கந்தரநுபூதி விரிவுரை - Kantharanupoothi Virivurai - Kandaranuboodhi Virivurai - Kandharanubudhi Viriurai
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
ஆன்மிகம்.
காகித அட்டை/ பேப்பர்பேக்;
172 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
6வது பதிப்பு: 2018 ஆண்டு.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் கந்தரநுபூதி விரிவுரை, இந்நூலாசிரியர்: ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகள்.
இந்நூலின் உரையாசிரியர்: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
'திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்' அவர்கள் சென்னை மல்லீஸ்வரர் கோயிலில், 5-11-52-ல் முதல் பத்து நாட்கள் கந்தர் அநுபூதியைப் பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகள்.
முன்னுரை:
முருகப்பெருமானுடைய முழுமுதற் கருணை முழுதும் பெற்றவர் அருணகிரிநாதர். அவர் பாடியருளிய நூல்களுள் முடிமணியாகத் திகழ்வது கந்தரநுபூதி. இதனை அறியாதார் அறியாதாரே. இது ஒரு மந்திர நூல். வடிவில் சிறியது; வளத்தில் பெரியது.
கந்தரநு பூதிபெற்றுக் கந்தரது பூதிசொன்ன
எந்தையருள் நாடி யிருக்குநாள் எந்நாளோ
என்று தாயுமானப் பெருந்தகையார் உள்ளம் உருகி உணர்ச்சி ததும்பப் பாராட்டுவதனாலேயே இதன் பெருமை நனி விளங்குகின்றது.
அகர முதலென வுரைசெய் ஐம்பந்தோ ரட்சரமும் என்று திருப்புகழில் கூறியபடி, அகராதி ஷகாரந்தமாக ஆறு ஆதாரங்களிலும் அடங்கியுள்ள மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றையும் தொடுத்து ஒரு மாலையாகப் புனைந்து, முருகவேள் திருவடிக்குச் சூட்டிய மந்திர மலர் மாலை இது. இதற்கு மனமலரைக் குஞ்சமாகவும், அன்பை நூலாகவும், ஞானத்தை வாசனையாகவும், புத்தியைப் பாடும் வண்டாகவும் அமைத்தனர்.
ஆசைகூர் பத்தனேன் மனோபத்ம
மானபூ வைத்து நடுவேயன்
பானநூ லிட்டுநா விலேசித்ர
மாகவே கட்டி ஒருஞான
வாசம்வீ சிப்ரகா சியாநிற்ப
மாசிலோர் புத்தி யளிபாட
மாத்ருகா புஷ்பமா லைகோலப்ர
வாளபா தத்தி லணிவேனோ
இத்தகைய அறிய ஞான சாத்திரமும், தோத்திரமும் ஆகிய அருள் நூலுக்கு, சென்னை மல்லீசன் கோயிலில், பத்து நாட்கள் தொடர்ந்து திருவருள் துணையால் விரிவுரை நிகழ்த்தினேன்.
இதனைச் சுருக்கெழுத்தாளர் எழுதி உதவ நூல் வடிவில் திருவருளால் வெளிவருகின்றது. சொற்பொழிவு செய்த அத்தனையும் நூல் வடிவில் வெளியிட முடியவில்லை. சில இடங்களில் சுறுக்கப்பட்டுள்ளது.
இது தமிழுலகிற்குப் பெரிதும் பயன்படும் என்று கருதுகின்றேன். அன்பர்கள் இந்நூல் மூலம் செய்யுட்களின் பொருள் உணர்ந்து நாள்தோறும் ஓதி உயர்வு பெறுக.
அன்பன்
கிருபானந்தவாரி.
----------------------------------------
ஆண்டவரைப் பற்றி அப்பர் அடிகள் கூறுகின்றார். "ஆண்டவன் எங்கே இருக்கின்றான்?" என்று ஒரு கேள்வி எழும். சூரிய மண்டலங்கள், அதற்கப்பால் வேறு பல மண்டலங்கள் அண்டகோடி சராசரங்கள் முதலிய இடங்களில் எல்லாம் ஆண்டவர் இருப்பாரானால் அதனால் நமக்கு என்ன பயன்? இவ்வளவு தூரத்திற்கப்பால் இருந்தால் யார் என்ன தொடர்பு வைத்துக் கொள்ள முடியும் ? சாதாரணமாக, தொலைவிலிருக்கின்ற பெரியோர்களுடனேயே தொடர்பு வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால் ஆண்டவன் நமக்கு இருக்க வேண்டும். அப்பர் அதற்குச் சொல்லுகின்ற விடை, 'மனத்தகத்தான்' ஆண்டவன் மனத்தினுள் இருக்கிறான் என்று சொல்லுகிறார். "அவரை நாம் எப்படி வணங்குவது" என்றால் "தலையாலே நீ வணங்கு" என்கிறார். "மனத்தகத்தான், தலை மேலான், வாக்கினுள்ளான், வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான்" என்று கூறுகிறார். ஆண்டவன் எங்கிருக்கிறான் என்றால் அவரை நினைக்கும் நெஞ்சத்திலும் வணங்கும் தலையிலும், பாடும் வாயிலும் இருக்கிறான். "வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கறுத்தானைக் கருத்தறிந்து முடிப்பான்தன்னை". இப்படியான வாக்கியங்கள் எங்கும் கிடையா; இவை அநுபவத்திலிருந்து வந்த திருவாக்கியங்கள். 'ஆதலின் மெய்யன்பர்களே ! நல்ல அன்பர்கள் கருத்தறிந்து என்னுங் கருத்துக்களை ஆண்டவன் இப்படி முற்றுவிக்கின்றான். தொடர்ந்து அநுபூதியைப் பற்றி பேசும் வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆறாம் நாள் சொற்பொழிவு: மெய்யன்பர்களே ! முருகன் துணைகொண்டு 6-வது நாள் ஆகிய இன்று கந்தர் அநுபூதியைப் பற்றி மேற்கொண்டு பேச முற்படுகிறேன். எத்தனையோ ஊழிக்காலமாக இறப்பதும் பிறப்பதுமாக இப்படி மாறி மாறி உலகிலே தடுமாறி மாயையிலே உழன்று ஆண்டவன் திருவருளை அடைய வகை தெரியாமல் தவிக்கிறோம்.
நாம் விரும்புவது ஆறுதலை. அவருக்கு ஆறு தலை; இன்றைக்கு 6-வது நாள். இப்போது அருள் செய்ய ஆண்டவன் எண்ணுகிறான். அவன் கருணைக் கடவுளாக இருக்கிறான். அவன் எண்ணினால் தான் நம் எண்ணங்களை நிறைவேற்ற முடியும்.
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
SKU Code | Guhashri B 036 |
---|---|
Weight in Kg | 0.430000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar |
Publisher Name | குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 20.00 Discount: 10.53%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%