தில்லைக் கோவிந்தன் - ஸ்ரீ.மாதவையா @ பம்பா - Thillaik Kovinthan - A.Madhaviah @ Anantanarayanan Madhaviah @ PAMBA - Tillai Govindhan Govintan Govindan
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
நாவல்/ புதினம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
174 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் தில்லைக் கோவிந்தன், மாதவைய்யா அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தில்லைக் கோவிந்தன் 1903ல் அ. மாதவையர், ஆங்கிலத்தில் எழுதிய படைப்பாகும். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல பாண்டித்தியமுடைய ஸ்ரீ.மாதவையா முப்பது வருஷ காலம் சுவை மிகுந்த இலக்கியங்களை இரு மொழிக்கும் உதவியிருக்கிறார். ஸ்ரீ.மாதவையா, 'பம்பா' என்னும் புனைபெயர் பூண்டு எழுதுவதுண்டு. PAMBA என்னும் ஐந்து எழுத்துக்களும் முறையே 'பெருங்குளம்.அ.மாதவையா, பி.ஏ..,' என்பதைக் குறிப்பன. 'பம்பா' என்பவர் தன் நண்பரான தில்லைக் கோவிந்தன் எழுதிய சுயசரிதத்தைப் பதிப்பித்தார் என்று கற்பனை செய்து எழுதப்பட்டது இந்த நூல். சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து, மேனாட்டுக் கல்வியிற் பயின்று, அதனாற் கொண்ட லஷ்யங்களோடு தங்கள் வாழ்க்கையை சம்பந்தப்படுத்த இயலாது சங்கடப்பட்டதை நன்கு விளக்கும் கதையாக இச்சிறு நூலை எழுதினார். இந்நூலை மதிப்பிட்ட 'ப்ரெட்ரிக் ஹாரிஸன்' என்னும் இலக்கிய விமர்சகர், "தற்கால ஐரோப்பிய வாழ்க்கையாகிய சுழியிலே அகப்பட்டுக்கொண்டு மாறுபட்ட போக்கினாற் குழம்புகின்றதான புராதனமாயுள்ள ஹிந்து வாழ்க்கையை மனத்தைக் கவரும் முறையிலே சித்தரித்துக் காட்டுவது இந்நூல்.' என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி : அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (A. Madhaviah, ஆகத்து 16, 1872 – அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1924 சித்திரையில் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை அவ்விதழில் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையர் மரணமடைந்தார்.
அ. மாதவையர் தமிழர் நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை வெளியிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார்.
1892ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது.
படைப்புகள்:-
நாவல்:-
பத்மாவதி சரித்திரம் (1898);
முத்துமீனாட்சி (1903);
விஜயமார்த்தாண்டம் (1903);
Thillai Govindan (1903);
Satyananda (1909);
The story of Ramanyana (1914);
Clarinda (1915);
Lieutenant Panju (1915);
Markandeya (1922);
Nanda (1923);
Manimekalai (1923);
பத்மாவதி சரித்திரம் மூன்றாம் பாகம் (1928, முற்றுப்பெறாதது).
சிறுகதை:-
Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன.
குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)
நாடகம்:-
உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன்' நாடகத்தின் தமிழாக்கம்) (1903);
திருமலை சேதுபதி (1910);
மணிமேகலை துறவு (1918);
ராஜமார்த்தாண்டம் (1919);
பாரிஸ்டர் பஞ்சநதம் (1924).
கவிதை:-
Poems (20 கவிதைகள்) (1903);
Dox vs Dox poems (1903);
பொது தர்ம சத்கீத மஞ்சரி (இரண்டு பாகங்கள், 1914);
The Ballad of the penniless bride (1915);
புது மாதிரிக் கல்யாணப் பாட்டு (1923);
இந்திய தேசிய கீதங்கள் (1925);
இந்தியக் கும்மி.
கட்டுரை:-
Thillai Govindan's Miscellany (1907);
ஆசாரச் சீர்திருத்தம் (1916);
சித்தார்த்தன் (1918);
பால வினோதக் கதைகள் (1923);
பால ராமாயணம் (1924);
குறள் நானூறு (1924);
Dalavai Mudaliar (1924);
தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924);
தட்சிண சரித்திர வீரர் (1925).
இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.
SKU Code | Alnce B 1123 |
---|---|
Weight in Kg | 0.530000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | மூலநூல்- ஆங்கிலத்தில் - அ.மாதவையா @ பம்பா - A. Madhaviah @ Anantanarayanan Madhaviah @ PAMBA |
Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
Aayiram Kanni - ஆயிரம் கன்னி
Save: 15.00 Discount: 4.35%