Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கந்தரலங்காரம் - விரிவுரை - திருமுருக கிருபானந்த வாரியார் - Kantharalankaaram Virivurai - Thirumuruga Kripanandha Variyar - Kandaralankaram - Kandharalankaram - Kantaralangaram - Kandharalangaaram

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 327
₹200.00
ஆன்மீகம் நூல்.
 
காகித உறை/ பேப்பர்பேக்; 
434 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
ஐந்தாம் பதிப்பு: செப்டம்பர் 1975; 
பதினைந்தாம் பதிப்பு: டிசம்பர் 2021.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் கந்தரலங்காரம், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் விரிவுரை எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
 
முன்னுரை: 
'கந்தரலங்காரம்' என்பது கந்தப் பெருமானுடைய அலங்காரங்களைக் கூறுவது எனப் பொருள் படும். கந்தவேளுடைய பாதாதிகேச வடிவ நலன்களையும், அவர் ஊர்தி, படை, கொடி, நாமவிசேடம் முதலியவைகளின் பெருமைகளையும் விளக்குவது ஆகும். இந்நூல் அருணகிரிநாத சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய பிரபந்தங்களில் ஒன்று; இது முருக வேளுக்கு மிகவும் உகந்த பாமாலை; இந்நூலில் பற்பல அரியபெரிய கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. அருணகிரிநாதர் அறஞ் செய்தலின் அவசியத்தையும், யம பயத்தையும், யாக்கை நிலையாமையையும், செல்வ நிலையாமையையும், சிவ யோகத்தையும், இன்னோரன்ன பிற விஷயங்களையும் உடல் கம்பிக்க, உள்ளம் உருக, அன்பு பெறுக எடுத்து உபதேசிக்கின்றார். இத் திருவருட்பாக்களை நாள்தோறும் பாராயணஞ் செய்வோர் துன்பங்களை பலவும் நீங்கி இன்புற்று எந்தை கந்தவேள் தண்ணருளைப் பெற்று நலம் பெறுவார். அலங்காரத்துள் நூற்று ளொருகவிதான் கற்று அறிந்தவர், வேந்தர் தமக்கும் அஞ்சார், இயமனுக்கும் அஞ்சார்; நரகிற் புகுதார்; நோய் வாய்ப்படார், துன்புறார்; விலங்குகளாலும் விடாப்பிராணிகளாலும் தீங்கடையார் என்பவை, இந்நூலின் இறுதியிலுள்ள நூற்பயன் செய்யுளால் இனிது விளங்குகிறது. இத்தகைய அருள் நூலை, எல்லோரும் அன்புடன் கருத்தரித்து நாள்தோறும் பாராயணஞ்ச் செய்து, இம்மை மறுமை நலன்களை எளிதிற் பெற்று இன்புறுவார்களாக,
 
இதனை நானதிகம் மதிக்கும் வானதிப் பதிப்பகத்தார்  - திரு.ஏ.திருநாவுக்கரசு அவர்கள் வெளியிடுகின்றார். இவர்களின் பண்பு பாராட்டுதற்குரியது.
- கிருபானந்தவாரி.                                                                                          
 
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
More Information
SKU Code VAN B 327
Weight in Kg 0.720000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கந்தரலங்காரம் - விரிவுரை - திருமுருக கிருபானந்த வாரியார் - Kantharalankaaram Virivurai - Thirumuruga Kripanandha Variyar - Kandaralankaram - Kandharalankaram - Kantaralangaram - Kandharalangaaram

Similar Category Products





Other Books by திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar