Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanathil Oru Mouna Tharagai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 250
Regular Price ₹60.00 Special Price ₹40.00

Save: 20.00 Discount: 33.33%

வகை :கதைகள்;
எழுத்தாளர்:சுஜாதா; 
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்; 
பக்கங்கள் : 88;
பதிப்பு : 5;
வெளியிடப்பட்ட ஆண்டு : 2015

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
1982 - 83 களில் தான் சாவி ' தேவி ' கசடதபற ' குங்குமம் ' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும் போது முயல் ' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை  THE RABBIT TRAP என்னும் ஆங்கில தொலைக்காட்சி நாடகத்திலிருந்து மொழி பெயர்த்தேன். அரங்கேற்றம் ' ஜன்னல் ' போன்ற கதைகள் எனக்கு எழுதும் போதும் திருப்தி அளித்த கதைகள். 'ஃபில்மோத்ஸவ்' பங்களூரில் நடந்தது. - சுஜாதா - April 2004

சுஜாதாவின் சிறுகதைகளுடன் ஒரு நாடகமும் சேர்த்துக் தொகுக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் அரங்கேற்றம், தேனிலவு, ஃபில்மோத்ஸவ் போன்ற கதைகள் இருபது ஆண்டுகள் கழித்தும் பாராட்டப்பெறுகின்றன.

பொருளடக்கம் 
1.வானத்தில் ஒரு மௌனத் தாரகை 
2.நிபந்தனை 
3.A126629001 
4.தேனிலவு 
5.அரங்கேற்றம் 
6.முயல் 
7.ஜன்னல் 
8.நியாயங்கள் 
9.ஃபில்மோத்ஸவ் 

வல்லிக்கண்ணன் எழுதுகிறார் ...
சுஜாதாவின் கதாபாத்திரம் ஒன்று கதையின் நாயகனிடம் 'எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சிகிட்டிருக்கிங்க' என்று ஒரு இடத்தில குறிப்பிடுவதாக சுஜாதா எழுதி இருக்கிறார். அவருடைய எழுத்துக்களை படிக்கிறவர்களும் 'மிஸ்டர் சுஜாதா, நீங்கள் எப்படி இவ்வளவு தெரிஞ்சு  வெச்சிகிட்டிருக்கீங்க!' என்று வியப்புடன் கூற நேரலாம். எலெக்ட்ரானிக்ஸ், இசை, சித்த வைத்தியம், நாட்டுப் பாடல்கள் இப்படிப் பலப் பல விஷயங்கள் பற்றியும் அவர் நிறையத் தேடி அறிந்து கொண்டும் இருக்கிறார். வாசகர்களை 'இம்ப்ரஸ்' பண்ண வேண்டும் என்பதற்காக அவற்றை அங்கங்கே கலந்து தருகிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சுஜாதாவின் கதைகளிலும் நாவல்களிலும் புதுமையும், விறுவிறுப்பும், இனிமையும், கற்பனை வளமும் நிறைந்திருப்பது போலவே அவருடைய எழுத்து நடையிலும், இளமை, புதுமை, அழகு, ஆழம், வேகம், விறுவிறுப்பு சில சமயங்களில் கவிதைத் தன்மை எல்லாம் கலந்திருக்கின்றன.

சுஜாதாவின் உரைநடையில் எளிமையும், இனிமையும் சுவையும் நிறைய இருப்பது போலவே புதுமையும் அதிகம் கலந்திருக்கிறது. நவீன விஷயங்கள் மிகுதியாகவே இடம் பெறுகின்றன... விஞ்ஞான விஷயங்களையும் ஓரளவுக்குக் கலந்து கொடுக்கிறார்.

- பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (தீபம்)

எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 250
Weight in Kg 0.030000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanathil Oru Mouna Tharagai

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா