திருப்புகழ்த் திரட்டு - Thiruppugal Thirattu - Thirupugazh Thirattu - Tirupugazh Tirattu
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
ஆன்மிகம்.
காகித அட்டை (பேப்பர்பேக்);
128 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
9வது பதிப்பு: 2019 ஆண்டு.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் திருப்புகழ் திரட்டு, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருபுகழ்த் திரட்டு, சந்த அமைப்புடன் நமக்கு வழங்குகிறார் 'திருப்புகழ் ஜோதி' திருமுருக கிருபானந்த வாரியார்.
ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ்த் திரட்டு (சந்த அமைப்புடன்).
முன்னுரை:
மூவர் தேவாதிகள் தம்பிரானும், முழுமுதற் கடவுளும், ஓலமறைகள் அறைகின்ற ஒரு பரம்பொருளுமாகிய முருகப்பெருமானுடைய திருவருள் முழுவதும் பெற்று அவ்வருளை எம்மனோரும் பெரும் பொருட்டுப் பரம கருணையால் ஸ்ரீஅருணகிரிநாத சுவாமிகள் பதினாறாயிரம் தமிழ் வேதத் திருபுகழையும், பிற நூல்களையும் பாடியருளினார். சகல வேதாகம புராணேதிகாச சாரமாகிய திருப்புகழை அன்புடன் ஓதுபவர் இகபர நலன்களை எளிதிற் பெறுவார் என்பது ஒருதலை.
நமது தமிழ்நாடு செய்த தவக்குறைவால் அத் திருப்புகழ் முழுவதும் கிடைத்திலது. உயர்திரு.வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் ஆயிரத்து முந்நூறுக்கு மேற்பட்ட திருபுகழ்ப் பாடல்களைத் தமிழ்நாடு பெற்று மகிழ்ந்தது.
'ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதுலாம் கலி கல்மஷ நாஸிநீம்' என்றபடி உலகமெல்லாம் எம்பெருமானுடைய திருப்புகழையே ஓதி வினைகளினின்றும் விடுபட்டு வீடுபேற்றைப் பெரும் பொருட்டுச் சில முக்கியமான பாசுரங்களுடன் இந்நூல் வெளிவருகின்றது. இதனை அன்பர்கள் அனைவரும் ஓதி என்றுமழியா இன்பத்தைப் பெற்று இனிது உய்வார்களாக.
இஞ்ஞனம்,
திருப்புகழ்த் தொண்டன்
கிருபானந்தவாரி.
எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
SKU Code | Guhashri B 044 |
---|---|
Weight in Kg | 0.360000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar |
Publisher Name | குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar |
Similar Category Products
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Ennuyir Thozhi - என்னுயிர் தோழி
Save: 10.00 Discount: 7.69%
ஆனந்த யோகம் - Aananda Yogam - Anandha Yogham - Anantha Yoham
Save: 10.00 Discount: 4.00%
Aayiram Kanni - ஆயிரம் கன்னி
Save: 15.00 Discount: 4.35%