Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - THE POWER OF POSITIVE THINKING - Tamil - Nermarai Sindhanaiyin Viyathagu Sakthi

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4448
₹399.00
பிணைப்பு: சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183222412
ISBN-13: 978-8183222419

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு.    இந்த புத்தகம் 70 வருடங்களாக அச்சில் இருக்கிறது என்ற எழுத்துக்கள் வெறும் வியாபார நோக்கத்திற்காக சொல்லவில்லை என்கிற உண்மையை இப்புத்தகம் படிக்க ஆரம்பித்த கணத்தில் உணர்ந்துக் கொண்டேன். இதுநாள் வரை நம் நடத்தையில் உள்ள குறைபாடுகளை மறைத்துக் கொண்டு மற்றவரை மட்டும் நாம் குறை சொன்னதால் என்ன கிடைத்தது நமக்கு என்பதை நமக்கு சுட்டிக் காட்டி மற்றவரின் நிறைகளை பார்க்கச் செய்து அதன்மூலம் அவர்களின் விலைமதிக்க முடியாத நட்பை, நல்ல உறவை நமக்கு கிடைக்க செய்வதோடு நம்மை இந்த உலகம் உற்றுப் பார்க்கும் உயர்ந்த இடத்தில் நம்மை அமரவைக்கும் இந்த  புத்தகம் என்பதில் உங்களுக்கு ஐயம் வேண்டாம்.             
 
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ, இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.               
 
இதில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை, நடைமுறைச் சாத்தியமான ஒரு வழிமுறையைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில், எளிய, புரிந்து கொள்வதற்கு ஏற்ற விதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
இப்புத்தகத்தை படித்து, இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் நீங்கள் கவனமாக உள்வாங்கிக் கொண்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்து இதில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளையும் சூத்திரங்களையும் உண்மையாகவும், உறுதியாகவும் கடைபிடித்து வந்தால், உங்களுக்குள் ஓர் அற்புதமான மேம்பாடு ஏற்படுவதை உங்களால் உணர முடியும். இக்கொள்கைகளில் நீங்கள் கைதேர்ந்தவராவாதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான நல்வாழ்வை அனுபவிப்பீர்கள்.                      
 
உள்ளடக்கம் :-
1.உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் 
2.சலனமற்ற மனம் சக்தியைப் பெருக்கும் 
3.நிரந்தரமான ஆற்றலைப் பெற்றிருப்பது எப்படி 
4.பிரார்த்தனையின் சக்தி 
5.உங்கள் சொந்த மகிழ்ச்சியை உருவாக்குவது எப்படி 
6.கோபத்தையும் கவலையையும் விட்டொழியுங்கள் 
7.சிறந்தவற்றை எதிர்பாருங்கள், அவற்றையே பெறுங்கள் 
8.தோல்வியில் எனக்கு நம்பிக்கை இல்லை 
9.கவலைப்படும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி 
10.தனிப்பட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சக்தி 
11.விசுவாசத்தைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்குவது எப்படி 
12.ஆரோக்கியத்திற்கான சூத்திரம் 
13.புதிய சிந்தனைகள் புத்துயிர் அளிக்கும் 
14.ஆசுவாசம் அதிக சக்தி கொடுக்கும் 
15.மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி 
16.மன வலிக்கான மருந்து 
17.கடவுளின் சக்தியைக் கிரகித்துக் கொள்வது எப்படி 
 
ஆசிரியர் :   நார்மன் வின்சென்ட் பீலே 1898 மே 31 ல் பவர்ஸ்விலே ஓஹியோ அமெரிக்காவில் பிறந்தார். அவர் அமெரிக்க மந்திரி மற்றும் மிகச் சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். அவர் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் அதிக அளவு விற்பனையான நூலாகிய "நேர்மறைச் சிந்தனையின் திறன்" என்ற நூலை எழுதினார். இந்த நூலானது பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மனதை ஈர்த்து வாழ்வில் வெற்றி பெற வைத்தது.   
 
நார்மன் வின்சென்ட் பீலேவின் பிற தலைப்புகள்:-
 
        உன்னால் முடியும் நீ நினைத்தால் உன்னால் முடியும்
        நேர்மறைச்சிந்தனை வாழ்வு
        நேர்மறைச்சிந்தனையின் வியப்பூட்டும் முடிவுகள்
 
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4448
Weight in Kg 0.250000
Dispatch Period in Days 10
Brand Bookwomb
ISBN No. 9788183222419
Author Name NORMAN VINCENT PEALE. Translator NAGALAKSHMI SHANMUGAM. நார்மன் வின்சென்ட் பீல். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name Manjul Publishing House Pvt. Ltd. @ மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - THE POWER OF POSITIVE THINKING - Tamil - Nermarai Sindhanaiyin Viyathagu Sakthi

Similar Category Products





Other Books by NORMAN VINCENT PEALE. Translator NAGALAKSHMI SHANMUGAM. நார்மன் வின்சென்ட் பீல். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்