- Home /
- Magabharatham 1 - மகாபாரதம் பாகம் 1
- Description
-
Details
மஹாபாரதம் என்ன சொல்கிறது. யாருக்கு என்ன நோக்கம். இந்த மிகப் பெரிய யுத்தம் நடப்பதற்கு என்ன காரணம் என்கிற அலசல்தான் இந்த இதிகாசத்தில் முக்கிய விஷயங்கள் என்று எனக்குப்பட்டது. அதை நிறைவேற்றியிருக்கிறேன். இந்த முதல் பாகம் எழுதியதும் மிகப் பெரிய ஆனந்தம் என்னுள் குடி கொண்டது. வழக்கம்போல் அல்லாது இந்த முறை என்னை நானே பாராட்டிக் கொண்டேன். நீங்கள் பாராட்டுவீர்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.தர்மத்தை சொல்ல இன்றைய நிலையில் இதிகாசங்கள்தான் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வேத வியாக்கியானங்கள் மனதில் தைக்க, உணர முடியா கனமாக போய்விட்டன. குழைத்து கொடுத்த இதிகாசம் ஓரளவு ஜீரணம் செய்ய முடிகிறது. இராமாயணமும் மகாபாரதமும் ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியவை. இந்த காப்பியங்கள் எல்லா இடத்து மக்களின் நல்லது, கெட்டதுகளை வெகு துல்லியமாக காட்டுகிறது. ஏமாற்றுபவரும், பொய் சொல்பவரும், சத்தியம் தவறாதவரும், தான தர்மம் செய்பவரும், எல்லா இடத்திலும், எல்லா வகுப்பிலும் இருக்கின்றார்கள். இந்த இதிகாசங்கள் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறது. நமக்கு பார்க்க கற்றுக் கொடுக்கிறது.இதிகாசப் புராணங்களை நாம் தோளில் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும். இது நம் வாழ்நாள் கடமை. இதை மறுத்தவருக்கு வாழ்க்கை புரியவில்லை என்பதே அர்த்தம். இந்த முதல் பாகம் தொடர்ந்து மற்ற பாகத்தையும் வேகமாக கொடுப்பதற்கு முயற்சி செய்வேன்.குரு காப்பார்.நமஸ்காரம்.- என்றென்றும் அன்புடன் பாலகுமாரன் ஜூன் 2016. - Specification
-
Specification
SKU Code TMN B 154 Weight in Kg 0.0700 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name பாலகுமாரன் Balakumaran Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம் - Reviews
Related Products
-
Mahabaratham Part-2 / மகாபாரதம் பாகம் - 2 -பாலகுமாரன்
Regular Price: ₹445.00
Special Price ₹425.00