Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மரண ரகசியங்கள் - Marana Ragasiyangal - Marana Rahasiyangal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 712
₹90.00

ஆன்மிகம். 

காகித அட்டை/ பேப்பர்பேக்; 

மொழி : தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் மரண ரகசியங்கள், கானமஞ்சரி சம்பத்குமார் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                            

ஆசிரியர் குறித்து: கானமஞ்சரி சம்பத்குமார், BABL. ஆசிரியர் சென்னை மயிலைப் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் பேட்டையில் இளைஞர் நற்பணி மன்றத் தலைவராகவும், மாணவர் மாணவியரின் இலவச இரவுப் பாடசாலையின் காப்பாளராகவும், தலைவராகவும் இருந்தவர். இன்றும் பொதுத் தொண்டுகள் பல ஆற்றி வருகின்றார். 

வானொலியில் 800க்கும் மேற்பட்ட சிந்திக்கத் தூண்டும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும் பத்திரிக்கைத் துறையில் இவரது பங்கு இன்றியமையாதது. 'பாக்யா' பத்திரிகையின் பாசறையில் பயிற்சி பெற்றவர். இயக்குநர் திரு.மு. பாக்யராஜ் அவர்களின் பேரன்பைப் பெற்றவர். 15 வருட காலம் நிருபராகப் பணியாற்றி 8000க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நிகழ்த்தியிருப்பவர். தேவி, தாய், மங்களம், இதயம் பேசுகிறது, சரவணா ஸ்டோர்ஸின் வார, மாத இதழ்கள், நக்கீரன் குரூப்பின் 'ஓம் சரவண பவ' மாத இதழ் மற்றும் தினகரன், மாலை முரசு, தினத்தந்தி போன்ற நாளேடுகளிலும் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார்.

'சைக்கோ' மாத இதழிலும், 'பாக்யா' வார இதழிலும் உதயசந்திரிகா, பொன்முடி, பாகேஸ்வரி சம்பத்குமார், சுகப்பிரியா, கானமஞ்சரி சம்பத்குமார் போன்ற புனைப்பெயர்களில் பேட்டிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

ஜெனரல் கரியப்பாவின் 'எனது போர்கால அனுபவங்கள்', 'இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடி வருவது ஏன்?", "அரவாணிகளின் வாழ்க்கை வரலாறு", "கிராமத்து தேவதைகள்", "சித்தர்களின் வாழ்க்கை" வரலாற்று நூல்கள், பல துறைகளைச் சேர்ந்த மருத்துவக் குறிப்புகள் போன்றவை இவரது பேட்டி கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை. ஆன்மிக சம்பந்தமாக சுமார் 75க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அகில இந்திய உரிமை பாதுகாப்பு அமைப்பு சட்ட ஆலோசகராகவும், சென்னை மண்டலத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு மீடியா கிளப் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

பல சமூக நாடகங்களை எழுதி இயக்கியதோடு, முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். 

More Information
SKU Code Alnce B 712
Weight in Kg 0.400000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name கானமஞ்சரி சம்பத்குமார் - Ganamanjari Sampathkumar - Gnanamanjari Sampathkumar
Publisher Name அல்லயன்ஸ் - Alliance
Write Your Own Review
You're reviewing:மரண ரகசியங்கள் - Marana Ragasiyangal - Marana Rahasiyangal

Similar Category Products