Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Guhashri B 055
₹55.00

ஆன்மிகம்.

பேப்பர்பேக்;

112 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் வாழும் வழி, திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. - பாண்டவர்கள் ஐந்து பேர்; துரியோதனாதியர் நூறு பேர். முன் காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேர்களும் தீயவர்கள் நூறு பேர்களும் இருந்தார்கள். இப்போது கேட்க வேண்டுமா? - நன்மைக்குப் பாதை போகப்போக விரியும்; தீமைக்குப் பாதை போகப்போகச் சுருங்கும். - இந்தியாவுக்குச் சிரம் போன்றது தமிழ்நாடு. ஒழுக்கமுள்ள அறிஞர்கள் வாழ்ந்தது தமிழ்நாடு. - மனுநீதிச் சோழன் காலத்தில் ஆடுமாடுகள்கூட மனிதர்கள் நடக்கும் பாதையில் சாணியோ மூத்திரமோ கழிக்கா. இப்போதிருக்கும் மனிதனுக்குக்கூட அந்த அறிவில்லை. - எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். வைரம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது. அதுபோல், எந்தப் பாவம் செய்தாலும் போக்கிக் கொள்ளலாம்; நன்றி மறந்த பாவத்தைப் போக்க முடியாது. - பூனையைத் தொடுகிறோம், நாயை வீட்டிற்குள்ளே எங்கும் போக விடுகிறோம். நாய், பூனைகளை விடவா மனிதன் கெட்டவன்? தீண்டாமை என்று ஒரு வகுப்பாரை ஒதுக்குவது ஞாயமா? - பெரியோர்களையும் ஞானிகளையும் கண்டு கேலி செய்தால், அலட்சியம் பண்ணினால் அவனுக்கு அட்டமத்துச் சனியின் ஆரம்பமாகிவிடும்.

எழுத்தாளர் பற்றி : திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

More Information
SKU Code Guhashri B 055
Weight in Kg 0.330000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar
Publisher Name குகஸ்ரீ வாரியார் - Gugasri Variyaar
Write Your Own Review
You're reviewing:வாழும் வழி - Vaalum Vali

Similar Category Products





Other Books by திருமுருக கிருபானந்த வாரியார் - Thirumuruga Kirupanantha Variyar