Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் (மூலமும் உரையும்) - திருமுருக கிருபானந்த வாரியார் - Meikanda Thevar Aruliya Sivagnanapotham (Moolamum Uraiyum) - Thirumuruga Kirupanantha Variyar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri B 015
₹175.00

ஆன்மிகம்.

காகித அட்டை (பேப்பர்பேக்); 

256 பக்கங்கள்;

மொழி: தமிழ்; 

1-ம் பதிப்பு: 2017 ஆண்டு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் (மூலமும் உரையும்), இந்நூலுக்கு உரை திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

முன்னுரை: 

அகில உலகங்களில் உள்ள பொருள்கள் அனைத்தும் மூன்று பகுதிக்குள் அடங்கிவிடும்.

 1.தானே அறிகின்ற பொருள் 'பதி'

2.அறிவிக்க அறிகின்ற பொருள் 'பசு'

3.அறிவித்தாலும் அறியாத பொருள் 'பாசம்'

இம் முப்பொருள்களைப் பற்றி அறிவது அறிஞர்களுடைய தலையாய கடமை. பாசத்தை நீக்கிப் பசு, பரமபதியை அடைந்திட வேண்டும்.

 சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம்பொருள் 

மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன 

ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த்தொகை 

வான்திகழ் தளையென வகுப்பர் அன்னவே.

- கந்தபுராணம்.

இனி, சுருங்கக் கூறி விளங்க வைத்தால் தனிச்சிறப்புடைய  அழகு ஆகும். பொது நூல்களில் சுருங்கிய சொற்களில் விரிந்த பொருள்களை விளக்குவது திருக்குறள்.

சிறப்பு நூல்களில் சுருங்கிய சொற்களால் எல்லாக் கருத்துக்களையும் விளக்கும் உண்மை நூல் சிவஞானபோதம் ஆகும்.

சூத்திரம்  - 12

வரி - 40

சொற்கள் - 216

எழுத்துக்கள்  - 624

வாசிக்கவும், நேசிக்கவும், பூசிக்கவும் தகுதியுள்ள ஞானநூல். இதற்கு நிகரான நூல் முன்னுமில்லை; பின்னுமில்லை. இமய மலையினும் உயர்ந்த அறிவுக் கருவூலமான நூல். இதனை ஓதுவார் எல்லா நலன்களையும் அடைவர். பாச நீக்கம் பெற்று முத்தி நலம் பெறுவர். மாதவம் செய்த தமிழ்நாட்டினர்க்குப் பெருவாய்ப்பாக அமைந்த அருமை நூல். ஒருமை உணர்வை உதவும் பெருமையுடையது.

இதற்கு மாதவ சிவஞானயோகிகள் சிற்றுரையும், பேருரையும் என இரு உரை நூல்கள் இயற்றியுள்ளனர்.

இதனை ஏனோரும் எளிதில் படித்து உணர்ந்து பெருநலம் அடையும் பொருட்டு எளிமையான உரையுடன் வெளிவருகின்றது.

ஏற்கனவே சைவம் என்ற திங்கள் இதழில் வெளிவந்தது.

இது அன்பர்கட்குப் பெருவிருந்தாக துணைபுரிந்து ஞான வளர்ச்சியை வழங்கும். நெடிது காலமாக இதனைத் தமிழ் மக்கட்கு உதவுதல் வேண்டும் என்பது எளியேனுடைய விருப்பம். இறைவன் இப்போதுதான் முற்றுவித்தனன்.

"'மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்"

அன்பன் 

கிருபானந்தவாரி.                                                                                     

எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

More Information
SKU Code Guhashri B 015
Weight in Kg 0.510000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar
Publisher Name குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar
Write Your Own Review
You're reviewing:மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் (மூலமும் உரையும்) - திருமுருக கிருபானந்த வாரியார் - Meikanda Thevar Aruliya Sivagnanapotham (Moolamum Uraiyum) - Thirumuruga Kirupanantha Variyar

Similar Category Products





Other Books by திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar