ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - பரணிதரன் - Sree Seshadri Swamigal - Bharanitharan - Sri Swamighal Swamikal T.S.Sridhar Marina Bharaneedharan பரணீதரன்
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
ஆன்மீகம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
104 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: 2006;
மூன்றாம் பதிப்பு: 2019.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் சேஷாத்ரி சுவாமிகள், பரணிதரன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
சேஷாத்ரி சுவாமிகள் (Seshadri Swamigal) என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. சேஷாத்ரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் திருவண்ணாமலைக்கு வந்தார்.
**********************************************************
பதிப்புரை:
'ஆன்மிக விஷயங்களில் இந்தப் பாரத நாடே, உலகிலுள்ள மற்ற எல்லா தேசங்களிலும் சிறந்து விளங்குகின்றது. அதிலும், இந்தத் தென்னிந்தியாவே மிகச் சிறந்து விளங்குகின்றது. உலகத்துக்கே ஞானம் அளித்த உத்தம பூமி இந்தத் தென்னிந்தியாவே ஆகும். ஞானமானது படிப்படியாக பக்குவமாகிப் பழுத்த பூமி இதுவேதான்...' என்று சுப்ரமண்ய சிவம் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.
'அருணாசல அஷ்டகம் என்கிற நூலில், 'திருவண்ணாமலை வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் பிறவியிலேயே துறவிகள். அவர்கள் முறைப்படி சந்நியாசம் வாங்கிக் கொள்ளத் தேவையில்லை. இவ்வளவு பெருமைகள் கொண்டது திருவண்ணாமலை... ' என்று சொல்கிறது. ஆண்டவனின் அருள் பெற்ற இப்பெரியார்களைப் பற்றி காதாலே கேட்டாலும், புத்தகத்தின் மூலம் படித்தாலும், அவர்கள் பெயர்களை உச்சரித்தாலும் நமக்கு நன்மை கிடைக்கும்.
இந்தப் புத்தகத்தின் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி சுருக்கமாகவும், தெளிவாகவும் பரணீதரன் (எ) மெரீனா எழுதியுள்ளார். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள, இந்த நூல் ஒரு திறவுகோல் போல அமைந்துள்ளது. இவருடைய அற்புதங்கள் ஏராளம். ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தியவர்.
இந்த நூலைப் படித்து அனைவரும் அவரது ஆசியை பெறுவோம்.
- பதிப்பகத்தார்.
**********************************************************
பொருளடக்கம்:
01.ஜனனம்;
02.தங்கக் கை;
03.நவநீதிகிருஷ்ணன்;
04.தந்தையின் பிரிவு;
05.தாயின் மறைவு;
06.அதிசய மகன்;
07.கல்யாணப் பேச்சு;
08.சந்நியாசம்;
09.மறைந்த மாயம்;
10.பயணம் தொடங்கியது;
11.அருணாசலத்தை நாடி;
12.சந்நியாசிப் பாறை;
13.திருவண்ணாமலை வாசி;
14.ராமணரும் சேஷாத்ரியும்;
15.சேஷாத்ரியும் வள்ளிமலை சுவாமிகளும்;
16.ஸ்ரீ காமகோடி சேஷாத்ரி சுவாமிகள் நிவாஸம்.
**********************************************************
அந்த வியாபாரி தேம்பித் தேம்பி அழுதான். 'அம்மா நீங்க பெற்ற பிள்ளை சாதாரணப் பிள்ளை இல்லே. இது அதிர்ஷ்டக் குழந்தை. இது கை வெச்ச வேளை நான் நேத்து கொண்டு வந்திருந்த விக்கிரகங்களெல்லாம் வித்துப் போயிடுச்சு. எத்தனையோ திருவிழாக்களுக்குப் போயிருக்கிறேன். நூறு பொம்மைகள் கூட விற்காது. நேத்து எல்லாமே வித்துப் போச்சு. இது, "தங்கக் கை, தங்கக் கை" என்று கூறிக்கொண்டே குழந்தையின் கைகளைத் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
இந்தத் தங்கக் கைதான் பிற்காலத்தில் திருவண்ணாமலை வியாபாரிகளை வாழ வைத்தது. நம் கடைக்குள் நுழைய மாட்டாரா, நம் பண்டங்களை தம் தங்கத் கையால் தொடமாட்டாரா?' என்று கடைவீதி வியாபாரிகள் ஆவலுடன் காத்திருந்தார்கள். தங்கக் கை தொட்டதெல்லாம் துலங்கியது.
**********************************************************
எழுத்தாளர் பற்றி : மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் என்று பன்முகத்தன்மை வாய்ந்த பரணீதரன் என்று பரவலாக அறியப்படும் டி.எஸ். ஸ்ரீதரன். பயணக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதும்போது அவர் பரணீதரன் . கார்ட்டூன் வரையும்போது ஸ்ரீதர். நாடகங்கள் எழுதும்போது மெரீனா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த "அருணாசல மகிமை'தான் பள்ளி மாணவனாக இருந்த எனக்கு பரணீதரனை அறிமுகப்படுத்தியது. இமயமலைக்குச் சென்று பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்கள் குறித்து அவர் எழுதிய "பத்ரி கேதார் யாத்திரை', காசி, ராமேஸ்வரம் யாத்திரை, ஆலய தரிசனம் உள்ளிட்டவைதான் இளம் வயதிலேயே என்னில் ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்தியது என்பதை நான் இப்போது உணர்கிறேன். காளிதாசனின் ரகுவம்சத்தையும், ஆர்.கே. நாராயணின் "கைட்', "ஸ்வாமி அண்ட் ப்ரண்ட்ஸ்' நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்த பெருமையும் பரணீதரனையே சாரும். மெரீனா என்கிற பெயரில் இவர் எழுதிய "தனிக்குடித்தனம்', "மாப்பிள்ளை முறுக்கு', "மகாத்மாவின் மனைவி', "கஸ்தூரி திலகம்' போன்றவை ஆனந்த விகடனில் தொடராகவும், மேடையில் நாடகமாகவும் பெரும் பாராட்டைப் பெற்றன.
| SKU Code | Alnce B 1191 |
|---|---|
| Weight in Kg | 0.200000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | பரணிதரன் பரணீதரன் Bharanitharan @ T.S.Sridhar @ Marina @ Bharanidharan |
| Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
Aayiram Kanni - ஆயிரம் கன்னி
Save: 15.00 Discount: 4.35%
























