திருப்புகழ் விரிவுரை (சுவாமி மலை) - திருமுருக கிருபானந்த வாரியார் - Thirupughal Virivurai (Swami Malai) - Thirupugal Viriurai - Swamimalai - Thirumuruga Kirupanandha Variyar
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
ஆன்மீகம் நூல்.
காகித அட்டை/Paperback;
176 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: 1967;
பத்தாம் பதிப்பு: பிப்ரவரி, 2020.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் திருப்புகழ் விரிவுரை திருவேரகம் (சுவாமி மலை) - நான்காவது படைவீடு, திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
முன்னுரை:
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ் பாடல்கள் அமுதம் போன்றவை. ஆறுபடை வீடுகளுள் நான்காம்படை வீடு திருவேரகம் என்ற சுவாமி மலை.
சுவாமி மலைத் திருப்புகழ் 38 பாடல்கள். இது நான்காம் தொகுதியாக இப்போது வெளிவருகின்றது.
திருவருள் துணையினால் மற்ற தொகுதிகளும் விரிவுரைகளுடன் விரைவில் வெளிவரும்.
சுவாமி மலை என்னும் திருத்தலத்துக்குத் தஞ்சாவூர் - மாயூரம் பிரிவிலுள்ள சுவாமி மலை ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி வண்டிகள் மூலமாகவும், கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி திருவிடைமருதூர் to சுவாமி மலை செல்லும் டவுன் பஸ் மூலமாகவும் செல்லலாம். சுவாமி மலை ஸ்டேஷனிலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்திலும், கும்பகோணம் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும் உள்ளது இந்த ஸ்தலம்.
சுவாமிநாதசுவாமி (செய்குன்று) மலைமேல் எழுந்தருளியிருக்கிறார். அடிவாரத்தில் இராஜகோபுரத்திற்கு உட்பக்கம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.
சுவாமி மலைகுத் திருவேரகம், குருமலை, தாத்ரீகிரி, சுந்தராசலம் எனப் பல பெயர்கள் வழங்குகின்றன. ஸ்தல விருக்ஷம் நெல்லி மரம். ஆதலால் "தாத்ரீகிரி" எனப் பெயர் பெற்றுள்ளது.
இங்கு நான்கு தீர்த்தங்கள் உள்ளன. அதில் 'குமார தாரை' என்பதும் ஒன்று. இது கோவிலுக்குத் தெற்கே ஒரு பர்லாங் தூரத்திலுள்ள காவிரியாற்றின் பெயர்.
சிவபெருமானுக்கு முருகக் கடவுள் பிரணவ உபதேசம் செய்த வரலாற்றினாலும், கந்தபுராணம் கடவுள் வாழ்த்தில் " பிறவி நீத்திடும் தாரகத் துருவமாந் தலைமை யெய்திய ஏரகத் தறுமுகன்" என்பதாலும் இத்தலம் சுவாமி மலை எனப் பெயர் பெற்றது.
சுவாமி மலையில் உள்ள அறுபது படிகளும் பிரபவ முதல் அக்ஷய ஈறாக உள்ள ஆண்டுகளைக் குறிக்கும் என்று குடந்தைப் புராணம் சுவாமிமலைப் படலத்தில் திரிசிரபுரம் மகாவித்துவான் திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள்.
தரிசனத்திற்கு வந்தவர்கள் தங்கவும், திருமணம் முதலிய விசேடங்களைச் செய்யும் தேவஸ்தானத்தார் பல வசதிகளைச் செய்திருக்கிறார்கள்.
பிரதி வியாழக்கிழமை தோறும் மாலையில் சுவாமிநாதப் பெருமான் வைரவேலுடன், தங்க முகக் கவசம் அணிந்து காட்சி தருவார். பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் மாலையில் சகஸ்ரநாமங்கள் பொறித்த நான்கு சரங்கள் கொண்ட பவுன் சகஸ்ரநாம மாலையும், வைர க்ஷட் கோணப் பதக்கமும், வைரத்திலகமும் அணிந்து காட்சி தருவார்.
மற்றுமுள்ள விவரங்களை சுவாமி மலை தேவஸ்தானத்தார் வெளியிட்டுள்ள சுவாமி மலைத் தல புராணத்தில் காணலாம்.
நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் 13 வரிகளில் இத்தலத்தைப் பற்றியும் இங்கு பக்தியுடன் வாழ்கின்ற அந்தணர்களைப் பற்றியும் கூறியுள்ளார்.
இது நான்காம் படைவீடு. அநாகத க்ஷேத்திரம். இதன் பெருமையை அவாமருவி, ஆனன, ஆனாத, சுத்திய, நாசர்தங் , நாவேறு, பல காதல், பாதிமதி, மகரகேதன, வாதமொடு, வாரமுற்ற, கோமள வெற்பினை, செகமாயை, விழியால் முதலிய திருப்புகழ்ப் பாடல்களின் பிற்பகுதியில் கண்டு களிக்கவும்.
இத்தகு வித்தகம் நிறைந்த சுவாமிமலை க்ஷேத்திரத்தின் திருப்புகழ் விரிவுரையை ஓதி உணர்ந்து அன்பர்கள் நலம் பெறுக.
இந்த நான்காம் படைவீட்டுத் திருப்புகழ் உரை நூலை வானதி பதிப்பகம் என் அன்பர் திருநாவுக்கரசு இப்போது வெளியிடுகின்றார்.
திருநாவுக்கரசு அவர்களின் தமிழ்த்தொண்டு பாராட்டுதற்குரியது. வானதி பதிப்பகம் வாழ்க.
அன்பன்,
கிருபானந்தவாரி.
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
| SKU Code | VAN B 627 |
|---|---|
| Weight in Kg | 0.700000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanandha Variyar |
| Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
Aayiram Kanni - ஆயிரம் கன்னி
Save: 15.00 Discount: 4.35%





























