Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கோதையின் பாதை - ஐந்து பாகங்கள் முழுமையும் - 5 புத்தகங்கள் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Kodhaiyin Paadhai I to V- Kothayin Paathai I to V - Kothaiyin Pathai I to V - Kodhayin Padhai 1 to 5 - Sri Mukkur Lakshminarasimhachariar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 629
Regular Price ₹935.00 Special Price ₹880.00

Save: 55.00 Discount: 5.88%

ஆன்மீகம் நூல்; வைணவ பக்தி நூல்; 

தெய்வ மங்கை ஆண்டாள் புகழ் பாடும் நூல்.

காகித அட்டை /பேப்பர்பேக்);

மொழி: தமிழ்;      

படிக்கக்கூடிய எழுத்துரு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் கோதையின் பாதை (ஐந்து பாகங்கள் முழுமையும் - 5 புத்தகங்கள்), முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                                                                 

கோதை என்பதற்கு நல்ல வாக்கு அருள்பவள் என்பது பொருள் பொருள். அவளுடைய திவ்யமான திருவடிகளை எப்போதும் மனசில் நினைப்பவர்க்கு நல்வாக்கை கொடுத்து அருள்வாள். மங்களமான சுபசொற்களை நாவால் பேச அனுக்ரஹம் செய்வாள்.

கோதை திருமாலை மணக்கும் பேரு பெற்றவள். இரு மாலைகளைக் கட்டி தினமும் திருமாளுக்குச் சூட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. பூமாலையைச் சூடியும், பாமாலையைப் பாடியும் அவன் திருவடிகளில் சமர்ப்பித்தாள். அதனால் "சூடிக் கொடுத்த நாச்சியார்" என்னும் பெயர் பெற்றாள். 

கண்ணனிடம் தன் காதலை வெளிப்படுத்த ஆண்டாள் பூக்களை தூதாக அனுப்பினாள். என்னுடைய ஆசையை எம்பெருமானிடம் தெரிவித்து அவன் அருளை எனக்கு பெற்று தாருங்கள்" என்று சொல்லி அனுப்பினாள். இதன் மூலம் ஆண்டாள் கண்ணனையும் ஆண்டாள், நம்மையும் ஆள்கிறாள்.      

பதிப்புரை:

மற்ற மகான்கள் உரையெழுதுவதற்கும் அமரநிலை எய்தியுள்ள முக்கூர் ஸ்வாமிகள் எழுதுவதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாம ச்லோகங்களை எடுத்துக் கொண்டு, பதம் பதமாகக் கூட எழுதாமல், எழுத்து எழுத்தாய் எடுத்து விளக்கம் தருகிறார் 'குறையொன்றுமில்லை' கட்டுரைகளில்.

இப்போது ஆண்டாளின் பாசுரங்களுக்கு அற்புதமான விளக்கங்கள் இந்த முதல் பாகத்தில். இரண்டே பாசுரங்கள் பூங்காவில் புகுந்த வண்டு ஆயிரக்கணக்கான மலர்களில் அமர்ந்து, தேன் வருடிச் சேமிக்கிற மாதிரி, ஸ்வாமிகளின் சிந்தனை இந்த இரண்டு பாசுரங்களுக்காகவே பிரபஞ்சம் முழுமையும் அலைந்து திரிந்து விஷய ஞானத்தைச் சேகரித்துத் தருகிறது. இது அதிசயம்தான் என்று பிரமித்தால் மட்டும் போதுமா?

ஆற அமர முழுமையான ஈடுபாட்டோடு ஒன்றிப் போய்ப் படித்து அனுபவிக்க வேண்டிய ஞானக்களஞ்சியமாய் மலர்ந்திருக்கிறது.

ஸ்வாமிகளின் திருப்பாவை விளக்கவுரையை தினந்தோறும் படித்துவந்தால் - மனத்திலுள்ள தீயகுணங்கள் நீங்கும். சத்துவ குணம் உண்டாகும். பாவச் செயல்களை செய்ய விடாமலும், ஏற்கனவே உள்ள நம் வினைகளை போக்கடித்தும் நன்மையைக் கொடுக்கும். எம்பெருமான் திருவடிகளைப் பற்ற உதவு செய்யும்.

'பகவானையும் ஆண்டாள்; நம்மையும் ஆண்டாள்' என்பதாய் அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திரு நாமத்துக்கு விளக்கம் தருகிறார்.

'நேரிழையீர்' என்று ஒரு சொல்; பாசுரத்தில் வருகிறது இதற்கு, 'ஆபரணங்கள் அணிந்தவர்களே' என்று பொருள் கேட்டே பலருக்கும் பழக்கம். ஸ்வாமிகளின் சிந்தனை வேறு மாதிரி பரவுகிறது. 

சொல்கிறார்: 'ஆபரணங்கள் என்றால் வெளியே போட்டுக் கொள்ளுகிற ஆபரங்களைக் குறிப்பிடவில்லை; இங்கே!

ஆத்மாவுக்குப்  போடும் ஆபரணம்! ஆத்மாலங்காரம். அது என்ன ஆபரணம்? சமம், தமம், ஆதி, ஆத்ம குணங்கள்... அதாவது வெளிப்புலன் அடக்குதல், உட்புலன் அடக்குதல்...புலனடக்கம்...என்ற உயர்ந்த ஆபரணம்..."

இப்படியாக, திருப்பாவைக்கு விளக்கம் தருகிறேன் என்று கிளம்பி, அந்தத் தோணியில் ஏறிக்கொண்டு ஆன்மிக இலக்கியக் கடல் முழுவதையும் சுற்றிச் சுற்றி வந்து நம்மைத் திணரச் செய்கிறார்.

நிறையப் படிக்கவேண்டும்; நிறைய சிந்திக்க வேண்டும்; மனத்தில் பதிவானவற்றை மற்றவர்களுக்கும் வாரி வழங்க வேண்டும் என்று, வாழ்ந்து மறைந்தவர் ஸ்வாமிகள்.

வானதி பதிப்பகம் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறது. அந்த மகானின் கருத்துக்களை வாசகர்களுக்குக் கொண்டு செல்கிற பெரும்பேற்றை இறைவன் அருளியிருக்கிறான்.

இறைவன் அருளாலும் ஸ்வாமிகளின் அருளாசியாலும் இப்பொழுது 'கோதையின் பாதை' முதல் பாகம் வெளியாகியுள்ளது. மற்ற பாகங்கள் விரைவில் வெளிவரும்.

இந்நூலினை வெளியிட அனுமதித்துள்ள வணக்கத்திற்குரிய முக்கூர் ஸ்வாமிகளின் திருப்புதல்வர் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், ஸ்ரீ முக்கூர் குடும்பத்தாருக்கும் நன்றி.

அன்புடன் 

வானதி ஏ.திருநாவுக்கரசு.

                                                               ஸ்ரீ 

                 ll ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நம: ll   

                 ll ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ திவ்ய பாதுகா ஸேவக 

               ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹா தேசிகாய நம: ll   

                 ll ஸ்ரீ மட்டபல்லிநாதம் ப்ரணதோஸ்மி நித்யம் நம: ll   

                 ll ஸ்ரீமத் உபயவேதாந்த ஸ்ரீ முக்கூர்  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹார்ய 

                                                   மஹா தேசிகாய நம: ll   

முகவுரை : 

பூமிபிராட்டி 'ஸர்வம் ஸஹா' என்று அதீத காருண்யத்துடன் எல்லாவற்றையும் பொறுப்பவள். ஸாஷாத் பூமிபிராட்டியின் அவதாரமான கோதா  என்கிற ஆண்டாளும் மிகுந்த வாத்ஸல்யத்தோடு நம்மை உய்விக்க திருப்பாவை என்கிற உத்தமமான முப்பது பாசுரங்களை அருளியுள்ளாள். பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும் இப்பாசுரங்களின் மூலமாக கோதை வகுத்துத் தந்துள்ள பாதை நம்மை உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்லும்.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் திருநாமமான 'விஸ்வம்' என்ற நாமத்தின் பெருமையை விவரித்த 'குறையொன்றுமில்லை' புத்தகத்தின் முதல் பக்கம் முன்னுரையில், ஸ்ரீ உ.வே.முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹாசாரியார் ஸ்வாமிகள் 'ஆளரியின் அருள்', மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்', 'அருள் தரும் அஹோபிலம்', 'ஆழ்வார்களும் ஆளரியும்', 'கண்ணன் கழலிணைகள்', 'கோதையின் பாதை', 'கம்பனின் கம்பன்' போன்ற நூல்களும் உயர்ந்த வானதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

'கோதையின் பாதை' என்ற இவ்வுன்னதமான புத்தகம் ஸ்ரீ ஸ்வாமி 1986ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஹைதராபாத் தேசிக ஸபையில் ஆற்றிய திருப்பாவை உபன்யாஸ விஷயத்தின் எழுத்து வடிவே. பல்லாயிரக்கணக்கான பாகவதோத்தமர்கள் செவியுற்ற அந்த வாக் வைபவத்தை பல கோடி மக்கள் படித்து பலன் பெற வேண்டும் என்ற எண்ணமே இந்த தொகுப்பின் முக்கிய நோக்கம்.

திருப்பாவை என்பது ஆண்டாள் நமக்காக நடத்திக் காட்டிய யஜ்ஞம்; விரதம். அப்படிப்பட்ட உயர்ந்த யஜ்ஞத்தை விவரிக்க யார் மிகவும் பொருத்தமானவர்..? 'ஸர்வே ஜநா ஸுகிநோ பவந்து' என்பதற்கிணங்க லோக க்ஷேமத்திற்காக பகவான் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹனின் திவ்யாக்ஞைக்கு ஏற்ப பாரத தேசத்தின் பல்வேறு திவ்ய க்ஷேத்ரங்களில் 107+++ ஸ்வாதி மஹா யஜ்ஞங்களை நடத்தி எல்லோருக்கும் ஸுபிக்ஷத்தைத் தேடிக் கொடுத்த ஸ்ரீமுக்கூர் ஸ்வாமிகளே பொருத்தமானவர் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இருக்கமா !

'கோதையின் பாதை' பல பாகங்களாக வெளிவர இருக்கின்றன. முதல் பாகத்தில் முதல் இரண்டு பாசுரங்களின் ஸாமான்ய மற்றும் விசேஷ அர்த்தங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இன்று ஸ்ரீஸ்வாமி உடலளவில் நம்முடன் இல்லை என்றாலும், பல பாகவதோத்தமர்களின் உள்ளத்தில் உட்புகுந்து தான் நியமித்திருந்த திவ்ய ஸூக்திகளை வெளியிடுவதற்கான வழிகளையும், விஷயங்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.

அடியேன்,

முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசாரியார் ஸ்ரீநிவாசன்

Chairman

Sri Swati Narasimha Maha Yagna Trust

New No.34 (Old No.24),

Venkatesan Street,

Off Usman Road (South)

T Nagar, Chennai - 600 017.

Ph.91-44-2435 3704

ஆசிரியர் குறிப்பு : ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளன ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள். இந்த ஐந்து நரசிம்மர்களும் தம்மைக் காட்டிக்கொண்டது ஸ்ரீ உ.வே. முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார் என்ற புகழ் பெற்ற நரசிம்ம உபாசகரிடம். இவர் உலக நன்மைக்காக நரசிம்மரின் அவதார தினமான சுவாதி நட்சத்திரங்களில் நூற்றியெட்டிற்கும் மேலான யக்ஞங்களை நடத்தியுள்ளார்.

 

இவற்றில் சில, பிரபல நரசிம்ம ஷேத்திரங்களான, மங்களகிரி, வேதாத்ரி, கடிகாசலம் என்ற சோளிங்கர், அந்தர்வேதி, யாதகிரி, ஷோபநாத்ரி, வாடபல்லி, ஸிம்ஹாசலம், நைமிசாரண்யம், பிருந்தாவனம், ஸ்ரீ ரங்கம், நங்கைநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.

 

ஸ்ரீமுக்கூர் சுவாமிகளின் மட்டபல்லி யக்ஞ வாடிகை சந்நிதானத்தில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியாரின் நாலடி உயரத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் சிலாரூபம். இவர் நிகழ்த்திய நூற்றியெட்டிற்கும் மேற்பட்ட சுவாதி யக்ஞங்களில், யக்ஞ மூர்த்தியாக இருந்த லஷ்மி நரசிம்மர், இன்றும் மாதந்தோறும் சுவாதித் திருமஞ்சனம் பெற்றுக்கொண்டு அழகுறக் காட்சியளிக்கிறார்.

More Information
SKU Code VAN B 629
Weight in Kg 1.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கோதையின் பாதை - ஐந்து பாகங்கள் முழுமையும் - 5 புத்தகங்கள் - முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Kodhaiyin Paadhai I to V- Kothayin Paathai I to V - Kothaiyin Pathai I to V - Kodhayin Padhai 1 to 5 - Sri Mukkur Lakshminarasimhachariar

Similar Category Products

Other Books by முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் - Sri Mukkur Lakshmi Narasimhachariar