Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

உடையார் நான்காம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 4 -Balakumaran - Udayaar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Hardbound

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 102
Regular Price ₹460.00 Special Price ₹435.00

Save: 25.00 Discount: 5.43%

சோழர் வரலாறு சரித்திர நாவல்.
மாமன்னன் இராஜராஜ சோழனின் வரலாறு.
Udayar - Part IV - History of Cholas.
 
சரித்திர புதினம்.
கடின அட்டை/ ஹார்ட்பௌண்ட்
416 பக்கங்கள்;  
முதல் பதிப்பு: ஏப்ரல், 2005; 
இருபத்தி நான்காம் பதிப்பு: ஜனவரி, 2022.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. 

                                                ***

                       யோகிராம்சுரத்குமார்

இனிய தோழமைக்கு வணக்கம்.

முண்டகக்கண்ணி அம்மன் சந்நிதியில் 'உடையார்' மூன்றாம் பாகத்தை வைத்து "இவ்வளவு பெரிய புத்தகத்தை நானா எழுதினேன்" என்று கர்வப்பட வேண்டிய வேளையில் குழந்தையின் குதூகலத்தோடு வியந்தது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது.

சிறு வயதில் சரித்திரம் இராஜராஜனை ஒரு மாமன்னன் என்று சொல்லிக் கொடுத்தது.

கல்கியின் பொன்னியின் செல்வன் பல படிகள் உயர்ந்து சென்று, இராஜராஜனோடு நாமும் வாழ்ந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று ஒரு 'Dream Boy' ஆக கற்பனை செய்து கிறங்கிப் போகும் கிக் கொடுத்தது.

ஆனால், உங்கள் உடையார் நெருக்கமாகத் தொடுத்த பூமாலையைப் போல சம்பவங்களையும், சரித்திரத்தையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைத்து ஸ்ரீ இராஜராஜத் தேவரின் வாழ்க்கை பற்றி அவருடனேயே வாழ்ந்து அனைத்தையும் பார்த்து பதிவு செய்தது போல் கதை சொல்லி இருக்கும் சாமர்த்தியம் அப்பப்பா. எப்படி பலப்பல விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டு கோர்வையாக உங்களால் எழுத முடிந்தது என்று வியக்க வேண்டியவர்கள் நாங்கள்தான். நீங்கள் இல்லை. 

சேர தேச காந்தளூர்ச்சாலை கடிகைப் போரில் அந்தணர்களைக் கொன்ற பாபம் நீங்க, குருநாதர் கருவூர் தேவர் சொற்படி இராஜராஜன் வேண்டிக்கொள்ள தஞ்சை பெரிய கோயிலுக்கான விதை அங்கு விதைக்கப்பட்டது.

இறை மிகப் பெரியது அதற்கு முன்பு நாம் தூசு என்று சரணடைதல் வர, அமைதி வரும். சக உயிரின் துடிப்பும், துயரமும் பி[புரியும். புரிதல் அதிகரிக்க தோழமை கெட்டிப்படும். பகை அழியும். அன்பு மலரும்.

இந்த உண்மையை மிகப் பெரிய கோயிலாகக் கட்டி மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

பாரத தேசத்தின் வட பகுதியிலுள்ளவர்கள் கயிலாயத்தை எளிதாக தரிசனம் செய்யலாம். ஆனால் தெற்கே உள்ளவர்களுக்காக மேரு மலையையொத்த கோபுரம், விமானம் உள்ளே மிகப்பெரிய லிங்கம், கயிலாயத்தில் இருக்கும் மானசரோவரைப் போலவே கோபுரத்திலிருந்து விழும் நீரும், அபிஷேக நீரும் வாய்க்கால்கள் வழியாகச் சென்றடையும் குளங்கள் என தஞ்சை பெரிய கோயிலை தக்ஷிண கயிலாயமாக கட்டுவதற்காகவே போர், போரில் கிடைத்த செல்வங்கள், அடிமைகள், அந்த பல்லாயிரக்கணக்கான அடிமைகளை அன்பால் ஆளுமை செய்த நேர்த்தியுடன் சைவமும், தமிழும் பல்லாண்டு வாழ வாய்த்த உடையார் ஸ்ரீ இராஜராஜத் தேவரை நீங்கள் தான் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

ஒரு உயர்ந்த செயல் ஒருவரால் மட்டும் முடிவதில்லை. கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு பல பேருடைய ஒருங்கிணைந்த செயலால் முடிகிறது என்பதைத் தந்தையின் கனவைப் புரிந்து கொண்டு சோழ தேசத்தைப் புலி போல் காத்த இராஜேந்திரன். சக்ரவர்த்தியின் நிழல் போல் தோள் கொடுத்து அவர் காரியம் எல்லாவற்றிலும் கைகொடுத்த பஞ்சவன் மாதேவி, மிகக் கூர்ந்த அறிவுடைய சேனாதிபதி பிரம்மராயர், சோழ மண்ணின் மீது காதலோடு இருக்கும் அருண்மொழி, இறையுணர்வோடு மனிதத்தை வளர்க்கும் கருவூர்த்தேவர், நல்வழி காட்டும் குலகுரு ஈசான சிவ பண்டிதர், குஞ்சர மல்லர், நித்தவினோதப் பெருந்தச்சர், ஓவியன் சீராளன், ஒற்றன் வைஷ்ணவதாசன் மூலமாக அற்புதமாக உணர்த்தி இருக்கிறீர்கள்.

ஒரு சக்ரவர்த்தி நேரடியாகக் கோயில் கட்டும் வேலையில் ஈடுபடும்போது, ஏற்படும் சமூக மாற்றங்கள், பல்வேறு சமூகத்தினரையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம், அவர்களால் ஏற்படும் குழப்பங்கள் அதை இராஜராஜன் எதிர்கொள்ளும் விதம், எடுக்கும் முடிவுகள் பற்றிச் சொல்லி இராஜராஜனை ஒரு மாமன்னனை அவருடைய குணாதிசயங்களோடு முழுமையாகப் புரிந்துகொண்ட பாராட்ட வழிவகுத்துள்ளீர்கள்.

இதையெல்லாம் எப்படி எழுதியிருப்பீர்கள் என்ற என் கேள்விக்கும் ஒருநாள் விடை கிடைத்தது.

உங்களுக்கு Cataract Operation செய்வதற்கு முன்பு கண்கள் சரியாகத் தெரியாத நிலையில் படிக்க இயலாமல் உடையார் நான்காம் பாகத்தில் பஞ்சவன் மாதேவி ஈசான சிவபண்டிதரோடு பேசும் இடம் என்னைப் படித்து சொல்லச் சொன்னீர்கள். அந்த தேவாரப் பாடல் சரியாகப் பொருந்தவில்லை என்று ஐந்து பக்கங்களுக்கான விஷயத்தை உடனடியாக மாற்றி இருபது நிமிடங்கள் தொடர்ச்சியாக கண்களை மூடிக் கொண்டு ஒருநிமிடம் கூடத் தயங்காமல், யோசிக்காமல் சீராக டேப் ரெக்கார்டரில் நீங்கள் தெளிவாக பதிவு செய்த நிகழ்ச்சி "இது இருபத்தைந்து வருடத் தேடல். சோழ தேசத்தின் மீது உங்களுக்கு இருக்கும் மாறாத காதல்" என்பதை எனக்குப் புரிய வைத்தது.

தஞ்சை பெரிய கோயிலின் ஒவ்வொரு கல்லையும் காண்பித்து, இதை நார்த்தாமலையில் இருந்து இப்படித்தான் கொண்டு வந்திருப்பார்கள் என்று படம் போட்டு விளக்கி விமானத்தில் ஏற்றாத மூளியான நந்தியைக் கொண்டு விமானத்தின் எடையை, பரிமாணத்தைச் சொல்லி, விமானத்தின் உட்புறம் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களைக் காண்பித்து, நாட்டிய முத்திரைகளோடு இருக்கும் புடைப்புச் சிற்பங்கள், விமானத்தின் உட்புறத்தில் காணப்படும் பிந்து போன்ற அமைப்பைக் காண்பித்து என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.

சாரம் கட்டாமல் மண் மூடி ஏற்றிய விதத்தை விளக்கி கட்டி முடித்த பின் கொட்டப்பட்ட மண் மேடாக இன்றும் காட்சியளிக்கும் இடத்தைக் காண்பித்த போது திகைப்பாக இருந்தது. இராஜராஜன் மூன்று தேவியரோடு தில்லை நடராஜரை தரிசிக்கும் ஓவியக் காட்சி நெகிழ வைத்தது.

தஞ்சைப் பெருவழி என்பது இதுதான். இப்படித்தான் இராஜராஜன் வந்திருப்பார். இங்குதான் தஞ்சை அரண்மனை இருந்திருக்கும். இது மறவர்களின் படை வீடு, இது அந்தணர்களின் அக்ரஹாரம். இது குதிரை கட்டும் இடம். இங்கு யானைகள் சோதனை செய்து இப்படித்தான் சென்றிருக்கும். வீரர்கள் சோதனை செய்து இப்படித்தான் அனுப்பியிருப்பார்கள். கருமார்கள் வேலை செய்த இடம் இதுதான். பார் இந்த மண்ணின் கருமை நிறத்தை என்று தஞ்சையின் ஒவ்வொரு இடத்தையும் பார்த்து நீங்கள் பரவசப்படுவது முதன்முறையல்ல. இருபத்தைந்து வருடங்களில் கையில் காசு கிடைத்த போதெல்லாம் இங்கு வந்து சுற்றிப் பரவசப்பட்டிருக்கிறேன் என்று சொன்ன போது குறையாத உங்களின் ஆர்வம் ஆச்சரியத்தைத் தந்தது.

பழையாறை தாண்டி உடையாளூர் சிவன் கோவிலில் சோழப் பரம்பரையினர் இங்குதான் நின்றிருப்பர் என்றும், பால் குளத்து அம்மன் கோவிலிலிருந்த உருளைத் தூணில் பொறிக்கப்பட்டிருந்த இராஜராஜனின் மறைவு செய்தியைத் தடவித் தடவி கண் கலங்கிய காட்சியும் இன்னும் கண் முன்பே நிற்கிறது.

பஞ்சவன் மாதேவிக்கு ஒரு பள்ளிப்படை வீடு உள்ளது. அந்திசாயும் வேளையில் தான் அவள் தரிசிக்க விடுவாள் என்று பரிதவிப்போடு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வளையல், மஞ்சள் குங்குமம் சார்த்தி அம்மா, உடையாரை நல்லபடியாக முடித்துக் கொடும்மா என்று வேண்டி நின்றபோது சோழ தேசத்தின் மீதுள்ள உங்கள் பக்தி புரிந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சோழ சேனாதிபதி கிருஷ்னன் ராமனான பிரம்மராயர் கட்டிய அமண்குடி கோவிலில் நடந்த நிகழ்ச்சி இன்னும் புதிராகவே உள்ளது.

துர்க்கை அம்மனை வழிபட்டு கோவிலைச் சுற்றி வந்த சமயம் கோவிலின் மூலையில் இருளில் தொண்ணூறு வயதுடைய அந்தணர் ஒருவர் அமர்ந்திருந்தது போல் தெரிந்தது. இருளில் அவர் என் அமர்ந்திருக்கிறார் என்று அறிந்துகொள்ள டார்ச் லைட் வீசி பார்த்த போது, அவர் அதை விரும்பாமல் கோயிலின் சுவர் நோக்கி சென்று மறைந்தார். திரும்ப பார்க்கும்போது அங்கு வெறும் லிங்கம் மட்டுமே இருந்தது. வெடவெடவென்று பயந்து நடுங்கிக் கொண்டு உங்களைப் பார்த்த போது உங்கள் முகமும் தீர்க்கமாக இருந்தது. இங்கு இப்படித்தான் என்று கூறிவிட்டு சென்றுவிட்டீர்கள்.

உங்கள் படைப்புகளில் மகுடமாகத் திகழும் உடையாரை நீங்கள் எழுதவில்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, நீங்களும் சோழர்களோடு வாழ்ந்திருக்கிறீர்கள். அவர்களோடு இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உண்மை.

இந்த பிரம்மாண்டமான வேலை செய்துவிட்டு நானா இதைச் செய்தேன் என்று குழந்தையைப் போர்னு வியந்த எளிமை உங்களுக்கு உங்கள் குரு யோகி ராம்சுரத்குமார் தந்த ஆசீர்வாதம்.

 

உயிரோடு கலந்திருக்கும் உடையார் வேலைக்கு நடுவில் நீங்கள் செய்யும் சினிமா வேலையையோ "வாழையடி வாழை" போன்ற சமூக நாவல்களையோ செய்யும்போது, உடையாரைப் பற்றி சுத்தமாக மறந்துவிட்டு, செய்யும் வேலையிலேயே முழுமையாக ஈடுபடும் உங்கள் சிரத்தை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

 

ஒரு உன்னத கலைஞனின் உயர்ந்த படைப்பைப் படைக்கும் விதத்தைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்

சம்பத்லக்ஷ்மி. 

ஆசிரியர் குறித்து: பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும் கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.
More Information
SKU Code TMN B 102
Weight in Kg 0.210000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம் Thirumagal Nilayam
Write Your Own Review
You're reviewing:உடையார் நான்காம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 4 -Balakumaran - Udayaar

Similar Category Products