Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இராம காவியம் - திருமுருக கிருபானந்த வாரியார் - Irama Kaaviyam - Thirumuruga Kirupanantha Variyar - இராமகாவியம் Raama Kaviyam Raamakaviyam Ramakaaviyam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri B 014
₹113.00

ஆன்மிகம்.

காகித உறை / பேப்பர்பேக்; 

368 பக்கங்கள்;

மொழி: தமிழ்; 

4-வது பதிப்பு: 2019.    

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் இராம காவியம், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

பதிப்புரை: 

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இலக்கியம் இராமாயணம் ஆகும். சமரச உணர்வைத் தந்து, பிளவு மனப்பான்மையைப் பின்னிட வைப்பதிலும் சமானமில்லாத நூல் இராமாயணந்தான். அறத்தின் ஆணிவேராகித் தண்ணளியின் தாயகமாகத் திகழும் ஸ்ரீராமனின் வரலாறு நம்மை என்றும் வாழ்விக்கும்; வற்றாத இன்பத்தில் ஆழ்விக்கும். 

அத்தகு வித்தகமிகு இராம காவியத்தைத் தமிழில் தந்தவர் கம்ப நாடர். அதனை உரைநடையாகத் தந்துள்ளவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

கம்பன் கவிகளுக்குச் சுவாமிகள் விரித்துப் பொருளுரைக்கும் விசால அறிவைக் கண்டு, கம்பனே வியர்த்துப் போயிருப்பான்; தன் பாடல்கள் இவ்வளவு பொருள்களுக்கு இடங் கொடுக்கின்றனவா? என்று 

பொதுவாக, ஒரு நூலை எழுதிவிட்டுப் பதிப்புக்குப் போகும் போதுதான் முன்னுரை எழுதுவார்கள். ஆனால், சுவாமிகள் இதனைத் தொடங்கும்போதே, முன்னுரையாகத் தன்னுரையைத் தந்து விட்டிருக்கின்றார்கள்.

ஒருக்கால் இந்நூல் வெளிவரும்போது நாம் ஒளியுலகில் இருப்போம் என்று எண்ணியிருப்பாரோ? தேவன் சித்தத்தைத் தெரிந்து வைத்துள்ளவர் யார் ?

இந்த நாரணன் காதையை வாரியார் சுவாமிகள் வாயிலாக நானிலம் அறியக் காரணமாக இருந்த கலைமகளுக்கு நன்றி. 

இதனைத் தொகுத்து அச்சு வாகனமேற்றப் பிரயாசைப் பட்டவர், சுவாமியின் பிரியத்துக்குகந்த பிள்ளையான தருமபுரி குமாரசாமிப்பேட்டை புலவர் க.தியாகசீலன் அவர்கள். இவரது பணியைச் சுவாமிகள் வானிலிருந்து வாழ்த்துவார். 

தீபா மயிலப்பன் 

குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.

பொருளடக்கம்:

01.ஞானக்கண் கண்ட காட்சி;  

02.வேள்வி செய்தல்;  

03.சீதையின் பிறப்பு;  

04.அகலிகை வரலாறு;  

05.சீதா கல்யாணம்;  

06.முடிசூட்டு விழா; 

07.தருமம் என்ற கட்டமுது; 

08.இராமர் வனம் புகுதல்; 

09.பரதர் கோசலை சந்திப்பு; 

10.விராதனின் காதலும் சாபமும்; 

11.ஜடாயு சந்திப்பு; 

12.பொன்மானும் பெண்மானும்; 

13.ஜடாயுவின் வீரப்போர்;  

14.சபரி மோட்சம்; 

15.அநுமனின் அறிமுகம்;  

16.அண்ணியின் அணிகலன்கள்; 

17.இராம நாமம்; 

18.கணையாழி; 

19.அசோக வனத்தில் மடக்கொடி; 

20.வள்ளல் வழங்கிய கணையாழி; 

21.அஞ்சனை குமாரனின் ஆற்றல்; 

22.தேவியைக் கண்டேன்; 

23.இராமனே பரம்பொருள்; 

24.அடைக்கலம் தந்த அண்ணல்; 

25.இராவணன் ஆலோசனை; 

26.தூதும் போறும்; 

27.கும்பகர்ணன் போர்த்திறம்;  

28.மாயா ஜனகன்;  

29.நாக பாசம்; 

30.மகரக் கண்ணனின் மாயப் போர்; 

31.மாயா சீதை; 

32.புத்திரசோகம்; 

33.இராம- இராவண யுத்தம்; 

34.மனச்சிறை; 

35.தந்தையும் தனயனும் திருமுடி சூட்டுதல்.

ஞானக் கண் கண்ட காட்சி:-

கங்கை நதிபாயும் நீர் வளமும் நிலவளமும் குடிவளமும் பொருந்திய நாடு கோசல நாடு. 

உசலம் - மயில்; கா - மிகுதி.

மயில்கள் மிகுந்திருப்பதனால் கோசலநாடு எனப் பெயர் பெற்றது. வளமை மிகுந்த இந்தக் கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி என்ற திரு நகராகும். இந்நகரத்தில் வாழும் மக்கள் மறந்தும் தீங்கு செய்யாதவர்கள்.

வறுமையால் வாடி, யாசிப்பவர் இந்நகரில் இல்லாததால் தருமகுணசீலர்கள் அள்ளிக் கொடுக்கும் தன்மை இன்றி வாழ்ந்தனர். அயோத்தி என்ற சொல்லுக்கு யுத்தம் இல்லாத ஊர் என்று பொருள். இந்த நகரம் போறும், சினமும் இன்றிச் சாந்தி நிகேதனமாகத் திகழ்ந்தது. எல்லாரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்தார்கள்.   

எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

More Information
SKU Code Guhashri B 014
Weight in Kg 0.510000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சகலதேச சத்ப்ரசங்க சக்ரவர்த்தி திருமுருக திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar
Publisher Name குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar
Write Your Own Review
You're reviewing:இராம காவியம் - திருமுருக கிருபானந்த வாரியார் - Irama Kaaviyam - Thirumuruga Kirupanantha Variyar - இராமகாவியம் Raama Kaviyam Raamakaviyam Ramakaaviyam

Similar Category Products





Other Books by சகலதேச சத்ப்ரசங்க சக்ரவர்த்தி திருமுருக திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar