Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கந்தவேள் கருணை (கந்தபுராணம்) - திருமுருக கிருபானந்த வாரியார் - Kandhavel Karunai (Kanthapuraanam)

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 330
₹250.00
ஆன்மீகம் நூல்.   
 
காகித உறை/ பேப்பர்பேக்; 
560 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு:ஜனவரி, 1975;
பதிமூன்றாம் பதிப்பு: டிசம்பர், 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் கந்தவேள் கருணை (கந்தபுராணம்), திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இறைவன், உயிர், தளை என்ற இந்த மூன்றும் என்றும் உள்ள பொருள்களாம். இக்கருத்து வேதாகமங்களால் கூறப்படுவது.     
 
பதினெண் புராணங்களைப் பாடியவர் வியாச முனிவராகும். பதினெண் புராணங்களின் கிரந்த எண் நான்கு லட்சம் ஆகும். இதில் கந்த புராணம் மட்டும் ஒரு லட்சம் கிரந்தங்கள். ஏனைய பதினேழு புராணங்களின் கிரந்த எண் மூன்று லட்சங்களாகும். எனவே மகிமையால் மட்டுமன்றி அளவாலும் சிறந்தது கந்த புராணம்.
 
கந்த புராணம் புராண நாயகமாகும்.
 
கடிய கொடிய இருளை ஞாயிறு எளிதில் அகற்றுவது போல் கந்தப் பெருமானுடைய கீர்த்தி ஒன்றே கலியில் வரும் பாவங்களைப் போக்கவல்லது என்று உணர்க. 
 
"ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதுலாம் கலிகல்மக்ஷ நாசிநீம்" என்ற திருவாக்காலும் அறிக.
 
பன்னிரு கரங்களாலும் அள்ளி அள்ளி வழங்கும் வள்ளலாகிய கந்தப் பெருமானுடைய புராணத்தைப் படித்தோர்கள், கேட்டோர்கள் அனைவரும் இந்த உலகில் இந்திரனைப் போல் இனிது இன்பமுடன் வாழ்வார்கள்.
 
எண்ணிய எண்ணங்களை யாவும் நிறைவேறப் பெற்று இறுதியில் அழியாத சிவகதி சேருவார்கள்.
 
"இந்திர ராகிப் பார்மேல் இன்பமுற் றினிது மேவிச் 
சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதியதனில் சேர்வர்
அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேள் 
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே."
 
கந்த புராணத்தில் உலகில் உள்ள சமய உண்மைகள், மதக்கொள்கைகள் யாவும் அடங்கியுள்ளன. அதனால் "கந்த புராணத்தில் உள்ள பொருள் வேறு எந்தப் புராணத்திலும் இல்லை" என்ற பழமொழி வழங்கலாயிற்று. இதனை மாற்றிக் கந்த புராணத்தில் உள்ள புளுகு எந்தப் புராணத்திலும் இல்லை எனச் சிலர் கூறித் தீவாய் நரகிடைச் சேருவர். 
 
இது முதல்வன் புராணம் எனப்பெறும். இதனை அன்புடன் நாள்தோறும் பாராயணம் புரிவோர் இகபர நலன்களை எளிதில் பெறுவர். 
 
இப் புராணத்தில் ஞான வாசனை வீசுகின்றது.
 
ஆணவ மலம் - சூரபன்மன்  
கன்ம மலம் - சிங்கமுகன் 
மாயா மலம் - தாரகன் 
ஞானம் - வேல் 
 
ஞான பண்டிதன் மும்மலங்களைக் கொன்று, ஆன்மாக்களாகிய தேவர்களைப் பந்தத்தினின்றும் விடுவித்தார் என்பதே கந்த புராணத்தின் உட்கிடை.
 
இலங்கைவாழ் சைவர்கள் கந்த புராணத்தை விதிப்படி பாராயணஞ் செய்து பிணியினின்றும் தணியப் பெரும் வழக்கத்தை, இன்றும் மேற்கொள்கின்றார்கள்.
 
முருகப் பெருமானுடைய அவதாரத்தைப் பற்றிப் பல நூல்களில் பலவாறு கூறப்பட்டிருக்கின்றன. அவைகள் பலப் பல யுகபேதங்களால் ஏற்பட்டவை. கந்த புராணத்தில் வரும் வரலாறே சிறப்புடையதாகும்.
 
ஞாலமெல்லாம் போற்றும் கந்த புராணம் காலத்தாலும் சீலத்தாலும் முற்பட்டதாகும். இதனை அன்புடன் ஓதுவோர் தீது தீர்வர். கந்தவேள் கருணையைப் பெற்று நோயின்றி நீண்ட நாள் வாழ்வர்.
 
"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் 
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க 
நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்" 
- கிருபானந்தவாரி 
 
உள்ளுறை: 
படலம் 
கச்சியப்ப சிவாச்சாரியார் வரலாறு 
பாயிரம் 
கடவுள் வாழ்த்து 
 
I.உற்பத்தி காண்டம்:-  
01.திருக்கயிலாயப் படலம்;  
02.பார்ப்பதிப்  படலம்;  
03.மேருப் படலம்;  
04.காமதகனப் படலம்;  
05.மோன நீங்கு படலம்;  
06.தவங்காண் படலம்;  
07.மணம் பேசு படலம்;  
08.வரைபுனை படலம்;  
09.கணங்கள் செல் படலம்;  
10.திருக்கல்யாணப் படலம்;  
11.திருவவதாரம்;  
12.துணைவர் வரு படலம்; 
13.சரவணப் படலம்;  
14.திருவிளையாடல்;  
15.தகரேறு படலம்;  
16.அயனைச் சிறை புரிதல்;  
17.அயனைச் சிறை நீக்குதல்;  
18.விடைபெறு படலம்;  
19.படையெழுச்சிப் படலம்; 
20.தாரகன் வதைப் படலம்; 
21.தேவகிரிப் படலம்;  
22.அசுரேந்திரன் மகேந்திரஞ் செல் படலம்;  
23.வழிநடைப் படலம்;  
24.குமாரபுரிப் படலம்;  
25.சுரம்புகு படலம்;  
26.திருச்செந்திப் படலம்;  
 
II.அசுர காண்டம்:-  
01.மாயைப் படலம்;  
02.காசிபன் புலம்புறு படலம்;  
03.அசுரர் தோற்று படலம்;  
04.காசிபன் உபதேசம்;  
05.மார்கண்டேயப் படலம்;  
06.மாயை உபதேசப் படலம்;  
07.மாயை நீங்கும் படலம்;  
08.அசுரர் யாகப் படலம்;  
09.வரம் பெரு படலம்;  
10.சுக்கிரன் உபதேசப் படலம்;  
11.அண்டகோசப் படலம்;  
12.திக்குவிஜயப் படலம்;  
13.எதிர்கொள் படலம்;  
14.உருத்திரர் கேள்விப் படலம்;  
15.நகர் செய் படலம்;  
16.பட்டாபிஷேகப் படலம்;  
17.அரசு செய் படலம்;  
18.தேவரை ஏவல் கொள் படலம்; 
19.புதல்வரைப் பெரு படலம்;  
20.வில்வலன் - வாதாவிப் படலம்;  
21.இந்திரன் கரந்துறை படலம்;  
22.விந்தகிரிப் படலம்;  
23.அகத்தியப் படலம்;  
24.கிரவுஞ்சப் படலம்;  
25.விந்தம் பிலம்புகு படலம்;  
26.வில்வலன் வாதாவிப் படலம்;  
27.காவிரி நீங்கு படலம்;  
28.திருக்குற்றாலப் படலம்;  
29.இந்திரன் அருச்சுனைப் படலம்;  
30.தேவர் புலம்புறு படலம்;  
31.அயிராணி சோகப் படலம்;  
32.மகாசாத்தாப் படலம்;  
33.இந்திரன் கயிலைசெல் படலம்;  
34.அசமுகிப் படலம்;  
35.இந்திராணி மறுதலைப் படலம்;  
36.மகாகாளர் வரு படலம்;  
37.அசமுகி சோகப் படலம்;  
38.இந்திரன் மீட்சிப் படலம்;  
39.சூரன் அரசிருக்கைப் படலம்;  
40.அசமுகி நகர்காண் படலம்;  
41.அசமுகி புலம்புறு படலம்;  
42.சூரன் தண்டஞ்செய் படலம்;  
43.அமரர் சிறைபுகு படலம்;  
 
III. மகேந்திர காண்டம்:- 
01.வீரவாகு கந்தமாதனஞ் செல் படலம்; 
02.கடல் பாய் படலம்; 
03.வீரசிங்கன் வதைப் படலம்;  
04.இலங்கை வதைப் படலம்;  
05.அதிவீரன் வதைப் படலம்;  
06.மகேந்திரஞ் செல் படலம்;  
07.கயமுகன் வதைப் படலம்;  
08.நகர்புகு படலம்;  
09.சயந்தன் புலம்புறு படலம்;  
10.வீரவாகு சயந்தனைத் தேற்று படலம்;  
11.அவைபுகு படலம்;  
12.சதமுகன் வதைப் படலம் காவலாளர் வதைப் படலம்;  
13.நகரழி படலம்;  
14.சகத்திரவாகுகள் வதைப் படலம்;  
15.வச்சிரவாகு வதைப் படலம்;  
16.யாளிமுகன் வதைப் படலம்;  
17.வீரவாகு மீட்சிப் படலம்;  
18.யாளிமுகன் வதைப் படலம்;  
19.வீரவாகு மீட்சிப் படலம்;  
20.சூரன் நகர்புரி படலம்;  
21.சூரன் அமைச்சியல் படலம்;  
 
IV. யுத்த காண்டம்:-  
01.ஏமகூடப் படலம்;  
02.வரவு கேள்விப் படலம்;  
03.முதல் நாள் பானுகோபன் யுத்தப் படலம்;  
04.இரண்டாம் நாள் சூரபன்மன் யுத்தப் படலம்;  
05.மூன்றாம் நாள் பானுகோபன் யுத்தப் படலம்; 
06.நகர்புகு படலம்;  
07.இரணியன் யுத்தப் படலம்;  
08.அக்கினி முகாசுரன் வதைப் படலம்;  
09.மூவாயிரவர் வதைப் படலம்;  
10.தருமகோபன் வதைப் படலம்;  
11.பானுகோபன் வதைப் படலம்;  
12.சிங்கமுகன் வதைப் படலம்;  
13.சூரபன்மன் வதைப் படலம்;  
14.தேவர்கள் போற்று படலம்; 
15.இரணியன் புலம்புறு படலம்;  
16.மீட்சிப் படலம்;  
 
V.தேவ காண்டம்:-  
01.திருப்பரங்குன்று சேர் படலம்;  
02.தெய்வயானையம்மை திருமணப் படலம்;  
03.வின் குடியேற்று படலம்;  
04.கந்த வெற்புறு படலம்;  
05.இந்திரபுரிப் படலம்;  
 
VI. தட்ச காண்டம்:-  
01.உபதேசப் படலம்;  
02.தட்சன் தவம்செய் படலம்;  
03.தட்சன் மகப்பெரு படலம்;  
04.சந்திர சாபப் படலம்;  
05.உமை கயிலை நீங்கு படலம்;  
06.காளிந்திப் படலம்;  
07.உமை தவம்புரி படலம்;  
08.திருமணப் படலம்;  
09.தக்கன் கயிலைசெல் படலம்;  
10.பிரம யாகப் படலம்; 
11.சாலை செய் படலம்;  
12.ததீசிப் படலம்;  
13.ததீசி யுத்தரப் படலம்;  
14.கயமுகனுற்பத்திப் படலம்;  
15.அனந்தன் சாபநீங்கு படலம்;  
16.தானப் படலம்;  
17.வேள்விப் படலம்;  
18.உமை வரு படலம்;  
19.வீரபத்திரப் படலம்;  
20.யாக சங்காரப் படலம்;  
21.அடிமுடி தேடு படலம்;  
22.தட்சன் சிவபூசை செய் படலம்;  
23.கந்த விரதப் படலம்;  
24.வள்ளியம்மை திருமணப் படலம்.                                                                                    
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
More Information
SKU Code VAN B 330
Weight in Kg 0.710000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கந்தவேள் கருணை (கந்தபுராணம்) - திருமுருக கிருபானந்த வாரியார் - Kandhavel Karunai (Kanthapuraanam)

Similar Category Products





Other Books by திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar