானிக்க வேண்டியுள்ளது.
 
எனவே, நாம் ஜோதிட பாடம் 2-ஆம் பாகம் என்னும் இப்புத்தகத்தில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகள் லக்னமாக அமைந்தால் அவற்றிற்கு நிகழக்கூடிய முக்கியமான பலன்களை ஆராய்ந்து பார்க்கலாம். இவற்றில் காணப்பட்டுள்ள பலன்கள் நமது முன்னோர்களின் ஜோதிட நூல்களில் தெளிவாக விளக்கிய பலன்கள் யாவற்றையும் தற்கால ஆராய்ச்சி முறைகளின் மூலம் திரட்டி ஜோதிடர்களுக்கும், வாசகர்களுக்கும் தெளிவுற விளக்கிக் கூறப்பட்டவையாகும். ஒவ்வொரு சமயத்திலும் கிரகங்களின் போக்கினால் ஏற்படும் பழங்களுக்கும், நாம் கூறியிருக்கும் சாமானிய பழங்களுக்கும் எந்த அளவு மாறுபட்டு நடக்கும் என்பதை அந்தந்த கிரக நிலைகளை நன்கு பரிசோதித்துப் பார்த்துத்தான் தீர்மானிக்க முடியும். இந்தப் பலன்களை ஏற்படுத்தும் போது ஜோதிடர்கள் தங்களது அனுபவத்தைக் கொண்டும், தற்கால கோசார கிரக நிலைகளை அனுசரித்தும் பலன்களை நிர்ணயிக்க வேண்டும்.
 
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுடைய பலன்களைப் பார்க்கும் போது, எந்த லக்னம் ஜனன லக்னமானாலும், அந்த லக்னத்தின் நடுப்பாகத்தில் அதாவது அந்த ராசியின் 15-வது டிகிரியில் பிறக்கின்றவர்களுக்கு முழுப்பலனாக அமையும். லக்னத்தின் முதல் பாகத்திலாவது அல்லது கடைசி பாகத்திலாவது பிறந்திருந்தால் முன் லக்னத்தின் பலனையோ அல்லது பின் லக்னத்தின் பலனையோ சேர்த்து அனுபவிக்க வேண்டிவரும் என்பதை ஊகித்துக்கொள்ள வேண்டும்.
 
இந்நூலை வெளியிட்டுள்ள பாரதி பதிப்பகத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
 
- புலியூர் பாலு.
 
ஆசிரியர் குறித்து: புலியூர் பாலு தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர். ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும், சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம். 
 
ஜோதிட நூல்களை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல ஜோதிடர்கள் உருவாக, அவர்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும்படியாக புலியூர் பாலு எழுதி வருகிறார். ஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள் என்னதான் ஜாதக கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பலன்சொல்லும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் பலர். 
 
எனவே ஜோதிட நூல்களை படித்தால் மட்டும் போதாது. அனுபவம் பெற வேண்டும். ஜாதக பலன் சொல்லும் திறமை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. ஆழ்ந்த தெய்வபக்தியும் கூறிய நுண்ணறிவும் வேண்டும். ஸ்ருதி, யுக்தி, அனுபவம், தெய்வ அருள் வேண்டும்.
More Information
SKU Code Bharti B 270
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name புலியூர் பாலு Puliyur Balu
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:ஜோதிட பாடம் பாகம் 2 (லக்ன பலன் ஆராய்ச்சி) - புலியூர் பாலு Jothida Paadam Paagam 2 (Lagna Palan Aaraichi) by Puliyur Balu - Jotida Padam Pagam 2 (Lakna Palan Araychi - Puliyoor Balu) - Jodhida Paatam Paagham - Pulioor Baalu - Jodhida Patam Pagham - Jodhid

Similar Category Products





Other Books by புலியூர் பாலு Puliyur Balu